இங்கு வெட்ட வெளியில் பெரிய சேமகுதிரைகள் அமைக்கப்பட்டுள்ளன. நல்லி அய்யனார், கன்னிமார், சிவன், பைரவருக்கு தனி சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
குழந்தை வேண்டி நல்லி அய்யனார் கோயிலில் தொட்டில் கட்டினால், மைமேல் பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் நல்லிச்சாமி என்றும், பெண்ணாக இருந்தால் நல்லியம்மாள் என்றும் பெயர் வைத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இப்பகுதியில் எந்த நல்ல விஷயத்திற்கும் முதல் பத்திரிக்கை இங்குதான். குழந்தை இல்லாதவர் இங்கு கூகமுத்தி மரத்தில் தொட்டில் கட்டி வேண்டினால் பலன் கிடைக்கும். இப்பகுதியில் பெரும்பாலும் நல்லுச்சாமி, நல்லு, நல்லம்மை, நல்லம்மாள் என பெயர் வைப்பர்.
தல வரலாறு:
சருகுவலையபட்டி ஊராட்சி நல்லிகுளம் அருகில் காட்டு பகுதியில் இக்கோயில் அமைந்திருந்தாலும், பராமரிப்பது கீழவளவு மக்கள் தான். கீழவளவு, வாச்சாம்பட்டி, அம்மன் கோயில்பட்டி, கம்பர்மலைபட்டி, சருகு வலையபட்டி, வெள்ளலுலுர், என பல கிராம மக்களுக்கு நல்லி அய்யனார் குல தெய்வம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இந்த ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்லு, நல்லம்மாள் என்று அய்யனார் பெயரில் சூட்டுவதே இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.