* ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்கே உன்னை அர்ப்பணி. உனக்கு ஆதரவான காலம் வரும். * எல்லோரும் கடவுளின் குழந்தைகள். ஆதலால் எதையும் செய்யக்கூடிய ஆற்றல் நம்மிடம் உள்ளது. * தியாகம் செய்தால்தான் மகத்தான செயல்களை செய்ய முடியும். * உன் வலிமையைக் குறித்து சிந்திப்பதுதான், உன் பலவீனம் நீங்குவதற்கு பரிகாரம். * நல்ல எண்ணம் கொண்டவர்கள் கடவுளை காணும் பாக்கியம் பெறுவர். * பொறுமையோடும், உறுதியோடும் வேலை செய்வதுதான் வெற்றிக்கு உரிய ஒரே வழி. * வாழ்க்கை என்பது போர்க்களம். எதையும் எதிர்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள். * பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தால், கடவுளும் மகிழ்ச்சி அடைவார். * மனம் ஒருமுகப்பட்டால் கடினமான விஷயத்தைக்கூட எளிதாக செய்யலாம். * அயராது உழைத்தால் நீ விரும்பியதை அடையலாம். * துாய்மையும் நேர்மையும் உன்னிடம் இருந்தால் எல்லாம் சரியாக அமையும். * தைரியமாக முன்னேறிச் செல். ஒருநாள் வெற்றி கிடைத்தே தீரும். * பூமி போல பொறுமை மிக்கவரை உலகம் மதிக்கும்.