Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
வேண்டாமே தலைக்கனம் தாத்தாவுக்கு பேரன் திதி கொடுக்கலாமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எனக்கு கிடைத்த பெரும்பாக்கியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
06:09


திருப்பூர் கிருஷ்ணன்

காஞ்சி மஹாபெரியவர் அவ்வப்போது இசைக் கலைஞர்களை மடத்திற்கு அழைத்துப் பாடச் சொல்லிக் கேட்பதுண்டு. அப்போது இசைக்கலையின் சுவையான அம்சங்களை ரசித்து மகிழ்வார். பாடலின் பொருள், ராகம், தாளம் பற்றி நுட்பமான கேள்விகள் கேட்பார். கலைஞர்களை மனதார பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவிப்பார்.
 இதைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார் புகழ் பெற்ற சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர். தானும் மஹாபெரியவரின் முன்னிலையில் இசைத்திறமையை வெளிப்படுத்தி ஆசி பெற விரும்பினார். இந்நிலையில் கச்சேரியில் பங்கேற்பதற்காக ஒருமுறை சென்னைக்கு வந்திருந்தார். அப்போது  சென்னை திருவல்லிக்கேணி வசந்த மண்டபத்தில் மஹாபெரியவர் முகாமிட்டிருந்தார். இதைக் கேள்விப்பட்டதும் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல மகிழ்ந்தார்.
  தான் வந்திருக்கும் நேரத்தில் மஹாபெரியவர் சென்னைக்கு வந்திருப்பதை கடவுள் அளித்த வரமாகக் கருதினார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அவர் முன்னிலையில் கலைஞர்கள் பலர் இசை நிகழ்ச்சி நடத்திய செய்தியை நாளிதழில் படித்தார். தானும் இசைக்க விரும்புவதாக தகவல் அனுப்பினார். நிகழ்ச்சி நடத்த வருமாறு பதில் கிடைத்தது. கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.   
மஹாபெரியவரிடம் பிரசாதம் பெற்றுக் கொண்டபின், சிதாரை இசைக்கத் தொடங்கினார் ரவிசங்கர். பெரிய மகான் முன்னிலையில் இசைக்கிறோம் என்ற எண்ணமே அவரது ஆற்றலை மேம்படுத்தியது. நிகழ்ச்சியின் முடிவில், உயர்வான சங்கீதம் கேட்ட மனநிறைவு ஏற்பட்டதாகப் பாராட்டிய மஹாபெரியவர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். கச்சேரி அனுபவம் பற்றி நிருபர்கள் கேட்ட போது, ‘‘இவ்வளவு சிறப்பாக எப்போதும் நான் சிதார் வாசித்தது இல்லை. சுவாமிகளின் சான்னித்தியத்தால்தான் இது சாத்தியமானது. அவர் முன்னிலையில் இசைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்’’ என்றார் ரவிசங்கர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar