மகாவிஷ்ணு பூமியில் தர்மத்தை நிலைநாட்ட மச்சம், கூர்மம், வராகம், வாமனம், நரசிம்மம், பரசுராமர், ராமர், கிருஷ்ணர், பலராமர், கல்கி அவதாரங்களை எடுத்தார். முதல் ஐந்து அவதாரங்களை கிருதயுகத்திலும், ராம, பரசுராம அவதாரங்களை திரேதாயுகத்திலும் எடுத்தார். துவாபரயுகத்தில் கிருஷ்ணர், பலராமராக வந்தார். கலியுகத்தின் முடிவில் கல்கி அவதாரம் எடுக்க இருக்கிறார். இதில் நரசிம்மர், ராமர், கிருஷ்ணர் ஆகிய மூன்று மட்டுமே முழுமையான அவதாரங்கள் என்பதால் அவற்றை ‘பூர்ணாவதாரங்கள்’ என்பர். அதிலும் கிருஷ்ணாவதாரத்தை ‘சர்க்கரை பந்தலில் தேன்மழை’ என்று சிறப்பாக சொல்வர்.