ஒருவர் இடைவிடாமல் கடவுளின் நாமத்தை சொன்னால் நினைத்தது எல்லாம் கைகூடும். கேட்டது கிடைக்கும் என்கிறார் தியாகராஜ தேசிகர். இவர் கும்பகோணம் சுவாமிமலையை சேர்ந்தவர். இவர் இயற்றிய நுால் சுவாமிமலை நவரத்னமாலை. இது ஒன்பது பாடல்களை கொண்டது. இதில் இடம் பெற்றுள்ள கீழ்க்கண்ட பாடலை பாடினால் நினைத்தது கைகூடும்.
‘‘ஒரு தரம் சரவணபவா என்று சொல்பவர் உள்ளத்தில் நினைத்த எல்லாம் உடனே கைகூடும் என வேதங்கள் மொழியுதே உண்மை அறிவான பொருளே ! பரிவாகவே அனந்தந் தரம் சரவணபவா என்று நான் சொல்லியும் பங்குமிக காங்கேயா! அடியேன் எண்ணியது பலியாதிருப்பது ஏனோ! குருபரா! முருகய்யா! கந்தா! கடம்பா! சொல்குமரா! குகா! சண்முகா! கோலாகலா! வெற்றிவேலா! எனக்கருள் கொடுத்தாளவை முத்தய்யனே! மருமலர்க்குழல் அழக! தேவகுஞ்சரி வள்ளி மணவனே! என் துணைவனே! வண்ண மயில் வாகனா! பொன்னேரகப்பதியில் வளர் சாமிநாதகுருவே!! ’’