தாமரை பீடத்தில் காட்சி தரும் சுவாமி செம்மண் லிங்கமாக இருந்தாலும், அபிஷேகம் செய்யும்போது கரையாதிருப்பது கலியுக அதிசயம். இந்த லிங்கத்தில் ஏர்க்கால் பட்ட தடம் இருக்கிறது. லிங்கத்தின் மத்தியில் மற்றொரு லிங்கம் இருப்பதைப்போன்ற அமைப்பும் இருக்கிறது. இங்குள்ள பிரசவ நந்தி சிறப்பு பெற்றதாகும். இங்குள்ள அம்மனின் மறுபெயர் சுகப்பிரசவநாயகி.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு உடையீஸ்வரர் திருக்கோயில்,
இளநகர்- 603 402,
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:
+91- 44 - 2474 2282, 98409 55363
பொது தகவல்:
பிரகாரத்தில் விநாயகர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. சுவாமி சன்னதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை இருக்கின்றனர். இங்குள்ள விநாயகர் சித்தி விநாயகர்.
பிரார்த்தனை
புத்திர பாக்கியம் கிடைக்க, சுகப்பிரசவம் ஆக இங்கு வேண்டிக்கொள்ளலாம். இங்கு வேண்டிக்கொள்ள கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
தலபெருமை:
நந்தி சிறப்பு: இக்கோயிலில் திருப்பணி செய்தபோது, நந்தி சிலை ஒன்று கிடைத்தது. அதை கோயில் முன்பாக வைத்து விட்டனர். ஒருசமயம் நிறை மாத கர்ப்பிணி ஒருத்தி அம்பிகையை வழிபட வந்தாள். அவளுக்கு களைப்பாக இருக்கவே, இந்த நந்தியின் மீது தலை சாய்த்தாள். சிறிது நேரத்தில் நந்தி சிலை கொஞ்சம், கொஞ்சமாக நகரவே, அந்த பெண் தடுமாறி தரையில் சாய்ந்தாள். அப்போது அவளுக்கு சுகப்பிரசவமாகி ஒரு ஆண் குழந்தைபிறந்தது. அப்போதிருந்து இந்த நந்தி "சுகப்பிரசவ நந்தி' எனப்பட்டது. அம்பிகையும் "சுகப்பிரசவ நாயகி' என்று பெயர் பெற்றாள். சுகப்பிரசவம் ஆவதற்கு கர்ப்பிணிகள் இங்கு அம்பிகையை வழிபட்டு, பிரசவ நந்தி சிலையை சற்று தள்ளி வைத்து செல்கின்றனர். அவர்களுடன் துணைக்குச் செல்பவர்கள், நந்தியை மீண்டும் பழைய நிலையில் திரும்பவும் வைக்கின்றனர். இவ்வாறு செய்தால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:
பல்லாண்டுகளுக்கு முன்பு இங்கு வசித்த சிவபக்தர் ஒருவர் வயலில் உழுது கொண்டிருந்தபோது, ஏர்க்கால் ஓரிடத்தில் ஆழமாக பதிந்து நின்றுவிட்டது. எவ்வளவோ முயற்சித்தும் ஏர்க்காலை எடுக்க முடியவில்லை. அவர் அவ்விடத்தில் தோண்டியபோது செம்மண்ணாலான லிங்கம் இருந்ததைக் கண்டார். அங்கேயே சிவனுக்கு கோயில் எழுப்பி வழிபட்டார். உடை (ஏர்க்கால்) தடுத்து கிடைக்கப்பெற்ற மூர்த்தி என்பதால் இவருக்கு, "உடையீஸ்வரர்' என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்பிகை உடையாம்பிகைக்கும் (சுகப்பிரசவ நாயகி) சன்னதி கட்டப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:தாமரை பீடத்தில் காட்சி தரும் சுவாமி செம்மண் லிங்கமாக இருந்தாலும், அபிஷேகம் செய்யும்போது கரையாதிருப்பது கலியுக அதிசயம்.
இந்த லிங்கத்தில் ஏர்க்கால் பட்ட தடம் இருக்கிறது. லிங்கத்தின் மத்தியில் மற்றொரு லிங்கம் இருப்பதைப்போன்ற அமைப்பும் இருக்கிறது.
இருப்பிடம் : காஞ்சிபுரத்திலிருந்து மாங்கல்கூட்டு ரோடு வழியாக உத்திரமேரூர் செல்லும் பஸ்கள் இவ்வூர் வழியாக செல்கிறது.
இதுதவிர, காஞ்சிபுரத்தில் இருந்து திண்டிவனம் செல்லும் வழியில் 25 கி.மீ., தூரத்திலுள்ள பெருநகரில் இறங்கி அங்கிருந்து 2 கி.மீ., தூரம் ஆட்டோவில் சென்றாலும் கோயிலை அடையலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
செங்கல்பட்டு, சென்னை
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி : செங்கல்பட்டு
ஹோட்டல் தமிழ்நாடு +91-44-2722 2554, 2722 2553 பாபு சூரியா +91-44-2722 2555 ஜெயபாலா +91-44-2722 4348 ஹெரிடேஜ் +91-44-2722 7780 எம். எம். ஹோட்டல் +91-44-2723 0023 ஜி. ஆர். டி. +91-44-2722 5250