பங்குனி உத்திர திருவிழா, வைகாசி கடைசி வெள்ளி, முப்பழபூஜை திருவிழா, திருக்கார்த்திகை திருவிழா, தைபூசத் திருவிழா
தல சிறப்பு:
மேற்கு பார்த்த திருக்கோவிலில், முருகனும் மேற்கு பார்த்தபடி அருள்பாலிப்பது சிறப்பு. இங்கு குமரக்கடவுள் என்ற சுப்பிரமணிய சுவாமி சுயம்பு மூர்த்தியாக சுமார் ஆறு அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். சுவாமிக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது திங்கள், வெள்ளி, ஆகிய இரு நாட்களில் மட்டும் தான் அபிஷேகம் மற்றும் பூஜை.இரவில் மட்டுமே அபிஷேகம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இரவு 10 மணி வரை. அபிஷேக காலங்களில் இரவு முழுவதும் கோவில் திறந்து இருக்கும்.
முகவரி:
அருள்மிகு குமரக்கடவுள் என்ற சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், மேலக் கொடுமலூர்.
அபிராம், இராமநாதபுரம் -623601
போன்:
+91 9843430230
பொது தகவல்:
இத்திருக்கோவில் திருச்செந்தூர் சூர சம்ஹாரத்துடன் தொடர்பு கொண்டமையால் இது யுகங்களுக்கு முற்ப்பட்ட காலமாக கணக்கிடப்படுகிறது.
பிரார்த்தனை
இந்த குமரக் கடவுளை வேண்டுவோர்க்கு, வேண்டியவையெல்லாம் கிடைக்கப் பெறுகிறது. இது அனுபவ பூர்வமான உண்மை. திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகின்றது. குழந்தை இல்லாத தம்பதியினருக்கு விரைவில் குழந்தை செல்வம் கிடைக்கின்றது. கை, கால் மற்றும் தீராத நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு குணமாகின்றது. சத்ரு சம்ஹார மூர்த்தியாக அருள் பாலிப்பதால் எதிரி பயம் நீங்குகின்றது.
நேர்த்திக்கடன்:
ஸ்கந்த ஹோமம், சண்முகா அர்ச்சனை, சத்ரு சம்ஹார அர்ச்சனை. 33 அபிஷேகம் இங்கு சிறப்பாக நடத்தப்படும்
தலபெருமை:
இத்திருக்கோவிலின் ஸ்தல விருட்சம் உடை மரம் ஆகும். இம்மரத்தின் விஷேசம் என்னவெனில், இம்மரம் முருப்பெருமானால் பல் துலக்கி எறியப்பட்ட குச்சியாகும். இம்மரத்திற்கு வேர் கிடையாது. ஒரு குடைபோல் காட்சியளிக்கும். பூ பூக்கும், காய்காய்க்கும், அதன் நெத்துகள் கீழே-விழும் ஆனால் திரும்ப முளைப்பது இல்லை. இதன் இலையை பிரசாதமாக பறித்து உண்டால் தீராத உடல் நலக்குறைவும் குணமாகும் என்பது சிறப்பு.
சுவாமிக்கு அன்ன நைவேத்தியம் இல்லை, கைக்குத்தல் அரிசி, பாசி பருப்பு, வெல்லம் மற்றும் தினைமாவு தேன் இவை மட்டுமே நைவேத்தியம். குமரக்கடவுளுக்கு மாதா மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்திலே இரவு 33 அபிஷேகம் சிறப்பு.
தல வரலாறு:
சூரனையும் அவனது தம்பியையும் சம்ஹாரம் செய்வதற்கு குமரன் அன்னை பார்வதி தேவியிடம் மழு என்ற ஆயுதத்தை கொடு என்று கேட்டதாக ஐதீகம். ஆகையினால் இவ்வூர் கொடு மழுவூர் என்று அழைக்கப்பட்டது. பின்னாலில் இது கொடுமலூர் என்று அழைக்கப்படுகிறது.
திருச்செந்தூரிலே முருகன் சூர பதுமனை சம்ஹாரம் செய்து விட்டு அவனது தம்பியான பானு கோபனையும் சம்ஹாரம் செய்து அவனது தலையை வெட்டி கையில் எடுத்துக் கொண்டு நேராக மேலக் கொடுமலூர் வந்து இங்கு வாழ்ந்த ரிஷி, முனிவர்களுக்கு காட்சியளிக்கிறார். இங்கு முருகன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு முருகனின் திருப்பெயர் குமரக்கடவுள் என்ற சுப்பிரமணிய சுவாமி ஆகும். அருள் மிகு குமரக்கடவுள் சம்ஹார மூர்த்தியாக போர்க்கோலத்தில் நின்று பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மேற்கு பார்த்த திருக்கோவிலில், முருகனும் மேற்கு பார்த்தபடி அருள்பாலிப்பது சிறப்பு. இங்கு குமரக்கடவுள் என்ற சுப்பிரமணிய சுவாமி சுயம்பு மூர்த்தியாக சுமார் ஆறு அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். சுவாமிக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது திங்கள், வெள்ளி, ஆகிய இரு நாட்களில் மட்டும் தான் அபிஷேகம் மற்றும் பூஜை.இரவில் மட்டுமே அபிஷேகம்.
இருப்பிடம் : பரமக்குடி ஐந்து முக்கு ரோட்டில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் ரோட்டில் செல்ல வேண்டும். 2 கி.மீ., தூரம் சென்ற உடன், சமத்துவபுரம்(வலதுபுறம் இருக்கும்) ஓட்டி வலதுபுறம் ரோட்டில் திரும்பி நேராக சென்றால் மேலக்கொடுமலூர் வரும். பரமக்குடியில் இருந்து மேலக்கொடுமலூர் 22 கி.மீ., தூரம். அபிராமத்திலிருந்து 8 கிமீ.