Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நரசிங்கப்பெருமாள்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
  தல விருட்சம்: முக்கனி விருட்சம்
  தீர்த்தம்: வைகை
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்
  புராண பெயர்: தோழியம்மாள்புரம்
  ஊர்: மன்னாடிமங்கலம்
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகுண்ட ஏகாதசி, தனுர்மாத பூஜை, திருக்கார்த்திகை தீபம்.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தில் உள்ள நரசிங்கர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். மூலவரின் திருநாமம் நரசிங்க பெருமாளாக இருந்தாலும், முகம் நரசிம்மருக்கு உரியதைப்போல் இல்லாமல் பெருமாளைப்போல தோற்றமளிக்கிறார். மண்டபத்தின் மேல்பகுதியில் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் உணர்த்தும் விதமாக ஒரே சிலையில் வடிவமைக் கப்பட்டுள்ளதும், முன்புறம் யானையும், சிங்கமும் தவம் செய்யும் கோலத்தில் "கஜகேசரி'யாக உள்ளதையும் காண கண்கோடி வேண்டும்.  
     
திறக்கும் நேரம்:
    
 வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டும் காலை 8 - 10, மாலை 5 - 7 மணி வரையில் நடை திறந்திருக்கும். பிற நாட்களில் அர்ச்சகர் சீனிவாச ராகவனிடம் தொடர்பு கொண்டு(+91-4543 - 253 254, 253 757) செல்வது நல்லது. 
   
முகவரி:
   
  அருள்மிகு நரசிங்கப்பெருமாள் சுவாமி திருக்கோயில், மன்னாடிமங்கலம்-625 207, சோழவந்தான் வழி, மதுரை மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4543 - 253 254, 253 757 
    
 பொது தகவல்:
     
 

வளாகத்தில் மா, பலா, வாழை ஆகிய முக்கனி மரங்கள் தலவிருட்சங்களாக உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூரில் காட்சி தருவதைப்போலவே, இங்குள்ள ஆண்டாள், முன்புறம் துளசிமாடம், பின்புறம் தீர்த்தத்தொட்டி அமைந்திருக்க மத்தியில் அருளுகிறாள்.வலம்புரி விநாயகர், நம்மாழ்வார், நாகர், சந்தான கோபால கிருஷ்ணன், துர்க்கை ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர்.






 
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை நீங்க, புத்திரபாக்கியம் கிடைக்க, நல்ல இல்வாழ்வுஅமைய,செவ்வாய்தோஷம் நீங்க வேண்டிக்கொள்ளலாம். 
    
நேர்த்திக்கடன்:
    
  நரசிம்மருக்கு பட்டு வஸ்திரங்கள் சாத்தி, திருமஞ்சனம் செய்து திருவாபரணங்கள் செலுத்தலாம். 
    
 தலபெருமை:
     
  துவாரபாலகர்கள்: மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தைக் காண ஆஞ்சநேயர் விரும்பியதால் அவருக்கு சோளிங்கபுரத்திலும், கருடனின் விருப்பத்தால் அவருக்கு அகோபிலத்திலும் காட்சி தந்து அருளினார். எனவே இங்கு இவ்விருவரும் மகாமண்டபத்தில் துவாரபாலகர்களாக காட்சி தருகின்றர்.கொடிமரம், விமானம் இல்லை.

செவ்வாய் தோஷம் நீக்கும் நரசிங்கர்: மகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரமும், நவக்கிரகங்களை ஒத்துள்ளன. எனவே, நவக்கிரகங்களை வணங்கி பெறும் பலன்களை, விஷ்ணுவின் அவதாரங்களை வணங்கிபெறலாம். அவ்வகையில் இங்குள்ள நரசிம்மர், செவ்வாய் கிரகத்தை ஒத்துள்ளார். எனவே, இவரை வணங்கினால் செவ்வாய் தோஷம் நீங்கி, தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.

 
     
  தல வரலாறு:
     
  சிவனை நோக்கி தவம் செய்த இரணியன், தேவர், அரக்கர், மனிதர், விலங்குகள், பறவைகள் மற்றும் ஆயுதங்களால் தான் கொல்லப்படக்கூடாது என்ற வரம் பெற்றான். அனைவரையும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த அவன் தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்றான். ஆனால், அவனது மகனாகப்பிறந்த பிரகலாதன், தந்தையை வணங்காமல் நாராயணனை வணங்கி வந்தான். கோபம்கொண்ட இரணியன், மகனை துன்புறுத்தி அவன் வணங்கும் நாராயணனை காட்டும் படி கூறினான். அது பகல் நேரம் முடிந்து இரவு நேரம் தொடங்கும் அந்திக்காலம். அப்போது, தூணிலிருந்து சிங்க முகமும், மனித உடலும் கொண்ட உருவில் தோன்றிய மகாவிஷ்ணு, இரணியனை அழித்தார். இவரே, இத்தலத்தின் மூலவராக இருந்து அருளுகிறார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் உள்ள நரசிங்கர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். மூலவரின் திருநாமம் நரசிங்க பெருமாளாக இருந்தாலும், முகம் நரசிம்மருக்கு உரியதைப்போல் இல்லாமல் பெருமாளைப்போல தோற்றமளிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar