மாசி மாதம் மகா சிவராத்திரி, புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழிமாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள், பஜனைகள் நடக்கிறது. பங்குனி உத்திர தினத்தன்று பெருமாளுக்கு திருக்கல்யாணம் விழா நடக்கும்.
தல சிறப்பு:
கருப்பண சுவாமி சங்கு சக்கரம், நாமத்துடன் அருள்பாலிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில்
எஸ்.ஆர்.வி.,நகர், திருப்பரங்குன்றம், மதுரை.
போன்:
+91 98425 08447
பொது தகவல்:
இக்கோயில் மூலஸ்தானத்தில் மூன்றரைஅடி உயரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். முகப்பில் துவார பாலகர்கள், மூலவர் சன்னதி எதிரே கருடாழ்வார், வளாகத்தில் ஆஞ்சநேயர், தும்பிக்கையாழ்வார்(விநாயகர்), நவக்கிரகங்கள், நாகம்மாள், கருப்பணசுவாமி, விஷ்ணு துர்க்கை, வீரசின்னம்மாள், முத்தம்மாள் பேரட்டாள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர்.
பிரார்த்தனை
திருமண தடைகள் நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, படிப்பில் மந்தமாக உள்ளவர்கள் சிறந்த கல்விச் செல்வம் பெற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
வளாகத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமி சங்கு சக்கரம், நாமத்துடன் அருள்பாலிக்கிறார். வெள்ளிக்கிழமைகளில் ராகுகாலத்தில் விஷ்ணு துர்க்கைக்கு அரளிமாலை, எலுமிச்சம்பழம் மாலை அணிவிப்பவர்களுக்கு, காரியத்தடைகள் நீங்கி வேண்டிய வரம் கிடைக்கும், என்பது ஐதீகம். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துப்படி இங்கு சிறப்பு. கோயிலில் மூலவர்கள் கிடையாது. 27 அடி உயர கொடிமரம் உண்டு. மகாலட்சுமிதாயாருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு:
மருமகன் முருகன் திருப்பரங்குன்றத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். அவருக்கு அருகிலேயே மாமன் பெருமாளும் திருப்பரங்குன்றத்தில் தனி கோயிலில் அருளுகிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கருப்பண சுவாமி சங்கு சக்கரம், நாமத்துடன் அருள்பாலிப்பது சிறப்பு.