Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
திருமணத்தடையை அகற்றும் ... எல்லா நாளும் முகூர்த்த நாளே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காய்ச்சலை குணமாக்கும் தீர்த்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2021
06:06

காய்ச்சல், தலைவலியால் அவதிப்படுகிறீர்களா... புதுச்சேரி வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு வாருங்கள். உங்களது பிரச்னை  தீர்ந்துவிடும்.
ஒரு காலத்தில் அரசமரங்கள் சூழ்ந்த காடான இங்கு, அத்தி மரத்தால் ஆன நரசிம்மர் சிலையை பிரதிஷ்டை செய்து  வழிபட்டனர். பிற்காலத்தில் கோயிலை விரிவுபடுத்தும் போது, கருவறையில் வரதராஜப் பெருமாளை பிரதிஷ்டை செய்தனர். இதன்பின் நரசிம்மருக்கு பிரகாரத்தில் சன்னதி கட்டப்பட்டது.  
ஐந்தடி உயரமுள்ள மூலவர் வரதராஜர் சிலை பூமியைத் தோண்டும் போது கிடைத்ததாகும். அதன் பின் கோயிலுக்கு அருகிலுள்ள வைந்திக்குப்பம் என்னுமிடத்தில் புதையுண்டு கிடைத்த ராமர், சீதா, லட்சுமணன், அனுமன், கிருஷ்ணன், சந்தானகோபாலன் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கடலுார் அழகானந்த முதலியாரின் நிலத்தை தோண்டும் போது, 800 ஆண்டுகள் பழமை மிக்க சுந்தர ஆஞ்சநேயர் சிலை கிடைத்தது. இவருக்கும் சன்னதி இங்குள்ளது.
புதுச்சேரி நகரை பிரெஞ்சுப்படையினர் தாக்கிய போது, புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோயில் சிலைகள் இத்தலத்தில் மறைத்து வைக்கப்பட்டதாக ஆனந்தரங்கம் பிள்ளை தன் நாட்குறிப்பில் கூறியுள்ளார். முஸ்லிம் படையெடுப்பின் போது ஏராளமான விக்கிரகங்கள் இக்கோயிலுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இங்குள்ள கண்ணாடி அறையில் 108 திவ்ய தேசங்களிலும் உள்ள பெருமாளின் சுதை வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தை பாக்கியம் வேண்டுவோர், சொத்து தகராறு உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர். பிரச்னைகளால் பிரிந்திருக்கும் தம்பதிகள் இங்கு வந்து வேண்டினால் மனஸ்தாபங்கள் நீங்கி இருவரும் ஒன்றிணைவார்கள்.
தமிழ் மாதம் பன்னிரண்டையும் குறிக்கும் விதத்தில் 12 கிணறுகள் உள்ளன. இந்த தண்ணீர் பச்சை நிறமாக காணப்படுகிறது. இதற்கு காரணம் ‘அப்ரகாம்’ என்னும் கந்தக அமிலம் கலந்துள்ளது. காய்ச்சல், தலைவலியை குணப்படுத்தும் சக்தி இதற்குண்டு.
எப்படி செல்வது : புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar