Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வேலையை காதலியுங்கள் உண்மையான தலைவன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சுகமான வாழ்வு தரும் சுக்கிரத்தலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2022
02:03


மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய, சுக்கிரன் பலமாக இருப்பது அவசியம். சுக்கிரன் பலமற்று இருந்தால் திருமணம் தாமதம் ஆவதுடன் இல்லற வாழ்விலும் பிரச்னைகள் உருவாகும். இல்லறத்தில் இனிமை சேர்க்க காத்திருக்கிறார் தென்காசி மாவட்டம் கரிவலம் வந்த நல்லுார் பால்வண்ணநாதர். சுக்கிரனால் வழிபட்ட இவரை வெள்ளியன்று தரிசித்தால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.  
அசுரர்களின் குலகுருவாக இருந்தவர் சுக்கிராசாரியார். இவர் அசுரர்கள் சாகாவரம் பெற்று வாழ வேண்டும் என விரும்பினார். அதற்காக களாவனம் என்னும் இப்பகுதியில் பால்குளம் ஒன்றை உருவாக்கினார். இதையறிந்த தேவர்களின் தலைவன் இந்திரன் சிவனை வேண்டினார். அசுரர்களின் வலிமையைக் குறைக்க எண்ணிய சிவன், அந்தணச் சிறுவன் வடிவில் தோன்றி பால்குளத்தில் மூழ்கி எழுந்தார். இதை ஞானதிருஷ்டியால் அறிந்த சுக்கிராசாரியார் சிறுவனை விரட்ட அவன் களாவனத்திற்குள் ஓடி மறைந்தான். அந்த இடத்தில் சுயம்பு வடிவில் சிவலிங்கம் இருப்பதை சுக்கிராச்சாரியார் கண்டு வழிபட்டார். அவரே ‘பால்வண்ண நாதர்’ என்னும் பெயரில் இங்கு இருக்கிறார். அம்மனின் திருநாமம் ஒப்பனையம்மன்.
  புராண காலத்தில் சாபம் ஒன்றின் காரணமாக இந்திரன், அவனது மகன் ஜெயந்தன், அவர்களின் வாகனமான ஐராவதம் என்னும் யானை மூவரும் அலைந்து திரிந்தனர். களாவனத்தில் ஒருவரை ஒருவர் அறியாத நிலையில் பால்வண்ணநாதரை வழிபட்டு விமோசனம் பெற்றனர். யானை(கரி) வலம் வந்து சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் ‘கரிவலம் வந்த நல்லுார்’ எனப் பெயர் பெற்றது. பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலமாகும்.  
   தனித்தனி சன்னதிகளில் சுவாமி, அம்மன் உள்ளனர். விநாயகர், வீரசண்முகர்,  துர்கை, தட்சிணாமூர்த்தி, முகலிங்கநாதர், நவக்கிரகம் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. நன்னீர்த்துறை, சுக்கிர தீர்த்தம் இங்குள்ளன. தலவிருட்சமான ‘திருக்களா’ மரம் பூப்பதோ காய்ப்பதோ இல்லை. மேற்கு நோக்கியபடி சிவன் (இலக்குமணேஸ்வரர்) கோயில் ஒன்றும் இங்குள்ளது.
எப்படி செல்வது:
* சங்கரன் கோவிலில் இருந்து 11 கி.மீ.,
* ராஜபாளையத்தில் இருந்து 21 கி.மீ.,
ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலரும் அந்த வியாபாரியைபோலவே இருக்கிறோம். எப்படி என்று கேட்கிறீர்களா... கடந்த காலத்தை நினைத்து வருந்துகிறோம். எதிர்காலத்தை எண்ணி வியக்கிறோம். சரி நிகழ்காலத்தில் வேலை செய்கிறோமா என்றால் அதுவும் இல்லை. செக்குமாடு மாதிரி திரும்பத் திரும்ப ஒரே வேலையை ஆர்வம் இல்லாது செய்வதுதான் இதற்கு காரணம். நிகழ்காலத்தில் வாழுங்கள். வேலையை காதலியுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar