கல்வி என்பதற்கு தோண்டுதல் என்பது பொருள். கல் எனும் சொல்லில் இருந்து தோன்றியது கலப்பை என்னும் சொல். இந்தக் கருவி நிலத்தை பண்படுத்துவது போல கல்வியும் நம் மனதை பண்படுத்துகிறது. கல்வியின் சிறப்பை முருக பக்தரான குமரகுருபரர், அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும்புறங்கடை நல்லிசையும் நாட்டும் - உறும் கவலொன்றுஉற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லைசிற்றுயிர்க்கு உற்ற துணை
இப்பாடலின் பொருள்: அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் தருவது கல்வி. புகழ் மிக்க வாழ்வளிக்கும். துன்பம் வரும்போது துணைநிற்கும். சில ஆண்டுகள் மண்ணில் வாழும் மனிதனுக்கு கல்வியே உற்ற துணை. எனவே குழந்தைகளுக்கு கல்வியை கொடுப்போம். அதுவே அவர்களுக்கான சிறந்த சொத்து.