Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
உண்மை பேசுங்கள் நம்பிக்கை என்பது வேண்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உழைப்பே நிரந்தரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2021
07:05


 மகனுக்கு  தங்கப் பொம்மையை பரிசளித்தார் பணக்காரத்தந்தை. ‘‘மகனே! வாழ்க்கையில் எதைத் தொலைத்தாலும், இதை தொலைத்து விடாதே.  சிரமம் ஏற்பட்டால், இதை விற்றால் பெரும் பணம் கிடைக்கும். அது உனக்கு கைகொடுக்கும்,’’ என்றார். இப்படி சில காலம் சென்றது. திடீரென தந்தை காலமானார்.  
மகனும் தங்கப் பொம்மையை கண்ணுக்கு ஈடாகப் பாதுகாத்தான். ஒருநாள் தனது பண்ணைக்குச் சென்று விட்டு திரும்பியவன், பொம்மை இருந்த பெட்டியை திறந்தான்.  பொம்மையைக் காணவில்லை.எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  யாரோ  திருடியது தெரிந்தது. அவன் வேதனையில் ஆழ்ந்தான்.  
அந்த நினைப்பிலேயே அன்றாட வேலைகளை மறந்தான். ஒரு கட்டத்தில் பெரும் நஷ்டமாகி, பண்ணையை விற்றான்.
ஒருநாள்  வீட்டிற்கு அருகில் இருக்கும் கிராமத்துக்குச் நடந்து சென்றான். அப்போது அங்கு இருந்த விவசாயக் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தான். அந்த வீட்டுப் பெரியவர் மகன்களிடம் பேசிக்கொண்டிருந்தார். ‘‘பிள்ளைகளே! நீங்கள் இன்றிருக்கும் நிலம், பொருள் ஆகியவற்றை நம்பாதீர்கள். இவை ஏதோ ஒரு காரணத்தால், நம் கையை விட்டுப் போய்விடும் நாள் வரலாம். உழைப்பே என்றும் நிலையானது. அது என்றைக்கும் சோறு போடும். நாம் இந்த நிலத்திற்கு எஜமானர்கள் என்பதற்காகவும், செல்வம் இருக்கிறதே என்பதற்காகவும் வயலுக்குள் இறங்கி உழைக்க தயங்கக் கூடாது. ஒருவேளை இந்த செல்வம் நம்மை விட்டுப் போனாலும், உழைப்பு  கைவிடாது’’ என்றார்.
அவர்களும் அப்படியே செய்வதாக வாக்களித்தனர். இதைக் கேட்ட அந்த மகன், தனது தந்தையும் தங்கப் பொம்மைக்கு பதிலாக இத்தகைய அறிவுரையைத் தந்திருந்தால், செல்வம் பறி போயிருக்காதே என்று ஆதங்கப்பட்டான்.
ஆம்...உழைப்பு மட்டுமே  நிரந்தரச் சொத்து. மற்றவை சூழ்நிலைகளால் அழியக்கூடியவை. இதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து  முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்வோம். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar