Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஜடாமகுட தீர்த்தஈஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஜடாமகுட தீர்த்தஈஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர்
  தீர்த்தம்: ஜடா மகுட தீர்த்தம்
  ஊர்: ராமேஸ்வரம்
  மாவட்டம்: ராமநாதபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சிவராத்திரி, மாசி மகம் ஆகியவை முக்கியமானவை. தினமும் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை 3 கால பூஜையுடன் சுவாமி தரிசனம் செய்யலாம்.  
     
 தல சிறப்பு:
     
  மகம் நட்சத்திரம் வரும் எல்லா நாட்களிலும் புண்ணிய தீர்த்தக்கரையான ராமேஸ்வரம் ஜடா மகுட தீர்த்தத்தில் நீராடினால், மகாமக குளத்தில் 12 மகாமகங்கள் நீராடிய பலன் கிட்டும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் திருக்கோயில், ராமேஸ்வரம் - 623 526, ராமநாதபுரம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-4573-221 223, 221 241 
    
 பொது தகவல்:
     
  இங்கு தீர்த்தமாடி லிங்க மூர்த்திகளை வழிபட்டுவர பிரம்மஹத்தி தோஷம் நீங்கி கோடி புண்ணியம் சேரும். மனம் தூய்மையடையும்.  
     
 
பிரார்த்தனை
    
  இங்கு தீர்த்தமாடி லிங்க மூர்த்திகளை வழிபட்டுவர பிரம்மஹத்தி தோஷம் நீங்கி கோடி புண்ணியம் சேரும். குழப்பமான மனநிலையில் உள்ளவர்களும், பிரச்சனைக்கு முடிவு எடுக்க முடியாமல் தவிப்பவர்கள், புத்திரபேறு கிடைக்க இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  சித்தர்களும், தேவதைகளும் அரூபமாக உலாவரும் இத்தலத்தில் வனபோஜனம் (அன்னதானம்)நடத்தி , தியானத்தில் ஈடுபடுவதால் பக்தர்களது குறைகளை செவிமடுத்து தியானலிங்க மூர்த்திகளே நிவர்த்தி செய்வதாக நம்பப்படுகிறது. குழப்பமான மனநிலையில் உள்ளவர்களும், பிரச்சனைக்கு முடிவு எடுக்க முடியாமல் தவிப்பவர்களும் இத்தலத்திற்கு வந்து விரதம் இருந்து தியானத்தில் ஈடுபட்டால் தெளிந்த மனதுடன் செல்லலாம். 
    
 தலபெருமை:
     
  ராமநாதசுவாமி, தியானலிங்க மூர்த்திகளான அஞ்ஞானேஸ்வரர், ஞானேஸ்வரராக விளங்குகிறார். இங்குள்ள தீர்த்தம் காமம், குரோதம், மோகம் என்னும் மயக்கங்களில் இருந்து மனிதர்களை விடுபடச் செய்கிறது. மகாமக ஆண்டில் வரும் மக நட்சத்திர நாட்களில் தீர்த்தமாடினால், கும்பகோணத்தில் 12 மகாமகங்களில் தீர்த்தமாடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு தீர்த்தமாடி லிங்க மூர்த்திகளை வழிபட்டுவர பிரம்மஹத்தி தோஷம் நீங்கி கோடி புண்ணியம் சேரும். மனம் தூய்மையடையும். புத்திரபேறு கிடைக்கும். சித்தர்களும், தேவதைகளும் அரூபமாக உலாவரும் இத்தலத்தில் வனபோஜனம் (அன்னதானம்)நடத்தி , தியானத்தில் ஈடுபடுவதால் பக்தர்களது குறைகளை செவிமடுத்து தியானலிங்க மூர்த்திகளே நிவர்த்தி செய்வதாக நம்பப்படுகிறது. குழப்பமான மனநிலையில் உள்ளவர்களும், பிரச்சனைக்கு முடிவு எடுக்க முடியாமல் தவிப்பவர்களும் இத்தலத்திற்கு வந்து விரதம் இருந்து தியானத்தில் ஈடுபட்டால் தெளிந்த மனதுடன் செல்லலாம்.  
     
  தல வரலாறு:
     
  ராமாயண யுத்தத்தில் ராவணனை வதம் செய்து சீதா பிராட்டியை மீட்டு வரும் வழியில் ராமேஸ்வரத்தில் தங்கினார் ராமன். அப்போது யுத்தத்தில் தனது சடைமுடியில் தோய்ந்திருந்த அரக்கர்களின் ரத்தத் துளிகளை சுத்தம் செய்து நீராடி, பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற நீர்த்தடாகமே ஜடாமகுட தீர்த்தமாக விளங்கி வருகிறது. வியாசரின் மகனாகிய சுகர் எத்தனையோ யாகங்களையும், வேள்விகளையும் வேதமந்திர பாராயணங்களையும் செய்தும் தவயோக ஞான சித்திகளை அடைய முடியாமல் கவலையுடன் வியாசரிடம் சென்றார். வியாசரும், சுகரின் நிலை அறிந்து ராஜரிஷியாகிய ஜனகரிடத்தில் அனுப்பி வைத்தார். ஜனக மகரிஷி சகல சிவயோக சித்திகளும் உண்டாக வேண்டும் என்றால் ராமேஸ்வரத்தில் ராம பிரானால் உருவாக்கப்பட்ட, ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடிவர நீ சித்தி அடையலாம் என்று உபதேசித்தார்.

சுகரும் அவ்வாறே, ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி அங்கு தியான லிங்கமூர்த்தியாகத் திகழ்ந்த ராமநாத சுவாமியை வழிபட்டு ஞானியானார். கொடுங் கோபியாகிய துர்வாச மகரிஷியும், சாந்த சீலராகிய பிருகு மகரிஷியும் வெவ்வெறு காலங்களில் புனித நீராடி அரிதான யோக சக்திகளைப் பெற்ற சிறப்புடையது ஜடாமகுட தீர்த்தம். தவநெறியில் நிற்போரான ரிஷிகள், மகான்களால் உருவாக்கி பூஜிக்கப்பட்ட ராமநாத சுவாமியே, ஜடாமகுட தீர்த்தக் கோயிலில் தியான லிங்க மூர்த்தியாக விளங்குகிறார். இத்தீர்த்தம் காமம், குரோதம், மோகம் என்னும் மயக்கங்களில் இருந்து மனிதர்களை விடுபடச்செய்கிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மகம் நட்சத்திரம் வரும் எல்லா நாட்களிலும் புண்ணிய தீர்த்தக்கரையான ராமேஸ்வரம் ஜடா மகுட தீர்த்தத்தில் நீராடினால், மகாமக குளத்தில் 12 மகாமகங்கள் நீராடிய பலன் கிட்டும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar