ஆண்டு தோறும் சித்திரை முதல் நாள் திருவிழா நடக்கும். தவிர மாதம்தோறும் நடக்கும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை, அலங்காரங்கள் செய்யப்பட்டு பெருமாள் அருள்பாலிக்கிறார்.
தல சிறப்பு:
இங்குள்ள பெருமாள் நான்கு அடி உயரத்தில் சுயம்புவாக தோன்றியது.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில்
கச்சைகட்டி, மதுரை.
போன்:
+91 97893 17916
பிரார்த்தனை
கேட்ட வரம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, துளசி மாலை சார்த்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
இக்கோயில் கச்சைகட்டி, குட்லாடம்பட்டி, செம்மினிபட்டி, ராமையன்பட்டி, ஒட்டுப்பட்டி, மலப்பட்டி, பூச்சம்பட்டி, சொக்கலிங்கபுரம் உட்பட எட்டு கிராம மக்களுக்கு பாத்தியப்பட்டது. இக்கோயில் தற்போது இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது.
தல வரலாறு:
மதுரையை குலசேகரப்பாண்டிய மன்னர் ஆட்சி புரிந்த காலத்தில், இக்கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சேர, சோழ, பாண்டியர் காலத்திற்கு பின் கோயில்கள் முழுமையாக சிதிலமடைந்தன. பின், மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் காலத்தில் கச்சைகட்டியில் பூமியில் இருந்து கல் ஒன்று சிறிது... சிறிதாக... வளர்ந்துள்ளது.அதை தோண்டி பார்க்கையில் நான்கு அடி உயரத்தில் பெருமாள் சிலை சுயம்புவாக தோன்றியது. அந்த இடத்தில் ராணி மங்கம்மாள் முயற்சியால் நீலமேகப்பெருமாள் கோயில் கட்டப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள பெருமாள் நான்கு அடி உயரத்தில் சுயம்புவாக தோன்றியது.