* கருடனின் பெற்றோர் வினதை, காஸ்யப முனிவர். * தாயின் பெயரால் கருடனுக்கு ‘வைநதேயன்’ என பெயருண்டு. * கருடனின் மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி. * வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவுக்கு தொண்டு செய்பவர்களை ‘நித்யசூரிகள்’ என்பர். அவர்களில் வாகனமாக இருந்து தொண்டு புரிபவர் கருடன். * கருடனை பெரிய திருவடி என்றும், அனுமனை சிறிய திருவடி என்றும் சொல்வர். * பெருமாள் கோயில் சுவர்களின் நான்கு மூலைகளிலும் கருடனின் சிற்பங்கள் இருக்கும்.
* கருடனின் நிறம் பழுப்பு, கழுத்து மட்டும் வெண்மையாக இருக்கும். * கருடனைப் பார்ப்பதும் அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனம். * அதிகாலையில் கருடனை தரிசித்தால் நினைத்தது நிறைவேறும். * கருட மாலா மந்திரம் படித்தால் கிரகதோஷம், முன்வினை பாவம் தீரும். * அமாவாசை, பவுர்ணமி, தமிழ் மாதப்பிறப்பு, கிரகணம், சிராத்த நாட்களில் கருடபுராணம் படிப்பது நல்லது. * மகாவிஷ்ணுவின் திருவடிகளைத் தன் கைகளால் கருடன் தாங்கி நிற்பதே கருடசேவை. * ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் ஆகிய ஆறு குணங்களைக் கொண்டவர் கருடன். * ஏகாதசி, திருவோண விரத நாட்களில் கருடனின் பெருமைகளை படித்தாலும், கேட்டாலும் நன்மை கிடைக்கும். * கருடனின் உடம்பில் அரும்பும் வியர்வை பாம்பின் விஷத்தை முறிக்கும்.