அருள்மிகு கல்யாண வேங்கடேச பெருமாள் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
கல்யாண வேங்கடேச பெருமாள் |
|
ஊர் | : |
சீனிவாசமங்காபுரம் |
|
மாவட்டம் | : |
திருப்பதி
|
|
மாநிலம் | : |
ஆந்திர பிரதேசம் |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
மாசியில் பிரம்மோற்ஸவம் 9 தினங்கள் நடக்கிறது. புரட்டாசியில் பவித்ரோத்ஸவமும், வைகுண்ட ஏகாதசியும் சிறப்பானவை. சனிக்கிழமைகளில் பெருமாள் தேவியரோடு மாடவீதியில் உலா வருகிறார். |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
கருவறையில் பெருமாள் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். நடுநாயகமாக சீனிவாசப் பெருமாளாக நின்ற கோலத்திலும், வலப்புறம் லட்சுமி நாராயணராக அமர்ந்த கோலத்திலும், இடப்புறம் ரங்கநாதராக சயன கோலத்திலும் பெருமாள் இருப்பது இத்தலத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம். |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு கல்யாண வேங்கடேச பெருமாள் திருக்கோயில், சீனிவாசமங்காபுரம், திருப்பதி
ஆந்திர மாநிலம். |
|
| | |
|
போன்: | | | | | |
+91 877-210 0105 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
திருமலையில் இருக்கும் பெருமாளை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் ஏன் நாள் கணக்கில் காத்து நின்றாலும் தரிசிப்பது என்னவோ ஓரிரு நிமிடங்களே. ஆனால், சீனிவாசமங்காபுரத்தில் பெருமாள் அதேகோலத்தில் கம்பீரமாக எட்டடியில் காட்சி தருகிறார். பெருமாளை நாம் விரும்பிய படி சாவகாசமாக தரிசனம் செய்வதற்கு சீனிவாச மங்காபுரம் மிக வசதியாக இருக்கிறது. |
|
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
திருமலை சீனிவாசப் பெருமாளுக்கும், சந்திரகிரி மன்னன் ஆகாசராஜனின் மகள் பத்மாவதிக்கும் நாராயணவனத்தில் (திருப்பதியில் இருந்து 40கி.மீ. தொலைவிலுள்ள புத்தூர்) திருமணம் நடந்தது. பின்னர் மணமக்கள் வேங்கடமலைக்குச் செல்லும் வழியில் அகத்தியர் ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அவர்களுக்கு அகத்தியர் விருந்தளித்தார். திருமணமான தம்பதிகள் ஆறுமாதம் மலையேறக் கூடாது என்ற அகத்தியரின் சொல்லுக்கு கட்டுப்பட்ட சீனிவாசன் அங்கேயே தங்க சம்மதித்தார். பெருமாளும் பத்மாவதியும் தேனிலவு கொண்டாடிய அத்தலம் பின்னாளில் கோயிலாக அமைந்தது. சீனிவாசனும், அலமேலு மங்கையாகிய பத்மாவதியும் தங்கியதால் இருவரின் பெயராலும் சீனிவாசமங்காபுரம் ஆனது. புராதன காலத்தில் சித்புருஷர்கள் தவம் செய்த இடமானதால் சித்தர் கூடம் என்றும் பெயருண்டு. |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
கருவறையில் பெருமாள் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். நடுநாயகமாக சீனிவாசப் பெருமாளாக நின்ற கோலத்திலும், வலப்புறம் லட்சுமி நாராயணராக அமர்ந்த கோலத்திலும், இடப்புறம் ரங்கநாதராக சயன கோலத்திலும் பெருமாள் இருப்பது இத்தலத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|