Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வெண்ணெய் உருகினால்... கடன் குறையும் தினந்தோறும் படியுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கண்ணமங்கைக்கு வந்தால் திருமணம் கைகூடும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2022
06:08

கண்ணமங்கைக்கு உள்ளன்போடு ஒரு தரம் வாங்க! கண்டிப்பாக கல்யாணம் நடக்குமுங்க! ஏன் சொல்றோம் தெரியுமா இத்தலத்தில் தான் பெருமாள் வந்து மகாலட்சுமியை திருமணம் செஞ்சுகிட்டாரு... தரிசிப்போம்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் திருக்கண்ணமங்கை என்னும் ஊரில் உள்ளது பக்தவத்சலப்பெருமாள் கோயில்.  108 திவ்யதேசங்களிலும், பஞ்சகிருஷ்ண தலங்களிலும் இக்கோயில் ஒன்றாகும். ஆழ்வார்கள் பாடிய பாடல்களை
(பாசுரங்கள்) தொகுத்தவர் நாதமுனிகள். அவரது மாணவர் திருக்கண்ண மங்கையாண்டான். இவர், இங்குள்ள பெருமாளுக்கு தொண்டு செய்து வாழ்ந்த தலம் என்பதால் இவ்வூருக்கு அவரது பெயரே விளங்குகிறது.
மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப்பெருமாளை திருமணம் செய்ததால் இத்தலம் லட்சுமி வனம் என்றும் அழைக்கின்றனர். பெருமாளின் திருமணத்திற்கு வந்த முனிவர்கள், தேவர்கள் இன்றும் தரிசிக்க தேனீக்கள் வடிவில் உள்ளனர்.(தற்போதும் தாயார் சன்னதிக்கு வடபுறம் தேன்கூடு உள்ளது) முன்னொரு சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்குள்ள புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான். பெருமாள் உத்பல விமானத்தின்கீழ் அருள்பாலிக்கிறார். பிரம்மா, கவுதமர், வசிட்டர், பிருகு, திருமங்கையாழ்வார் வழிபாடு செய்துள்ளனர்.  
இக்கோயிலில் ராஜகோபுரத்தை அடுத்து பலிபீடம், கொடிமரம் ஆகியவை உள்ளன. பிரகாரத்தில் ஆழ்வார்கள், அபிஷேகவல்லித்தாயார், வசந்த மண்டபம், ஆண்டாள், ஹயக்ரீவப்பெருமாள், மணவாளமாமுனிகள் சன்னதிகளும் உள்ளன. மூலவருக்கு முன் கருடாழ்வாரும்,கோயிலுக்கு எதிரே அனுமான் சன்னதியும் உள்ளது.
இத்தலத்தில் உள்ள விமானம், மண்டபம்,வனம்,ஆறு,கோவில்அமைவிடம்,ஊர்,புஷ்கரணி ஆகியவற்றை தரிசித்தால்  மரணமில்லா வாழ்வைத்தரும் என்பதால் சப்தமிர்த தலம் என அழைக்கப்படுகிறது.

எப்படி செல்வது
கும்பகோணத்திலிருந்து 25 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar