சின்ன கருப்பு, பெரிய கருப்பு, பேச்சியம்மன், சோணைச்சு வாமி, முத்து இருளப்பசுவாமி, லாட சன்னியாசி, சங்கிலி கருப்பு, சப்த கன்னிமார், விநாயகர், சுப்பிரமணியர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். கோயில் வளாத்தில் குதிரையில் சாட்டையுடன் அய்யனார், அரிவாள்களுடன் குதிரைகளில் பெரிய கருப்பசாமி, சின்ன கருப்பசாமியும், யானைகளில் தண்டாயுதங்களுடன், முத்துக்கருப்பசாமி, சங்கிலி கருப்பசாமியும் எழுந்தருளியுள்ளனர். கோயில் முன்புறம் தனித்தனியாக அஷ்டலட்சுமி உருவங்கள், சிவகுடும்பம், மீனாட்சி திருக்கல்யாணம் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாளகரத்தில் பொற்கலை, பூரணையுடன் சிவபெருமான் உள்ளனர்.
பிரார்த்தனை
அய்யனாரிடம், வேண்டும் வரம் உடனே கிடைக்கிறது.
நேர்த்திக்கடன்:
சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
தலபெருமை:
அய்யனார் கோயில் கண்மாய் கரையில் அமைந்துள்ளது. மலையத்துவ பாண்டிய மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள அய்யனாருக்கு கரைச்சாமி என்ற பெயரும் உண்டு. கண்மாய் கரையில் எழுந்தருளியுள்ள அய்யனார், ஊரை காக்கும் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
தல வரலாறு:
சிவபெருமான், மோகினிக்கு ஈடாக ஆடியதால் ஈடாடி அய்யனார் என்ற பெயர் பெற்றார் என்று தல வரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மலையத்துவ பாண்டிய மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.