ஆடி மாதம் 108 அடுப்பு வைத்து, கோயில் வளாகத்தில் பொங்கலிடும் திருவிழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஆடி 3வது வெள்ளி அன்று 108 அபிஷேகம் மற்றும் 108 பால் குடம், 108 பழம், 108 பொங்கல், 108 படையல் என அனைத்துமே அன்று 108 தான். பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக அதனை வினியோகம் செய்கின்றனர். பவுர்ணமி நாட்களில் இறைவியின் முன் மகா மண்டபத்தில் விசேஷ ஹோமம் நடத்தப்படுகிறது. வைகாசி மாத திருவிழாவின் பத்தாம் நாள் அன்னைக்கு மகா அபிஷேகம் நடைபெறும். அன்றைய தினம் பக்தர்கள் கரகம் எடுத்தல், அலகு காவடி, பால் குடம் சுமந்து வருதல், தீமிதி என வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். (ஐயப்பனுக்கு உத்திர நட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடு, உத்திராபதியாருக்கு மாசி மகம் அன்று சிறப்பு அபிஷேகம்.)
தல சிறப்பு:
இங்குள்ள உத்திராபதியாரின் சன்னிதியில் சித்திரை மாதம் அமாவாசை அன்று சிறப்பு செய்யப்படுகிறது. அப்போது இறைவன் முன்பாக பொங்கல் வைப்பதும், படையல் போடுவதும் வழக்கமாக உள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காமாட்சி மகா மாரியம்மன் திருக்கோயில்,
சீர்காழி, தென்பாதி
நாகப்பட்டினம்.
போன்:
+91 +91- 9843680057, 9865556488, 9965640188
பொது தகவல்:
கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் கடந்தால் பரந்து விரிந்த பிராகாரம். எதிரே சூலம், கொடிமரம், தலவிருட்சமானவேம்பு அதன் கீழ் நாகர் திருமேனிகள் உள்ளன. விநாயகர், உத்திராபதியார்,பொம்மி சமேத காத்தவராயன், ஆரியமாலா, சின்னான், முனீஸ்வரர், கருப்பன்ன சாமி பேச்சியம்மன், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். கோ யிலின் முன்பு உள்ள வேப்ப மரத்தின் கீழே நாகர்கள் எழுந்தருலியுள்ளனர். பில்லி, சூனியம் விலக பேச்சியம்மனுக்கு படையலிட்டு வணங்குவது பக்தர்களின் வழக்கமாக உள்ளது. மேற்கு பிராகாரத்தில் ஒரு பெரிய நாகம் படம் எடுத்த நிலையில் இருக்க, அதன் நிழலில் சப்தகன்னியர் திருமேனிகள் உள்ளன . மாசி மகத்தின்போது சப்த கன்னியருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் உண்டு. ஐயப்பன் சன்னிதி உள்ளது. பிராகாரத்தை அடுத்து மகாமண்டபமும் அர்த்த மண்டபமும் உள்ளன. கருவறையில் சாலைக்கரையாள் என்கிற காமாட்சி மகாமாரியம்மன் அமர்ந்த கோலத்தில், புன்முறுவல் தவழும் முகத்துடன், இருதிருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள்.
பிரார்த்தனை
குழந்தைப்பேறு வேண்டி தங்கள் குறைகளைச் சொல்லி அன்னையிடம் வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் அதிகம் வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல் பலித்ததும் அன்னைக்கு புடவை சாத்தி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர்.
தலபெருமை:
குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் அந்த படையல் உணவை மடியேந்தி பெற்று, அங்கேயே அமர்ந்து சாப்பிடுகின்றனர். இதனால் அவர்களின் குறை நீங்கி, குழந்தை பாக்யம் கிடைப்பதுஉறுதி என்கின்றனர்.
