Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வீட்டில் சுவாமி சிலை இருக்கலாமா? ஒளியாக திகழ்பவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அப்பாலும் அடிசார்ந்த அடியார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2022
06:08

ஆன்மிக பூமியான நம் நாட்டில் பிறந்தவர்கள் மட்டுமே பக்தர்கள் எனக் கருத தேவையில்லை. நல்ல குருநாதரைத் தேடி பக்தியுடன் இங்கு வந்த வெளிநாட்டினரும் உண்டு. இதனால் தான் ‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரதநாடு’  ‘மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன்னாடு’  ‘பூரண ஞானம் பொலிந்த நன்னாடு’  என்றெல்லாம் மகாகவி பாரதியார் பாடினார். அந்த வகையில் இங்கு வந்த இத்தாலியப் பெண்தான் யுஜீனியா. சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் தங்கியிருந்த காஞ்சி மஹாபெரியவரைச் சந்தித்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை, ’’மெழுகில் வார்க்கப்பட்ட பொன்நிறச் சிலை போல சுவாமிகள் இருந்தார். அருகில் நின்று தரிசித்த போது கண் முன்னே தீபச்சுடர் பிரகாசிப்பதை போல பரவசம் அடைந்தேன். அவரது தோற்றம் சாதாரண மனிதரைப் போல வெறும் பவுதீக உடலாகத் தோன்றவில்லை. ஒளி மிக்க ஆன்மா குடியிருப்பதால் ஸ்படிகம் போல மேனி காட்சியளித்தது’’  என்கிறார்.    
பயணத்தை முடித்து மறுநாள் தன் நாட்டுக்கு புறப்படத் தயாரானார் அப்பெண். அன்றிரவு மழை பெய்யவே சேற்றில் தடுமாறி விழுந்த அப்பெண்ணுக்கு விலா முதல் குதிங்கால் வரை கடும்வலி ஏற்பட்டது. பயணம் மேற்கொள்வது என்ற கவலையுடன் படுத்திருந்த போது, ‘‘தன் சிறகுகளால் அணைத்துக் கொள்வார்; அதற்குள் நீ சுகமாய் இருப்பாய்’’   என்ற வசனம் அவரது நினைவுக்கு வந்தது. பொழுது விடிந்ததும் மஹாபெரியவரை தரிசிக்க புறப்பட்டார். வலியின்றி இயல்பாக நடக்க முடிந்தது. சுவாமிகளின் முன் சப்பணமிட்டு கீழே அமர்ந்தார். தாயின் மடியில் அமர்ந்த குழந்தையாக தன்னை உணர்ந்தார். சுவாமிகளைத் தரிசிக்க பக்தர்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். சிறுவர்கள் விளையாடிக் கொண்டும், பறவைகள் சப்தமிட்டபடியும் இருந்தனர். இரைச்சல் மிக்க இந்த சூழலிலும்  அப்பாலும் அடிசார்ந்த இந்த வெளிநாட்டுப் பக்தையின் மனதில் அமைதி நிலவியது. மஹா பெரியவரை சரணடைந்தால் அமைதியும், நிம்மதியும் நமக்கும் சாத்தியமானதே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar