ஆதரவற்றோர் இல்லங்களை நிர்வகித்து வந்தார் ஒருவர். பல்வேறு நிறுவனங்களை அணுகி உதவி பெறுவதில் அவர் முனைப்புடன் செயல்பட்டார். இவரிடம் ஒரு தீயகுணமும் இருந்தது. வயது முதிர்ந்த தன் பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமையை அவர் செய்யவில்லை. வறுமையில் வாடும் தன் சகோதரர்களின் சுக நலனை விசாரிக்ககூட அவருக்கு மனம் இல்லை. பெற்றோர், உடன்பிறந்தவர்களுக்கு முதலில் உதவுவதுதான் மேலானது.