Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
வித்தியாசமான நைவேத்தியம் கல்வி ஞானம் தருவாள் வேதாந்த நாயகி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேண்டியதைத் தருவாள் மூங்கில் அன்னை காமாட்சி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2020
04:08


தேனி மாவட்டம். தேவதானப்பட்டியில் மூங்கில் அன்னை காமாட்சி அருளுவதைப் போல் உத்தமபாளையம் உ.அம்மாபட்டியில் கோயில் கொண்டிருக்கிறாள் மூங்கில் அன்னை காமாட்சி. சுமார் 350 வருடங்களுக்கு முன்பு, காஞ்சி காமாட்சி ஆலயத்தில் இருந்து பிடி மண்ணை எடுத்து வந்து, ஒரு பெட்டியில் வைத்து வழிபட்டு வந்தனர் கிராம மக்கள். அந்நியர்களின் படையெடுப்பின் போது, பெட்டிக்கும் பெட்டியில் உள்ள பிடி மண்ணுக்கும் ஏதும் ஆகிவிடக்கூடாதே என்று அந்தப் பெட்டியுடன் ஊர் ஊராக அலைந்தார்களாம். வனமும் மலையுமாக இருந்த பகுதியில், கண்மாய்க்கு அருகில் வந்து ஓய்வெடுத்தவர்கள், அங்கிருந்து கிளம்பத் தயாரானார்கள். ஆனால், பெட்டியை அசைக்கக்கூட முடியவில்லை. அதுமட்டுமா? அந்தப் பெட்டி பூமிக்குள் சென்றுவிட.... அங்கே மூங்கில் மரத்தின் வேர் ஒன்று தென்பட்டது. அன்று முதல், மூங்கில் அன்னை காமாட்சிக்கு அங்கேயே சிறிய குடிசை ஒன்று அமைத்து, வழிபடத் துவங்கினர். காலப்போக்கில், அம்மனின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, கோயில் கட்டி, வழிபட... அந்த ஊரே செழிக்கத் துவங்கியது என்பது ஸ்தல வரலாறு.

தென் மாவட்ட காமாட்சி, மூங்கில் அன்னை என்றெல்லாம் கொண்டாடப்படும் இந்த அம்பிகைக்கு மாசித் திருவிழா விசேஷம். பவுர்ணமியில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். வெள்ளிக்கிழமையன்று இவளுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபட, ஐந்தாவது வெள்ளிக்குள் நினைத்தது நிறைவேறும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை. நவராத்திரி 9 நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் தரிசனம் தருகிறாள், அம்பிகை. இந்த நாட்களில் இங்கு வந்து புடவை சாற்றி, எலுமிச்சை தீபம் ஏற்றினால் தோஷங்கள், கண் திருஷ்டிகள் யாவும் விலகும்; விளைச்சல் செழிக்கும் என்கின்றனர் இங்குள்ள மக்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar