Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
நமோ என்றால் என்ன? நூறாண்டு காலம் வாழ சிறந்த பரிகாரம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தீபம் ஏற்றும் முறைகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2022
05:02


மங்கலப் பொருட்களில் தீபம் முக்கியமானது. புதுப்பெண்ணாய் வரும் வீட்டுக்கு வலதுகாலை எடுத்து வைத்து வரும் மருமகளின் முதல் கடமை, பூஜையறையில் விளக்கேற்றுவது ஆகும்.

விளக்கில் இருக்கும் ஐந்து முகங்கள் அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசிதம், சகிப்புத்தன்மை ஆகிய நற்பண்புகளும் பெண்களுக்கு அவசியம் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளன.

தரையில் விளக்கேற்றி வைக்கக்கூடாது. மரப்பலகையில் கோலமிட்டு, அதன் மேல் விளக்கு இருக்க வேண்டும். விளக்கிற்கு மலர் சூடுவது மிக நல்லது.

தீபலட்சுமியாகப் போற்றப்படும் திருவிளக்கிற்கு சந்தனம், குங்குமம் இடுவது அவசியம்.தீபலட்சுமியே! எங்கள் வீட்டில் எப்போதும் நிலைத்திருப்பாயாக! என்று சொல்லிக் கொண்டே விளக்கேற்ற வேண்டும்.

அம்மன் கோயில்களில் மாவிளக்கு வழிபாடு செய்வது சிறப்பானது. உடல் ஆரோக்கியம் பெற செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நேர்த்திக்கடனாக மாவிளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.

நாயன்மார்களில்நமிநந்தியடிகள், கணம்புல்லர், கலியநாயனார் ஆகியோர் விளக்கு வழிபாட்டினால் சிவன் அருளைப்பெற்றவர்கள். வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயிலில் அணைய இருந்த விளக்கைத் தூண்டிய எலிமறுபிறவியில் மகாபலிச்சக்கரவர்த்தியாகப் பிறந்தது.

விளக்கேற்ற எக்காலமும் உகந்தது பஞ்சுத்திரி. விழா நாட்களில் மரைத்தண்டுத்திரியால் விளக்கேற்றமுன்வினைப்பாவம் தீரும். எருக்கம்பட்டைத்திரியால் விளக்கேற்ற செல்வம் சேரும்.

விளக்கை ஒருமுகம் ஏற்ற ஓரளவு பலனும், இரண்டுமுகம் ஏற்ற குடும்ப ஒற்றுமையும், மூன்றுமுகம் ஏற்ற புத்திர பாக்கியமும், நான்குமுகம் ஏற்ற செல்வவளமும், ஐந்து முகம் ஏற்ற சகலசவுபாக்கியமும் உண்டாகும்.

கிழமைகளில் செவ்வாய், வெள்ளியும், திதிகளில் அமாவாசை, பவுர்ணமியும், நட்சத்திரத்தில் கார்த்திகையும், பிரதோஷமும், தமிழ் மாதப்பிறப்பு நாளும் கோயில்களில் திருவிளக்கு பூஜை நடத்த உகந்தவை.

கிழக்குநோக்கி விளக்கேற்ற துன்பம் நீங்கும். மேற்கு நோக்கி ஏற்றுவதால் கடன் தொல்லை அகலும். வடக்குநோக்கி ஏற்ற செல்வவளம் பெருகும். தெற்கு நோக்கி ஏற்றுவது கூடாது.நதிகளில் ஏற்றி வைக்கும் தீபத்தை ஜலதீபம் என்பர். காசியில் தினமும் மாலையில் ஜலதீபங்களை ஏற்றிகங்கைநதியை வழிபடுவது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும்.

கோயில்களில் ஒரேசமயத்தில் பிரகாரம் முழுவதும் விளக்கேற்றி வைப்பதை லட்சதீபம் என்பர். கோயில்களில் விளக்குபூஜை நடத்துவது புண்ணியம் மிக்கதாகும். பலர் கூடி ஒரே மனதுடன் பூஜையில் கலந்து கொள்ளும்போது, யாகம் செய்வதற்கு ஈடானதாக ஆகிறது. கூட்டுப்பிரார்த்தனையானயால் இறையருளை எளிதாகப் பெற முடியும்.

நூறாண்டு காலம் வாழ சிறந்த பரிகாரம்!
பெண்கள் அதிகாலையே எழுந்து, மஞ்சள் தேய்த்து நீராடி, நேர் வகிடு எடுத்து தலைவார வேண்டும். நெற்றியிலும், வகிட்டிலும் குங்குமம் இட வேண்டும். இந்த மங்கல முகங்களையே லட்சுமி தாயார், காலை நேரத்தில் பார்க்க ஆசைப்படுகிறாள்.

வெள்ளிக்கிழமைகளில் காலை அல்லது மாலை 6 மணிக்கு நெய் விளக்கேற்றுவது நல்லது. விளக்கில் நெய் விட்டு ஐந்து முக தீபம் ஏற்றினால் வீட்டில் லட்சுமிகடாட்சம் பெருகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar