இங்கு காலபைரவர், சரஸ்வதி, லட்சுமி சன்னதிகள் அமைந்துள்ளன.
பிரார்த்தனை
திருமண பாக்கியம், உடல் நலம் காக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
தலபெருமை:
இங்குள்ள மீனாட்சி அம்மன் கோயில் புராதன சிறப்பு மிக்கது.பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன. பிரதோஷ வழிபாட்டில் தொடர்ந்து 11 வாரங்கள் கலந்து கொள்ளும் கன்னிப்பெண்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கிறது. தட்சிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை வைத்து வழிபட செல்வம் பெருகும், உடல் நலம் காக்கப்படும். மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு தோஷம் விலகும். புத்திர பாக்கியம் கிடைக்கும், என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தல வரலாறு:
இக்கோயிலை, 12ம் நூற்றாண்டில் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த மன்னன் குலசேகரபாண்டியன் கட்டினார். இக்கோயில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலம் வரை பராமரிப்பில் இருந்தது. 600 ஆண்டுகளுக்கு முன் கோயில் அருகில் உள்ள ஓடையில் மீனாட்சி அம்மன் கற்சிலை கண்டெக்கப்பட்டது. அதை எடுத்து கோயிலில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.பின், 1989 ஏப்.,10ல் கும்பாபிஷேகம் நடந்தது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இக்கோயில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது.