அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலம். பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 8:00 மணி முதல்10:00 மணி வரை, மாலை 5:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
உள்ளாவூர் கிராமம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் மாவட்டம். 631503.
போன்:
+91 9003856887
பொது தகவல்:
கோயிலுக்கு முன்னால் தாமரை தீரத்தம் அமைந்துள்ளது. கோயிலின் முகப்பில், சித்தி விநாயகர் வீற்றிருக்கிறார். மூலவர் விமானத்தில் பின்னால், சண்டிகேஸ்வரர் உள்ளார். மூலவர் சன்னதியின் இருபுறமும், துவரா பாலகர்கள், வலதுபுறத்தில் முருகபெருமான் 12 கைககளுடன் காட்சியளிக்கிறார்,இடது புறத்தில் அம்மன் சன்னதி அமைந்துள்ளது. மூலவருக்கு நேர் எதிரில் நந்தி பெருமான் காட்சியளிக்கிறார். நந்தியின் வலது புறத்தில், நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரார்த்தனை
திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
800 ஆண்டுகளுக்கு முன், பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. போரில், பல்லவர்களை வென்ற பாண்டியர்கள், தங்களது வெற்றியை குறிக்கும் வகையில், பல்வேறு இடங்களில் உள்ள சிவன் கோயில்களை புதுப்பித்து, தங்களது ஆட்சியை பறை சாட்டும் வகையில் அதில், மீன் சின்னங்களை பொறித்துள்ளனர். இதேபோல், இந்த கோயிலிலும் இந்த சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இறைவன் திருவடி பட்ட பூமி என்பதால், பல்வேறு கால நிலை மாற்றத்தால் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்திலும், கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், வறட்சி இன்றி நிலங்களில் விவசாயம் நடைபெறுகிறது.
தல வரலாறு:
அகத்தீஸ்வரர் இறைவனை நேரில் காண்பதற்காக, இங்கு அமர்ந்த நிலையில் தவம் புரிந்துள்ளார். இவருக்கு, சிவ பெருமான் நேரில் காட்யளித்து, வர அளித்ததாக வரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலம். பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.