இக்கோயிலின் திருத்தேர் விசேஷ வடிவமைப்புடன், இந்து மத தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் மர சிற்பங்களால் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூன்று மாட அமைப்பு ராஜகோபுரம் கொண்ட கோயில் கிழக்கு நோக்கி அமையப் பெற்றுள்ளது. சுவாமிக்கு இடது புறத்தில் உண்ணாமுலை அம்பாள் சன்னதி உள்ளது. சுவாமிக்கு எதிரில் கொடிமரம், வலது புறமாக வந்தால் கன்னி மூலையில் கணபதி, மேல்புறத்தில் தெட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். சுற்று பிரகாரத்தில் விநாயகர், காசிவிஸ்வநாதர், அருணாசலேஸ்வரர், ஜூரநாதர், நவக்கிரகங்கள், பஞ்சமூர்த்தி சன்னதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், கெஜலெட்சுமி, வடக்கில் சனிஸ்வரர், பைரவர் தனி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.
பிரார்த்தனை
சுகபிரசவம், நாள்பட்ட காய்ச்சல் போகவும், குழந்தைப் பேறு கிடைக்கவும் பக்தர்கள் இங்குள்ள இறைவனை மனதார பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இத்திருக்கோயிலின் வடபுறம் மகா மண்டபத்தில் அமையப் பெற்ற ஜூரநாதருக்கு ரச சாதம் படைத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. யாரால் கட்டப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை15 வேலி நஞ்சை நிலம்,15 வீடுகள்,14 திருக்குளங்கள், காலி மனைகள் பல்வேறு காலக்கட்டங்களில் தானமாக வழங்கப்பட்டுள்ளது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு வெள்ளி கவசங்கள் மற்றும் ஐம்பொன் சிலைகள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இக்கோயிலின் திருத்தேர் விசேஷ வடிவமைப்புடன், இந்து மத தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் மர சிற்பங்களால் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.