தல வரலாறு:
கார்த்ததவீர்யார்ஜுனன் ஆயிரம் கைகளையும், அதீத தேஜசும், சூரியனுக்கு சமமான ஆற்றலும் கொண்டவன். இலங்கை வேந்தனான ராவணனையே சிறை வைத்தவன். திரிஷிதர் என்ற முனிவரை வழிபட்டு, அவரது அருளால் அக்னி பகவானைத் தன்அஸ்திரமாகப் பெற்றவன். ஒருசமயம் அவன், தன்னை அன்போடு உபசரித்தஜமதக்னி முனிவரிடம் இருந்த தெய்வப் பசுவான காமதேனுவை கைப்பற்ற முயற்சி செய்தான். முனிவர்அதைத் தடுக்க, அவரது தலையை வெட்டி வீசினான். தடுக்க வந்த முனிவரின் மகன்களையும் தாக்கி வீழ்த்தினான். தெய்வீகப் பசுவையும் கதறக்கதற இழுத்துச் சென்றான். வெளியே சென்றிருந்த முனிவரின் மகன் பரசுராமன், திரும்ப வந்தான். அனைத்தையும் அறிந்தான். தன் தந்தையைக் கொன்ற கார்த்தவீரியன் உள்பட இருபத்தேழு தலைமுறை க்ஷத்ரியர்களைஅழிப்பேன் என்று சபதம்பூண்டு, அதன்படியே அனைவரையும் தன் கோடரியால் வெட்டி வீழ்த்தினான். இறந்து போன ஜமதக்னி முனிவரின் உடலை எரியூட்டியபோது அவரது மனைவி ரேணுகாதேவியும் உடன் கட்டை ஏறினாள். தீயில் எரிந்து கொண்டிருந்த ரேணுகா தேவியைக் கண்ட சிவபெருமான், மழையைப் பொழியச் செய்தார். தீ அணைந்தது. ரேணுகாதேவி மரணத்தின் பிடியிலிருந்து விடுபட்டாள். அங்கே தோன்றிய சிவபெருமான் ரேணுகாதேவியிடம், நீ, சாதாரண மானிடப் பெண்ணல்ல. என் தேவியின் ஓர் அம்சமானவள். இந்த மண்ணுலக மக்கள் உன்னையும் உன் மகிமையையும் உணர்ந்து கொள்ள நடந்த விளையாட்டு இது. இனி நீ பூவுலகிலேயே இருந்து மக்களுக்கு அருள்வாயாக. தீக்காயத்தினால் உடல் முழுக்க கொப்புளங்கள் ஏற்பட்டதாலும், உன் பொருட்டு நான் மழையைப் பெய்யச் செய்ததாலும் நீ மாரியம்ம ன் என்ற பெயரோடு தெய்வமாகத் திகழ்ந்து மக்களை காப்பாயாக எனக்கூறி மறைந்தார். மகேசனே சொன்ன வண்ணம், மகாசக்தியின் அம்சமான மாரியம்மன் மண்ணுலகில் பலப்பல இடங்களில் கோயில்கொண்டாள். அற்புத ஆற்றல் படைத்த மாரியம்மனுக்கு சீர்காழிக்கு தெற்கே தென்பாதி என்றபகுதியில் ஓர் அழகிய கோயில் உள்ளது. அருளும் தலத்துக்கு ஏற்ப திருப்பெயரில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு மாரி அம்மனுக்கு. அந்த வகையில் நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் பிரசித்தி பெற்ற சாலைக்கரையாள் காமாட்சி மாரியம்மன் கோயில் உள்ளது இங்கே சாலைக்கரையாள் காமாட்சி மகாமாரியம்மன் என்ற பெயரோடு அருள்கிறாள் இறைவி.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள உத்திராபதியாரின் சன்னிதியில் சித்திரை மாதம் அமாவாசை அன்று சிறப்பு செய்யப்படுகிறது. அப்போது இறைவன் முன்பாக பொங்கல் வைப்பதும், படையல் போடுவதும் வழக்கமாக உள்ளது.
இருப்பிடம் : நாகை மாவட்டத்தில் சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்து சாலையில் அரை கி.மீ. தொலைவில் தென் பாதியில் இந்த கோயில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி : சீர்காழி
ஹோட்டல் சம்பூர்ணா போன்: +91-4364-273 422 ஹோட்டல் சோழா இன் போன்: +91-4364- 273 800 எம் ஏ எல் லாட்ஜ் போன்: +91-4364-270 799