ராகுகேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பிதுர்சாபம், களத்திரதோஷம் நீங்க இங்கு வழிபட்டுச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து ராகுகேது தோஷ பரிகார பூஜைகள் நடக்கின்றன.
தலபெருமை:
பெரியவர் திருப்பணி: காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரிக்கரையில் புதர்மண்டிக்கிடந்தது. அப்பகுதி மக்கள் ஒரு அரசமரத்தின் அடியில் சிவலிங்கம் புதைந்து கிடப்பதைக் கண்டனர். 16 பட்டைகளுடன் அந்த ÷க்ஷõடச லிங்கத்தை காஞ்சிப் பெரியவரின் வழிகாட்டுதலின்படி வழிபட்டனர். ராகுகேது இருவராலும் வழிபாடு செய்யப்பட்ட சுயம்புமூர்த்தி என்றும், சிவலிங்கமேடு என்று அழைக்கப்பட்ட பகுதியே செவிலிமேடு என்றானதாகவும் தெரிய வந்தது. இந்தக் கோயிலை லிங்க குட்டை என்று அழைப்பர்.
தல வரலாறு:
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அதில் கிடைத்த அமிர்தத்தை விஷ்ணு, மோகினி கோலத்தில் எழுந்தருளி, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பங்கிட்டு வழங்க முன் வந்தார். தேவர்களும், அசுரர்களும் ஆளுக்கொரு வரிசையாக அமர்ந்தனர். ஸ்வர்பானு என்ற அசுரன் அமிர்தம் பெறும் ஆசையில், தன் உருவத்தை தேவரைப் போல மாற்றிக் கொண்டு சூரிய சந்திரர் இருவருக்கும் நடுவில் அமர்ந்து அமிர்தம் பருகி விட்டான். இதனை சூரிய சந்திரர் கண்டுபடித்து விட்டனர். விஷ்ணுவிடம்புகார் கூறினார். அவர் அசுரனின் தலையை வெட்டினார். தலை வேறு,உடல் வேறானாலும் அமிர்தம் பருகி விட்டதால், அவன் உயிர் இழக்கவில்லை. வெட்டுப்பட்ட தலைக்கு கீழே பாம்பு போல அவனுக்கு ஒரு உடல் ஏற்பட்டது. உடலுக்கு மேலே ஐந்துதலை பாம்பு முகம் ஏற்பட்டது. மேல்பகுதி ராகு, கீழ்பகுதி கேது என்று பெயர் பெற்றது. ராகு, கேது இருவரும் காஞ்சிபுரத்தை அடைந்தனர். அங்கு சுயம்பு மூர்த்தியான கைலாசநாதரைக் கண்டு மகிழ்ந்தனர். ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டனர். சிவன் அவர்களை மன்னித்ததுடன் நவக்கிரக பதவியையும் அருளினார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலவர் கைலாசநாதர் மேற்குநோக்கி அருள்பாலிப்பதும், உத்தர, தட்சிண சுயம்புலிங்கங்கள் அமைந்துள்ளதும் சிறப்பு.