Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சத்குருவின் சீடர் வேங்கடரமண பாகவதர் குழந்தை வரம் தரும் மன்னர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அரித்துவாரமங்கலம் ஸ்ரீபாதாளேஸ்வரர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2022
04:02


வாழ்க்கை நல்ல விதத்தில் அமைய வேண்டும் என்றால் நவக்கிரகங்களின் ஆசி அவசியம். கிரகங்களின் ஆசியை வழங்கி வாழ்வை சுபிட்சமாக்குபவராக அரித்துவார மங்கலம் பாதாளேஸ்வரர் விளங்குகிறார். இவரை தரிசித்தால் தோஷம் பறந்தோடும்.
கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ., தொலைவில் இவருக்கு கோயில் உள்ளது. கும்பகோணம், தஞ்சாவூரில் இருந்து பேருந்து வசதி உண்டு. காவிரியாற்றின் தென்கரையில் உள்ள தலம் இது. ‘திருஅரதைப் பெரும்பாழி’ எனப்பட்ட இத்தலம் சம்பந்தரால் பாடல் பெற்றது.
பிரம்மா, மகாவிஷ்ணுவுக்கு இடையே  யார் உயர்ந்தவர் என்ற விவாதம் எழுந்தது. சிவனின் திருவடி அல்லது திருமுடியை யார் முதலில் தரிசிக்கிறாரோ, அவரே உயர்ந்தவர் என தீர்மானித்தனர். அன்னப்பறவையின் வடிவம் எடுத்த பிரம்மா திருமுடியைக் காண ஆகாயத்தில் பறக்கத் தொடங்கினார்.
மகாவிஷ்ணு பன்றி வடிவெடுத்து பாதாளத்தைக் குடைந்தபடி சென்றார் சிவனின் திருவடிகளைக் காண!
திருமுடி வளர்ந்து கொண்டே போனதால் பிரம்மாவால் செல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் சோர்ந்த பிரம்மா,  எதிரில் வந்த தாழம்பூவைக் கண்டார். தான் திருமுடியைக் கண்டுவிட்டதாக பொய் சொல்லும்படி வேண்டினார். அதுவும் சம்மதித்து சிவனிடம் பொய் சொன்னது. பொய் சொன்ன பிரம்மாவுக்கு கோயில் கிடையாது என்றும், சிவபூஜைக்குத் தாழம்பூ பயன்படாது என்றும் சபித்தார் சிவன்.
பாதாளத்தைத் துளைத்த விஷ்ணுவாலும் திருவடிகளைக் காண முடியவில்லை.  அதுவும் நீண்டு கொண்டே போனது. ஒரு கட்டத்தில் தோல்வியை ஒப்புக் கொண்ட விஷ்ணு பாதாளத்தில் இருந்து மேலே வந்தார்.
இந்தப் புராணம் நமக்குத் தெரிந்ததுதான்.
இதற்கும் அரித்துவாரமங்கலத்துக்கும் என்ன தொடர்பு என்று தானே யோசிக்கிறீர்கள்?
இன்னொரு முறை ஊரின் பெயரை சொன்னால் புரியும்.
அரி (விஷ்ணு)  துவார மங்கலம் (ஊர்). அதாவது அரியான மகாவிஷ்ணு துவாரமிட்டு துளைத்துச் சென்ற ஊர்.
புரிகிறதா? இங்கிருந்து தான் விஷ்ணு பாதாளம் புறப்பட்டார். இதை நிரூபிக்கும் விதமாக சிவன் திருநாமம் பாதாளேஸ்வரர், பாதாளவரதர் என்று வழங்கப்படுகிறது.   
விஷ்ணு துவாரமிட்ட பள்ளம் கருவறையில் உள்ளது. இதன் வழியாக உள்ளே சென்ற விஷ்ணு, இதே துவாரத்தின் வழியே மீண்டும் வந்தார். அர்ச்சகரின் அனுமதியுடன்  தரிசிக்கலாம்.  
கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கோயில் உள்ளது. கோயிலுக்கு எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது.
விநாயகர், பதஞ்சலி, வியாக்ரபாதர், நடராஜர், காசி விஸ்வநாதர், சூரியன், சந்திரன், பைரவர், சப்தமாதர் சன்னதிகள் உள்ளன. தல விருட்சம் வன்னி மரம்.
மூலவர் பாதாளேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கியுள்ளார். சிவனின் அடியைக் காண முடியாத அளவுக்கு இந்த திருமேனியின் அடிபாகம் பாதாள லோகத்திலும் நீண்டிருப்பதாகச் சொல்வர்.  இவரை வழிபட்டால் கடன் பிரச்னை தீரும்.
பாதாளேஸ்வரரைத் தரிசித்தால் கிரகதோஷம் நீங்குவதால் நவக்கிரக சன்னதி கிடையாது.
ஈசனுக்கு வலப்பக்கம் அலங்காரவல்லி அம்மன் சன்னதி உள்ளது. சுவாமிக்கு வலப்பக்கம் அம்மன் இருப்பதை ‘திருமணக் கோலம்’ என்பர். இந்த அம்மனை வழிபட்டால் நல்ல மணவாழ்க்கை அமையும். அம்மனுக்கு எதிரில் தனிகோபுர வாசல் உள்ளது.
பாதாளேஸ்வரர், அலங்காரவல்லியை தரிசிப்போம்; நல்வாழ்வு பெறுவோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar