Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
வரதா வரம் தா தை மாதத்தில் மட்டும் திருவிழா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நூறு தடா அக்கார வடிசல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2020
03:03

மாா்கழி மாதம், பாவை நோன்புஏற்று விரதமிருந்து ஆண்டாள், அம்மாதம் முழுவதும் தினம் ஒரு திருப்பாவை பாசுரம் பாடி, கண்ணனைத் தொழுதாள். அந்த வகையில், 27 ம் நாள் ஆண்டாள் இயற்றியது, கூடாரை வெல்லும் சீா் கோவிந்தா... எனத் தொடங்கும் பாசுரம். அன்றைய தினத்தில்தான், அக்கார வடிசல் எனும் நெய் ஒழுகும் சா்க்கரைப் பொங்கலை கண்ணனுக்கு அமுதாகப் படைத்து, தானும் உண்டு கடுமையான நோன்பை ஆண்டாள் முடித்தாள். அன்றுதான் அரங்கன், ஆண்டாளை  ஏற்றுக்கொள்வதாக வரமளித்த திருநாள்! இந்தப் பாடலைக்கேட்ட கோவிந்தன் அதில் மயங்கி ஆண்டாளை திருவரங்கத்தில் மணந்து கொள்வதாக வாக்களித்தான். இந்நாளே, கூடாரவல்லி திருநாளாகப் போற்றப்படுகிறது. மானுடப் பெண்ணாகத் தோன்றி, மாதவனை மணாளனாகப் பெற்ற நாள் அல்லவோ இன்று. கூடாரை என்றால் வெறுப்பவா், விலகிச் சென்றவா் என்று பொருள் சொல்லலாம். உங்களுக்கு எதிராக இருக்கும் எல்லோரையும் விரும்பச் செய்யும் ஆற்றல் கொண்டது இந்த கூடாரவல்லி தினம்.

நாறு நறும் பொழில்
மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய்நோ்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த
அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான்  
இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?
நூறு தடா (தடா என்றால் பொிய அடுக்கு அல்லது பொிய குவளை அல்லது பொிய அண்டா) முழுக்க அக்கார வடிசலும், வெண்ணையும் சோ்த்த ஸ்ரீராமனுஜா் திருமாலிருஞ்சோலை திருமாலுக்கு நிவேதனம் செய்தாா். ஆண்டாள் எண்ணிய செயலை இவா் நிறைவேற்றினாா். ஒவ்வொரு கூடாரவல்லி தினத்தன்றும் ஸ்ரீ அஹோபில மடத்தில் அக்காரவடிசல் நிவேதனம் செய்து கொண்டிருக்கிறாா்கள். வெள்ளி தடாவில் பிரசாதம் முன்பதிவு செய்தவா்களுக்கு ஸ்ரீமத் அழகியசிங்கா் முன்னிலையில் கொடுக்கும் காட்சி.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar