Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கருமாரி அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கருமாரி அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கருமாரி அம்மன்
  அம்மன்/தாயார்: கருமாரி அம்மன்
  ஊர்: பழங்காநத்தம், மதுரை
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடி முதல்வெள்ளி காப்புக் கட்டுதல், ஆடி 2ம் வெள்ளி திருவிழா, பவுணர்மி பூஜை, நவராத்திரி பூஜை  
     
 தல சிறப்பு:
     
  குழந்தைபேறு இல்லாத பெண்கள் அம்மனை வணங்கி, இங்குள்ள பிள்ளைக்கல்லை (பிள்ளை லிங்கம்) மடியில் கட்டிக் கொண்டு, அம்மனை ஏழு முறை சுற்றி வருகிறார்கள். ஒவ்வொரு சுற்றுக்கும் கல்லின் கனம் கூடும் அதிசயமும் நடக்கிறது. கருப்பு, வெள்ளை, பச்சை என கல்லின் நிறமும் மாறுவதாக பக்தர்கள் பரவசமுடன் கூறுகின்றனர். இந்த கல் கங்கோத்ரியில் இருந்து எடுத்து வரப்பட்டதாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கருமாரி அம்மன் திருக்கோயில் திருவள்ளுவர் நகர் 9வது தெரு, இருளப்பசுவாமி கோயில் அருகி்ல் பழங்காநத்தம், மதுரை 625003  
   
போன்:
   
  +91 97872 99966 
    
 பொது தகவல்:
     
  கருவறையை சுற்றி முத்தாரம்மன், இசக்கி, மாசாணியம்மன், பிரத்தியங்கரா, பத்ரகாளி, வக்ரகாளி, தில்லைக்காளி ஆகியோருக்கு பலிபீடம் உள்ளது. ஈசான்ய மூலையில் காசி விஸ்வநாதர் உள்ளார்.
 
     
 
பிரார்த்தனை
    
  பவுணர்மியன்று சிறப்பு பூஜை நடக்கிறது. அன்று குழந்தைபேறு இல்லாத பெண்கள் அம்மனை வணங்கி, இங்குள்ள பிள்ளைக்கல்லை (பிள்ளை லிங்கம்) மடியில் கட்டிக் கொண்டு, அம்மனை ஏழு முறை சுற்றி, மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வேப்பமரத்தில் மஞ்சள் கயிறு கட்டி, ஏழு பவுணர்மிக்கு தொடர்ந்து விளக்கேற்ற திருமணத்தடை நீங்கும். கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் நடக்க வளையல் கட்டி வழிபடுகின்றனர். இங்குள்ள கண்ணகியம்மனை வணங்கினால் அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றுகின்றனர். 
    
  தல வரலாறு:
     
  காவிரிபூம்பட்டினத்தில் இருந்து கோவலனும், கண்ணகியும் மதுரைக்கு வந்தனர். மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனால் கோவலன் கள்வன் என பழி சுமத்தப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு இறந்தான். தன் கணவர் கள்வன் அல்ல என நீதியை நிலைநாட்ட சூளுரைத்தாள் கண்ணகி. அவள் காளியாக கருமாரியாக உருமாறியதன் அடிப்படையில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு வீற்றிருக்கும் கருமாரியம்மன் சிலை ஆறரை அடி உயரத்தில் உள்ளது. ஐந்து தலைநாகம் குடைபிடிக்க, புன்சிரிப்புடன், உடுக்கை, திரிசூலம், கத்தி, பொற்கிண்ணத்துடன் காட்சியளிக்கிறாள் அம்மன். அருகில் பார்த்தால் லட்சுமியாகவும், பலிபீடத்தில் இருந்து பார்த்தால் சாந்த சரஸ்வதியாகவும், தொலைவில் இருந்து பார்த்தால் உக்கிர காளியாகவும் காட்சி தருகிறாள். இங்குள்ள காசி விஸ்வநாதர் கங்கோத்ரியில் 45 நாட்கள் தவம் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. கண்ணகியின் வாழ்க்கை வரலாறு சுதை சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: குழந்தைபேறு இல்லாத பெண்கள் அம்மனை வணங்கி, இங்குள்ள பிள்ளைக்கல்லை (பிள்ளை லிங்கம்) மடியில் கட்டிக் கொண்டு, அம்மனை ஏழு முறை சுற்றி வருகிறார்கள். ஒவ்வொரு சுற்றுக்கும் கல்லின் கனம் கூடும் அதிசயமும் நடக்கிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar