Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
கண் நோய் தீர்க்கும் கருடன் அன்பின் பாதை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எலி கோயில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2021
03:08


கடவுளின் அவதாரமான மகான்களை தெய்வமாக வழிபடுவதுண்டு அவர்களில் ஒருவர் தான் துர்கையின் அவதாரமாக கருதப்படும் கரணி மாதா. ராஜஸ்தான் பீகானேர் மாவட்டம் தேஷ்னோக் கிராமத்தில் இவருக்கு கோயில் உள்ளது. இதை எலி கோயில் என்கின்றனர்.
1387ல் ஜோத்பூர் அருகிலுள்ள கிராமத்தில் வாழ்ந்த பழங்குடி தம்பதியருக்கு ஐந்து பெண் குழந்தைகள் இருந்தன. அவர்களுக்கு ஆறாவது குழந்தையாக பிறந்தவர் கரணிமாதா. இவர் பிறக்கும் முன்பு பெற்றோரின் கனவில், ‘‘உனக்கு ஆறாவதும் பெண் குழந்தை பிறக்கும். அது என் அம்சமாக இருக்கும்’’ என துர்கை தெரிவித்தாள்.  ஐந்து வயதான போது கரணிமாதாவின் தந்தையை பாம்பு தீண்டியது. கைகளால் தடவி விஷத்தை போக்கினாள். இவருக்கு 29வது வயதில் தேபா என்பவருடன் திருமணம் நடந்தது. கணவரிடம் தன் தெய்வீக நிலையை எடுத்துச் சொல்லி சகோதரியை மணம் முடித்தார். மக்கள் மத்தியில் பல அதிசயங்களை நிகழ்த்தினார். தேஷ்னோக் பகுதியிலுள்ள குகையில் சில காலம் தங்கி தவமிருந்து 1538ல் ஜோதி ரூபமாக வானில் கலந்தார்.
  ஒருமுறை இப்பகுதியை ஆட்சி செய்த மன்னரான ராவ்ஜோதா, மற்றொரு ராஜபுத்திர மன்னரிடம் தோற்று கரணிமாதாவை தஞ்சமடைந்தார். பத்தாண்டுகள் சேவையில் ஈடுபட்ட மன்னர் மாதாவின் ஆலோசனைப்படி எதிரியைத் தாக்கி நாட்டை மீட்டார். அப்பகுதியே ஜோத்பூர் எனப்பட்டது. பிற்காலத்தில் ராவ்ஜோதாவின் மகன் ராவ்பீகா என்பவன் மாதாவின் ஆலோசனைப்படி ஒரு நகரை நிர்மாணித்தான். அதுவே ‘பீகானேர்’ எனப்பட்டது. இங்கு 14ம் நுாற்றாண்டில் மொகலாய, ராஜபுத்திர கட்டடக்கலையுடன் மன்னர் கங்காசிங் கோயிலை எழுப்பி கரணிமாதாவை பிரதிஷ்டை செய்தார். குங்கும அலங்காரத்தில் உள்ள கரணிமாதாவின் தலையில் மகுடம், வலது கையில் சூலம், இடது கையில் கபாலம் உள்ளது.  வாகனமாக சிங்கம் உள்ளது. கரணிமாதாவின் சிலை ஜோத்பூர் சிவப்பு கல்லால் ஆனது.   
  இக்கோயிலில் எலிகளுக்கே முதலிடம். அதன் பின்னணியில் வரலாறு கூறப்படுகிறது. ஒரு சமயம் கரணிமாதாவின் வளர்ப்பு மகனான லட்சுமணன் குளத்தில் மூழ்கி இறந்தான். எமதர்மனிடம் திரும்பத் தர வேண்டியும் பலனில்லை. தன் சக்தியால் கரணிமாதா உயிரை வரவழைத்தார். வருங்காலத்தில் தன் சந்ததியினர் இறப்புக்கு ஆளான போதும், உயிர் எமனிடம் போகாது என்றும், எலிப்பிறவி எடுப்பர் என்றும் தெரிவித்தார். அவர்களே இங்கு எலிகளாக வாழ்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். கரணிமாதா முன்புள்ள தட்டில் வைக்கப்படும் லட்டு, பாலை ஆயிரக்கணக்கான எலிகள் ருசிக்கின்றன. பண்டிகை நாட்களில் கோதுமை அல்வா படைக்கப்படுகிறது. பறவைகளிடமிருந்து எலிகளைப் பாதுகாக்க கூரை மீது வலை அமைக்கப்பட்டுள்ளது.  
எப்படி செல்வது
பீகானேர் நகரில் இருந்து 30 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar