Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நம்மை காப்பாற்றும் நன்மை நன்றியுடன் இருங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்பும்.. கோபமும்....
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2022
11:03


கொடுங்கோல் அரசர் ஆசையாக பருந்து ஒன்றை வளர்த்து வந்தார். பருந்தும் அவர் மீது உயிரையே வைத்திருந்தது. தான் எங்கு சென்றாலும் கூடவே பருந்தையும் அழைத்துச் செல்வார். இப்படி ராஜபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தது பருந்து.
ஒருநாள் அரசர் தான் வளர்த்து வரும் பருந்துடன் வேட்டைக்கு சென்றார். அப்போது அவருக்கு தாகம் எடுத்தது. அப்போது பாறை ஒன்றில் நீர் வழிவதை பார்த்ததும், தன்னிடம் இருந்த குவளையில் பிடிக்க சென்றார். பருந்து  குவளையை தட்டி விட்டது.
‘என்னடா... இது கைக்கு எட்டியது இப்படி வாய்க்கு எட்டாமல் போய் விட்டதே’ என வருத்தப்பட்டார். இருந்தாலும் பருந்தின் தலையை அன்பாக தொட்டார். ஏதோ தெரியாமல் செய்துவிட்டது என அதன்மீது பரிதாபப்பட்டார்.
பின் மீண்டும் தண்ணீரை தட்டிவிட்டது.  
இதனால் கோபம் அடைந்து அதன் தலையை வெட்டினார். ஒருவிதத்தில் கோபம் அடங்கினாலும் தாகம் அடங்கவில்லை. அப்போது திடீரென நீர் வருவது நின்றது. ‘தண்ணீர் ஏன் நின்றது’ என பார்ப்பதற்காக பாறையின் மீது ஏறினார். தண்ணீர் தேங்கிய இடத்தில் கருநாகம் இறந்து கிடந்தது. அப்போதுதான் அவர் உண்மையை உணர்ந்தார். ‘என் உயிரை காப்பற்றிய பருந்தை கொன்று விட்டேனே’ என அழுதார்.
பருந்தின் தியாகத்தை போற்றும் வகையில் அரண்மனையில் தங்கத்திலான பருந்து சிலையை வைத்து, அதன் சிறகில்  வாசகங்களை எழுதினார்.  
1. கோபத்தில் செய்யக்கூடிய எந்த செயலும் துன்பத்தையே தரும்.
2. உன் மீது அன்பானவர்கள் பிடிக்காத செயல்களை செய்தாலும், உனது நன்மைக்காகவே செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்.  
பார்த்தீர்களா... இதுபோல் நமக்கும் அன்றாட வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கும். பெற்றோர், நண்பர்கள் என பலரும் நமக்கு பிடிக்காததை செய்திருப்பர். அதற்காக அவர்கள் மீது நாம் கோபப்படவும் செய்திருப்போம். இனியாவது அவர்கள் எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பதை ஆராய்ந்துதான் பாருங்களேன்.
அன்பை மறக்க வைப்பது கோபம். கோபத்தை மறக்க வைப்பது அன்பு. இதில் எது வேண்டும் உங்களுக்கு... 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar