சூழ்நிலை எப்போதும்நம் விருப்பத்திற்கு ஏற்பஅமைவதில்லை.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கிறது.வாழ்வின் போக்கு தொடக்கத்திலேயே தவறிவிடுகிறது. அதைஆரம்பத்திலேயே சீர்திருத்தி, படைப்பிற்கு மூலமானகடவுளைத் தேட முயல வேண்டும். இருதயம் என்பது ரத்தத்தைச் சுத்திகரிக்கும் இடம் மட்டுமல்ல. இதற்கு மையம் என்று பொருள். இங்கிருந்தேஎல்லா எண்ணங்களும்புறப்படுகின்றன. இந்த உலகம் முழுவதும் நம் உடலில் இருக்கிறது. உடலோ மனதிற்குள் அடங்கி விடும். எனவே, இயற்கையேஇதயத்தில் அடங்கி இருக்கிறது.சூரியன் சந்திரனுக்கு ஒளிதருவது போல, இதயமேமனதிற்கு ஒளி தருகிறது.நான் என்று ஒருவன் தன்னைக் குறிப்பிடும் போது அவனுடைய கை தானாகவே நெஞ்சைத் தொடுவதைக்காணலாம். அதனால் நான் என்ற தன்மையின் மூலமேஇருதயம் தான்.மூளையைக் கொண்டு ஒரு செயலில் ஈடுபட்டால் தலைபாரம், சூடு, வலிஉண்டாகும். ஆனால், மனதின் மூலம் கவனம் செலுத்தினால் குளிர்ச்சியும், புத்துணர்வும் உண்டாகும். இதைத் தான்இதயபூர்வமாகச் செய்கிறேன் என்று குறிப்பிடுவதுண்டு. மனம் எப்போதும்வெளியிலுள்ள பொருட்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும். கடவுளைஅது நினைப்பதில்லை.மனம் என்பது என்ன என்று தேடிப் பார்த்தால், அப்படி ஒரு பொருள் தனியாக இல்லை என்பது புலனாகும். எண்ணங்களின் தொகுப்பே மனம். அது எப்போதும் நான் என்ற எண்ணத்தையே சார்ந்திருக்கிறது.மனம் உள் நோக்கிதிரும்பினால் ஆன்மநிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ளும். புறவுலகம் நோக்கிதிரும்பினால் ஆணவமாகத் தலைதுõக்கும்.
எண்ணத்தின் ஆற்றல்ஒருபோதும் வீணாகாது. ஒவ்வொரு எண்ணமும் எப்போதாவது அதற்கான பலனை விளைவித்தே தீரும்.சிந்திக்கும் போது மனம் வலிமை பெறுவதாகநினைக்கிறார்கள். ஆனால், எண்ணத்திலிருந்து விடுபட்ட மனமே வலிமையானது. ஞான வழியில் உலகை நோக்கத் தொடங்கினால், காணும் யாவும் கடவுளின் வடிவமாகவே தெரியும்.அலைபாயும் மனம்பலவீனமடையும். அதை அடக்கியோ, அணைத்தோ கட்டுப்படுத்த முடியாது.ஒரே எண்ணத்தில் குவியத் தொடங்கினால், தான் மனம் வலிமை பெறும்.தோன்றி மறையக்கூடிய அகந்தை எண்ணத்தை தேடிப் பிடித்தால் அது ஓட்டம் எடுத்து விடும். எஞ்சி நிற்பது ஆன்மா மட்டுமே.நான் யார் என்று விசாரித்துக் கொண்டே இதயத்திற்குள் நுழைந்தால், அகந்தை வேரோடு சாய்ந்து விடும்.நீ நீயாக இரு. இழக்க வேண்டியது அகந்தை எண்ணம் மட்டுமே. இருப்பது எப்போதும் உன்னிடத்திலேயே இருக்கிறது.மந்திரங்களை இடைவிடாது ஜெபிப்பதால், மனம் அடங்கும். பயிற்சியால் மந்திரம், மனம், மூச்சுஎல்லாம் ஒன்றாகி விடும். மூச்சு என்னும் குதிரையில் மனம் சவாரி செய்கிறது. இந்த இரண்டையும் ஒன்றாக்கும் பயிற்சியே தியானம். மனதை ஒடுக்கும் தியானப்பயிற்சியை வைராக்கியத்துடன் செய்தால், வெற்றிபடிப்படியாகவே கிடைக்கும்.