சொர்க்கம் செல்கின்றவர்கள் யார் யார் என பட்டியலிடுகிறது மகாபாரதம். பொறுமை, மனஉறுதியும் கொண்டவர், வாக்கு தவறாதவர், மது,மாமிசம், பிற பெண்கள் மீது நாட்டம் கொள்ளாதவர், கேட்பவர்களுக்கு உணவு,உடையும் தருபவர், எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாதவர், பெற்றோருக்கு தொண்டு செய்பவர், குற்றவாளிகளிடத்திலும் அன்பு காட்டுகிறவர், சோலை,கிணறு, தண்ணீர்ப்பந்தல், தங்குமிடம் ஆகியவற்றை நிறுவுகிறவர், கோபத்தை ஜயித்தவர் போன்றோர்கள் எந்த குலத்தைச் சார்ந்தவர்களானாலும், அவர்கள் சொர்க்கம் செல்கிறார்கள் என்கிறார் பீஷ்மர்.