Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
குண்டுக்குள் கோயில் நடராஜருக்கு 16 வகை தீபங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருமணத்தன்று நிச்சயதார்த்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2021
06:07


திருமணம் நடத்துவதற்கு ஓரிரு மாதம் முன்பாக நிச்சயதார்த்தம் நடத்துவது வழக்கம். ஆனால் கடலுார் மாவட்டம் திருவாமூர் மக்கள் திருமணத்தன்று காலையில் நிச்சயதார்த்தம் நடத்துகின்றனர். ஏனெனில் இங்கு அவதரித்த சிவனடியாரான திலகவதியாரின் திருமணம் நிச்சயத்திற்குப் பின் நின்றதே காரணம்.  
திருவாமூரில் வாழ்ந்த புகழனார், மாதினியார் தம்பதிக்கு பிறந்தவர்கள் திலகவதியார், திருநாவுக்கரசர். இதில் திருநாவுக்கரசருக்கு பெற்றோர் வைத்த பெயர் மருள்நீக்கியார். இளமையிலேயே பெற்றோர் இறந்ததால் நாவுக்கரசர் சகோதரியின் பராமரிப்பில் வளர்ந்தார். போர்வீரரான ‘கலிப்பகையார்’ என்பவருக்கு திலகவதியாரை மணம் பேசி முடித்து  உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடத்தினர். இதன்பின் எதிரிகளை அடக்குவதற்காக கலிப்பகையாரின் தலைமையில் வீரர்களை அனுப்பினார் அந்நாட்டு மன்னர். அந்தப் போரில் கலிப்பகையார் வீரமரணம் அடைந்தார். மனம் வருந்திய திலகவதியார் இல்லறத்தில் ஈடுபடாமல் சிவபக்தியில் ஈடுபட்டார். இதனிடையே தம்பியான மருள்நீக்கியார் சிவவழிபாட்டை மறந்து சமணத்திற்கு மாறி தன் பெயரை ‘தர்மசேனர்’ என மாற்றினார். தம்பி மனம் திருந்த வேண்டும் என சிவபெருமானிடம் முறையிட்டார் திலகவதியார்.
இந்நிலையில் மருள்நீக்கியாருக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. சமணத்துறவிகள் நோயைப் போக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதன்பின் திலகவதியார் சிவனை வழிபட்டு திருநீற்றை வயிற்றில் பூச குணம் பெற்றார். இதன்பின் மருள்நீக்கியார் சிவபக்தியுடன் தேவார பாடல்கள் பாடினார். அவருக்கு காட்சியளித்த சிவபெருமான், ‘தேவாரம் பாடி என்னைக் கவர்ந்த நீ ‘நாவுக்கு அரசர்’ எனப் பெயர் பெறுவாய்’ என வாழ்த்தினார். திருத்தல யாத்திரை புறப்பட்ட நாவுக்கரசர் தமது 82ம் வயதில் சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று சிவனடி சேர்ந்தார். திலகவதியாருக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளை கலிப்பகையார் போரில் இறந்ததால் இப்பகுதி மக்கள் திருமணத்தன்று காலையில் தான் நிச்சயதார்த்தம் நடத்துகின்றனர்.
நாவுக்கரசர் பிறந்த தலமான இங்கு பசுபதீஸ்வரர் – திரிபுர சுந்தரியம்மன் கோயில் உள்ளது. திலகவதியார், திருநாவுக்கரசர் சன்னதிகள் இங்குள்ளன. இங்கு களரி வாகை மரத்தின் அடியில் திருநாவுக்கரசருக்கு தனிக்கோயில்  உள்ளது. ஏழாம் நுாற்றாணடுக்கு முன்பிருந்தே இந்த மரம் உள்ளது. ஒரே சன்னதியில் எட்டு பைரவர்கள் இங்கிருப்பது சிறப்பு.    
எப்படி செல்வது
* உளுந்துார்பேட்டை - பண்ருட்டி சாலையில் திருவாமூர் கைகாட்டியில் இருந்து 2 கி.மீ.,
* விழுப்புரத்தில் இருந்து 28 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar