சுயம்பு வடிவிலான அம்மன், தினசரி பூஜையின் போது அம்மன்மேல் சூரியஒளிபடுதல் சிறப்பம்சமாகும்.
திறக்கும் நேரம்:
காலை 4 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பால்மொழி அம்மன் திருக்கோயில்,
வீரன்குடிகாடு, வடக்குபொய்கைநல்லூர்.
தெற்கு பொய்கை நல்லூர் போஸ்ட்,
நாகப்பட்டினம்.
போன்:
+91 4365 295050, 98651 92046, 95976 11505
பொது தகவல்:
ஐந்து கோபுரங்களுடன் கிழக்கு முகமாக அமைந்துள்ளது.கோயில் நுழைவாயிலில் காவல் தெய்வங்களான பதினெட்டாம்படி கருப்பு, சங்கிலி கருப்பு, ஈசான கணபதி, வன்னி கணபதி, வலம்புரி விநாயகர், இடது ஓரத்தில் தண்ணீரில் இருக்கும் கடற்கன்னி, கடல்ராஜா, சலவைக்கல்லால் ஆன 9 அடி உயர ஷீரடி சாய்பாபா சன்னதி, நவக்கிரகங்கள், தனி சன்னதியில் இரண்டு கருவறைகளுடன் பால்மொழி அம்மன்சன்னதி இச்சிமரத்தின் வேர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சன்னதியை சுற்றி 18 சித்தர்கள் தண்ணீரில் தாமரை மலரில் அமர்ந்து தியானம் செய்தல், சன்னதிக்கு வலது புறத்தில் நல்லூர் நாதர், வரதராஜப் பெருமாள் தாயார்களுடன் தனி தனி சன்னதி, வடகிழக்கில் மேற்கில் 6 குரங்குகள் சமாதியடைந்த இடத்தில் பாலவீர ஆஞ்சநேயர் தனி சன்னதி, நல்லூர் நாதர் சன்னதியின் முன் நந்தீஸ்வரர் இரண்டு கால்களையும் மடக்கி நாக்கை உள்ளே இழுத்து தியானம் செய்வது போல் தத்ரூபம், மேற்புறத்தில் வலம்புரி விநாயகர், பாலமுருகன், ஒன்பது தலை நாகம் தனி தனி சன்னதி, சித்தர்கள் வாழும் புன்னிய பூமியாக பக்தர்களால் பூஜிக்கப்படுகிறது.
பிரார்த்தனை
அந்திசாயும் வேளையில் துவங்கி அதிகாலை வரை சித்தர்கள் முறையில் நடைபெறும் யாகபூஜையில் பங்கெடுத்தல் நினைத்தவை யாவும் நிறைவேறும் என்று பக்தர்கள் கூறுகின்றனர். மனநலம் பாதிப்புள்ளவர்கள், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், மற்றும் அனைத்துவித பிரார்த்தனைகள் நிவர்த்தியாக்குகின்ற தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபடுகிறார்கள்.
தலபெருமை:
அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்த இடத்தில் ஆதிகாலத்தில் சித்தர்கள் பாடசாலை அமைத்து மருத்துவம், மாந்தீரிகம் மற்றும் சித்து வேலை செய்து உள்ளனர். இதனால் கோயில் அமைந்துள்ள பகுதியில் உள்ள மண், தண்ணீர், காற்று மருத்துவ தன்மை வாய்ந்ததாகவும், இன்றும் இப்பகுதியில் சித்தர்கள் பல வடிவங்களில் வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது. பெண் சாபம் பெற்ற இந்திரன் இங்குள்ள பொய்கையில் நீராடிசாபம் விமோசனம் பெற்றதாக ஐதீகம். இக்கோயிலில் சிவப்பெருமானையும்,பெருமாளையும் ஒருசேர தரிசிக்கலாம். அம்மனுக்கு இருகருவறைகள். இக்கோயிலில் தங்கியுள்ள 100 கணக்கான சாதுக்கள் மற்றும் பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
தல வரலாறு:
தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் வழிப்பட்ட தலம். பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் இயற்கை சீற்றத்தால் சிதிலமடைந்துள்ளது. இக்கோயிலின் கருவறை மட்டும் தல விருட்சமான இச்சி மர வேர்களால் சூழப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் மண் முகடுகளால் மூடப்பட்டு, காட்டுப்பகுதியாக இருந்த இப்பகுதிக்கு வந்த திருமுருகன் என்ற சாது ஒருவர், இச்சி மரத்தின் நிழலில் நீண்ட நாட்களாக தங்கியுள்ளார். அடர்ந்த காட்டுப்பகுதியில் தனியாக பசியுடன் மயங்கி கிடந்த சாதுவுக்கு பெண் வடிவில் வந்தவர் பால் கொடுத்து மயக்கத்தை போக்கி, மண்மேட்டை தோண்டுமாறு கூறி மறைந்துள்ளார். சாதுவும் வெறும் கைகளாலேயே மண் முகட்டை தோண்டியப்போது, இச்சிமரத்தின் வேர்களுக்கிடையே அம்பாளின் கருவறையும், கருவறைக்குள் அம்பாளும் காட்சி கொடுத்துள்ளார். இன்றும் இச்சி மரத்தின் பாதுகாப்பில் அம்பாள் கருவறை உள்ளது.சாதுவின் முயற்சியால் தற்போது மிக பிரமாண்டமான கோயில் எழும்பியுள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சுயம்பு வடிவிலான அம்மன், தினசரி பூஜையின் போது அம்மன்மேல் சூரியஒளிபடுதல் சிறப்பம்சமாகும்.
இருப்பிடம் : நாகை-வேளாங்கண்ணி கடற்கரையோர சாலையில் நாகையில் இருந்து ஐந்து கி.மீ.,தூரத்தில் வீரன்குடிகாடு பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் மெயின்ரோட்டில் இருந்து வலது புறத்தில் 200 மீட்டர் தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி
தங்கும் வசதி : நாகப்பட்டினம்
சீ ஹார்ஸ் போன்: +91-4365-247 047, 247 686 பூம்புகார் லாட்ஜ், போன்:+91-4365 242138, 243039 வேளாங்கன்னி எம் ஜி எம் போன்: +91-4365-263 900 சீ கேட் போன்: +91-4365-263 910 கோல்டன் சென்ட் லாட்ஜ்: +91-4365-242432 வி.பி.என்.ஹோட்டல்: +91-4365-240678