|
அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
வரசித்தி விநாயகர் |
|
ஊர் | : |
காணிப்பாக்கம் |
|
மாவட்டம் | : |
சித்தூர்
|
|
மாநிலம் | : |
ஆந்திர பிரதேசம் |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
விநாயகர் சதுர்த்தி, ஆங்கில புத்தாண்டு. |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று.
வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்,
காணிப்பாக்கம்- 517 131,
சித்தூர் மாவட்டம்,
ஆந்திரா மாநிலம் . |
|
| | |
|
போன்: | | | | | |
+91- 8573 - 281 540, 281 640, 281 747. | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் என இத்தலத்தில் கட்டணம் செலுத்தி ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனைகள் நிறைவேற்றி வருகின்றனர். தற்போது ஆந்திர மாநிலம் முழுவதும் எங்கு நோக்கினும், இந்த சக்தி வாய்ந்த காணிப்பாக்கம் விநாயகர் படங்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. |
|
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பேசமுடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களது தொழில் விவசாயம். ஊனத்தின் காரணமாக இவர்களால் இணைந்து தொழில் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாகப்புரிந்து கொண்டு களை பறிக்க சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான்.
ஒரு முறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர். தண்ணீர் வற்றிப்போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. உள்ளே கவனித்த போது, யானை முக கடவுள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த சிலையை வெளியே எடுக்க ஊர் மக்கள் கடும் முயற்சி செய்தனர். முடியவில்லை. எனவே கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே பல்லாயிரம் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. எனவே அவ்வூருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். நீண்ட காலத்திற்கு பின் தற்போதுள்ள கோயில் உருவானது.
|
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|