மாத பவுர்ணமி, நவராத்திரி, மீனாட்சி திருக்கல்யாணம், சிவராத்திரி, ஆடிபவுர்ணமி, மாசி பவுர்ணமி தினங்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
தல சிறப்பு:
25 வருடங்களுக்கு முன் சிறிதாக மஞ்சளில் பிடித்து வைக்கப்பட்ட அம்பிகை போன்ற உருவம் தற்போது ஒன்றரை அடி உயரமாக வளர்ந்துள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில்,
29,30 பிரிதம் தெரு, துரைசாமி , பைபாஸ் ரோடு, மதுரை -625 016.
போன்:
+91 452 2380797, 94433 02523
பொது தகவல்:
செல்வத்திற்கு மகாலட்சுமியையும், கல்விக்கு பராசக்தியையும் வழிபட வேண்டும் என புராணங்கள் கூறுகிறது. இந்த மூன்றும் இருந்தால் தான் ஒரு மனிதன் முழு மனிதன் ஆகிறான். இந்த மூன்று சக்திகளும் ஒன்றாக இணைந்து மதுரை பைபாஸ் ரோடு வானமாமலை நகரில் மகா மாரியம்மன் என்ற ஸ்ரீ (லட்சுமி) வித்யா (சரஸ்வதி) பரமேஸ்வரி (துர்க்கை) அருள்பாலிக்கிறாள்.
மரணத்தை எதிர்த்து உயிர் நடத்துகிற போர், சோம்பலை எதிர்த்து மனது நடத்துகிற போர், வறுமையை எதிர்த்து வாழ்க்கை நடத்துகிற போர். அறியாமையை எதிர்த்து அறிவு நடத்துகிற போர் அனைத்திலும் சக்தி இருந்தால் தான் ஜெயிக்க முடியும். எல்லைக்கு உட்பட்டது நம் ஜீவசக்தி.
எல்லையே இல்லாதது பராசக்தி. இந்த பராசக்தியாகிய ஸ்ரீ வித்யாபரமேஸ்வரியை வழிபட்டால் "எங்கும் வெற்றி", எதிலும் வெற்றி' அடைந்து பராசக்தி பக்தன் பாரதியின் வாக்கை மெய்யாக்கி விடலாம்.
பிரார்த்தனை
சர்ப்பதோஷம் உள்ளவர்கள் இங்கு அம்பாளுக்கு சர்ப்பதாலி சாற்றி வழிபட்டால் தோஷ நிவர்த்தி கிடைக்கும் என்பதும், திருமணத்தடை உள்ளவர்கள், புத்திரபாக்கியம் வேண்டுபவர்கள், வேறு தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
படிப்பில் மந்தம், தேர்வில் தோல்வி, வித்தைகளில் விரக்தி அடைந்தவர்கள் ஸ்ரீ வித்யா பரமேஸ்வரியை வழிபட்டு பலனடையலாம்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபாடுசெய்கின்றனர்.
தலபெருமை:
செல்வத்திற்கு மகாலட்சுமியையும், கல்விக்கு பராசக்தியையும் வழிபட வேண்டும் என புராணங்கள் கூறுகிறது. இந்த மூன்றும் இருந்தால் தான் ஒரு மனிதன் முழு மனிதன் ஆகிறான். இந்த மூன்று சக்திகளும் ஒன்றாக இணைந்து மதுரை பைபாஸ் ரோடு வானமாமலை நகரில் மகா மாரியம்மன் என்ற ஸ்ரீ (லட்சுமி) வித்யா (சரஸ்வதி) பரமேஸ்வரி (துர்க்கை) அருள்பாலிக்கிறாள்.
மரணத்தை எதிர்த்து உயிர் நடத்துகிற போர், சோம்பலை எதிர்த்து மனது நடத்துகிற போர், வறுமையை எதிர்த்து வாழ்க்கை நடத்துகிற போர். அறியாமையை எதிர்த்து அறிவு நடத்துகிற போர் அனைத்திலும் சக்தி இருந்தால் தான் ஜெயிக்க முடியும். எல்லைக்கு உட்பட்டது நம் ஜீவசக்தி.
எல்லையே இல்லாதது பராசக்தி. இந்த பராசக்தியாகிய ஸ்ரீ வித்யாபரமேஸ்வரியை வழிபட்டால் "எங்கும் வெற்றி", எதிலும் வெற்றி' அடைந்து பராசக்தி பக்தன் பாரதியின் வாக்கை மெய்யாக்கி விடலாம்.
தல வரலாறு:
""ஸ்ரீமத் ஆத்தா என்ற ஸ்ரீ வித்யானந்த பட்டாரகர் தான் முதலில் இத்தலத்தை ஸ்தாபித்து, அம்பாளையும் அதன் கீழ் ஸ்ரீசக்கரத்தையும் பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீ சக்கரத்தில் கடவுளர்கள், தேவர்கள், ரிஷிகள் என அனைவரும் உள்ளனர். அம்பாள் "இகபரசவுபாக்கியதாரிணி'யாக வீற்றிருக்கிறாள். நாம் இங்கு வந்து மனமுருகி பிரார்த்தனை செய்தாலே போதும் நமக்கு வேண்டியது அனைத்தும் கிடைக்கும்.
"ஹரித்ராம்பிகை' அம்மன் இங்கு மற்றுமொரு சிறப்பம்சம். 25 வருடங்களுக்கு முன் சிறிதாக மஞ்சளில் பிடித்து வைக்கப்பட்ட அம்பிகை தற்போது ஒன்றரை அடி உயரமாக வளர்ந்துள்ளாள். கோயில் மண்டபம் நாகர் வடிவில் அமைத்துள்ளதால், நம்பி வந்தவர்களுக்கு நன்மை கிடைக்கும். இங்கு தரப்படும் ஸ்ரீ சக்ர தீர்த்தத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. என பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.
தினமும் அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தாலும் அதை யாரும் பார்க்க முடியாது. ஆனால் பவுர்ணமிதோறும் மதியம் 2 முதல் மாலை 5 மணிவரை நடக்கும் அபிஷேகத்தை அனைவரும் பார்க்கலாம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:25 வருடங்களுக்கு முன் சிறிதாக மஞ்சளில் பிடித்து வைக்கப்பட்ட அம்பிகை போன்ற உருவம் தற்போது ஒன்றரை அடி உயரமாக வளர்ந்துள்ளது.
இருப்பிடம் : மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்தும் பைபாஸ் ரோடு வழியாக செல்லும் பஸ்சில் வானமாமலை நகர் ஸ்டாபில் இறங்கி துரைசாமி நகர் சென்றால் ஸ்ரீ வித்யா பரமேஸ்வரியை தரிசிக்கலாம்.