Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
வெற்றியின் ரகசியம் எல்லோரிடமும் அன்பாக இருப்போம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நீ விலை மதிக்க முடியாதவன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2021
07:08


 பத்தாம் வகுப்பு படிக்கும் டேனியலுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர்.
உங்கள் வாழ்வின் மதிப்பு என்ன என கேள்வி கேட்டார்.
மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
இதுதான் இந்த வார பிராஜெக்ட். இதற்கு சரியாக பதில் தருபவருக்கு பரிசு உண்டு என்று சொல்லி நகர்ந்தார்.
என்னடா இது புரியாத கேள்வியாக இருக்கிறதே. இதை யாரிடம் கேட்டால் விடை கிடைக்கும் என்று யோசித்தபடி வீட்டிற்குள் நுழைந்தான் டேனியல். அப்போது அவனது பாட்டி சமைத்து கொண்டிருந்தார்.
பாட்டி.. இன்னிக்கு.. டீச்சர் ஒரு கேள்வி கேட்டாங்க.. ஒன்னுமே புரியல.. நீங்கதான் பதில் சொல்லனும் என்று அந்தக் கேள்வியை சொன்னான்.
ஒரு நிமிஷம் பொறு. இதோ வந்துடுறேன் என்று அறைக்குள் சென்றார்.
சிறிய நகைப் பெட்டியை பேரனிடம் நீட்டினார். அதற்குள் ஒரு கல் இருந்தது.
இது சாதாரண கல் அல்ல. வைரக்கல் இது. வாழ்வின் மதிப்பு என்னன்னு கேட்டேல்ல.. அதுக்கு முன்னாடி இந்தக் கல்லோட மதிப்பு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு வா... உனக்கு விடை கிடைக்கும். எக்காரணம் கொண்டும் இதை விற்கக்கூடாது என்றார் பாட்டி.
அவனது கண்ணுக்கு முதலில் தென்பட்டார் ஒரு பழவியாபாரி.
ஐயா.. இந்தக் கல் என்ன விலையிருக்கும் என்று கேட்டான்.
அப்படி ஒண்ணும் விசேஷமான கல்லாத் தெரியலையேப்பா. உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு. இந்தக் கல்லைக் குடு. அதுக்கு பதிலா இரண்டு கிலோ ஆப்பிள் தர்றேன் என்றார்.
பதில் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தான்.
அடுத்து அரிசி கொள்முதல் செய்யும் வியாபாரியிடம் சென்றான்.
ஐயா...இது எவ்வளவு மதிப்பு பெறும் என்று கேட்டான்.
கல்லை உருட்டி புரட்டி பார்த்தார் வியாபாரி இதுக்கு ஈடா ஒரு மூடை அரிசி தருகிறேன். வாங்கிட்டுப்போ என்றார்.
அங்கிருந்தும் நகர்ந்தான்.
கடைசியாக நகைக் கடைக்காரர் ஒருவரிடம் கல்லை காட்டினான்.
தம்பி இந்தக்கல் யாருடையது. இது
10 லட்ச ரூபா பெறுமானம் கொண்டதாச்சே.. இது எப்படி உங்க கைக்கு வந்துச்சு என்றார் சந்தேகத்துடன். அவர் சொன்னதைக் கேட்டு திகைத்துப் போனான்.
ஐயா.. இது என் பாட்டியோடது. இதன் மதிப்பு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன் என்ற சொல்லி வீட்டுக்கு வந்து பாட்டியிடம் நடந்ததைக் கூறினான்.
கண்ணு....ஒவ்வொரு வியாபாரியும் இந்த கல்லுக்கு ஒரு விலையைச் சொன்னார்கள். அது அவங்க தப்பில்லை. தங்களுக்குத் தெரிஞ்சத வச்சு சொல்லியிருக்காங்க. அந்தக் கல் மாதிரிதான் நீயும் விலைமதிக்க முடியாதவன் என்றார். வகுப்பறையில் பாட்டியின் பதிலை சொல்லி பரிசை தட்டிச்சென்றான் டேனியல்.
நம்மில் பலருக்கு வாழ்க்கையின் மதிப்பு தெரிவதில்லை. தங்கள் மதிப்பை தாங்களே உணராதவர்களாகத்தான் பலரும் இருக்கிறோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar