Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நந்தி இடத்தில் நாராயணன் திருமணக்கோலத்தில் தெய்வானை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருப்பரங்குன்றத்தில் கங்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2022
12:03


சிவபூஜையின் போது தவறு செய்யும் முனிவர்களை சிறை பிடித்தது கற்கிமுனி என்ற பூதம். ஆயிரம் முனிவர்களை சிறை பிடித்து அவர்களை விழுங்க வேண்டும் என்பது அதன் நோக்கம். ஒருவழியாக 999 முனிவர்கள் அகப்பட்டனர். இன்னும் ஒருவரைப் பிடிக்க பூதம் காத்திருந்தது. இந்த சமயத்தில் திருப்பரங்குன்றம் வந்தார் நக்கீரர். சரவணப் பொய்கையில் நீராடிய அவர் ஒரு ஆலமரத்தடியில் சிவபூஜை செய்தார். அந்த மரத்தின் இலைகள் காற்றில் உதிர்ந்தால் பறவையாகவும், நீரில் விழுந்தால் மீனாகவும் மாறி விடும் தன்மை கொண்டவை. நக்கீரர் பூஜை செய்த நேரத்தில் ஆலிலை ஒன்று நீரில் பாதியும், தரையில் பாதியுமாக விழுந்தது. ஒரு பாதி மீனாகவும், மறு பாதி பறவையாகவும் மாறி ஒன்றையொன்று இழுத்தது. இந்த அதிசயம் கண்ட நக்கீரர் பூஜையை மறந்து வேடிக்கை பார்த்தார். இது தான் சமயம் என பூதம் அவரையும் பிடித்த சிறையில் அடைத்தது. சிறையில் இருந்த 999 முனிவர்களும், “நக்கீரரே... ஆயிரத்தில் ஒருவர் குறைவாக இருந்ததால் இதுவரை நாங்கள் உயிருடன் இருந்தோம். இப்போது ஆயிரம் ஆகி விட்டதால் பூதத்துக்கு இரையாகப் போகிறோம்” என வருந்தினர். உடனே நக்கீரர் முருகன் மீது ‘திருமுருகாற்றுப்படை’ பாடினார். முருகன் அங்கு தோன்றி பூதத்தைக் கொன்று முனிவர்களைக் காப்பாற்றினார். பூதம் தன்னைத் தீண்டிய பாவம் தீர நக்கீரர் கங்கையில் நீராட விரும்பினார். வேலால் பாறையைக் கீறிய முருகன் கங்கை தீர்த்தத்தை வரவழைத்தார். பாவம் விலக நீராடிய நக்கீரர் முருகனை வணங்கினார். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள பஞ்சாட்சர பாறையில் இந்த கங்கை தீர்த்தம் உள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar