|
அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
தேவாதிராஜன், ஆமருவியப்பன் கோயில் |
|
உற்சவர் | : |
ஆமருவியப்பன் |
|
அம்மன்/தாயார் | : |
செங்கமலவல்லி |
|
தீர்த்தம் | : |
தர்சன புஷ்கரிணி, காவிரி |
|
புராண பெயர் | : |
திருவழுந்தூர் |
|
ஊர் | : |
தேரழுந்தூர் |
|
மாவட்டம் | : |
நாகப்பட்டினம்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
| | | | காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு தேவாதிராஜன் கோயில்,
தேரழுந்தூர்-609 808,
மயிலாடுதுறை தாலுகா,
நாகப்பட்டினம் மாவட்டம் |
|
| | |
|
போன்: | | | | | |
+91- 4364-237 952. | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
மூலவர் தேவராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் ஆனவர். மூலஸ்தானத்தில் பார்வதி பசு ரூபத்தில் உள்ளார். மார்க்கண்டேய முனிவர் பிறவா வரம் பெற, ஆமருவியப்பனை வணங்கினார். இதனால் இவரை ஆமருவியப்பன் தன் அருகிலேயே வைத்துக்கொண்டார். பக்த பிரகலாதனும் மூலஸ்தானத்தில் உள்ளார். மூலஸ்தானத்தில் உற்சவர், தாயார் மூவரும் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். மூலவரின் மேல் உள்ள விமானம் கருட விமானம். தர்மதேவதை, உபரிசரவசு, காவிரி, கருடன், அகத்தியர் ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். |
|
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
ஒரு முறை பெருமாளும் சிவனும் சொக்கட்டான் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பார்வதி ஆட்டத்தின் நடுவராக இருந்தாள். காய் உருட்டும் போது குழப்பம் வந்தது. நடுவராக இருந்த பார்வதி பெருமாளுக்கு சாதகமாக கூற, சிவனுக்கு கோபம் வந்து பசுவாக மாறும் படி சாபமிட்டார். பார்வதி பசுவாக மாறியவுடன், துணைக்கு சரஸ்வதியும், லட்சுமியும் பசுவாக மாறி பூமிக்கு வந்தார்கள். இவர்களை மேய்ப்பவராக பெருமாள் "ஆ'மருவியப்பன் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் ஆட்சிசெய்கிறார். |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
மூலவர் தேவராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் ஆனவர். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|