வாணிபத்தில் சிறந்த நகரம் துாத்துக்குடி. இதன் மையப்பகுதியில் உள்ளது சங்கர ராமேஸ்வரர் கோயில். இதை ஒருமுறை தரிசித்தாலும் சவுபாக்கியம் உண்டாகும். சூரசம்ஹாரத்தில் வெற்றி பெற்ற முருகனைக் காண வந்த பார்வதியும், சிவனும் சோலை ஒன்றில் தங்கினர். அப்போது ‘வேதத்தின் பொருளை உபதேசியுங்கள்’ என பார்வதி வேண்டினாள். இப்பகுதியில் கேட்கும் அலைஓசை, பனை ஓலையின் சலசலப்பு, குயவன் பானை செய்யும் போது ஏற்படும் ஓசைகளை அடக்கி மந்திர உபதேசம் செய்தார் சிவன். அதனால் இப்பகுதிக்கு திருமந்திரநகர் எனப் பெயர் வந்தது இந்த புராண வரலாற்றின் அடிப்படையில் கஸ்யப முனிவர் தலைமையில் கவுதமர், கவுசிகர், பரத்வாஜர், அத்ரி ஆகியோர் திருச்செந்துார் முருகனை வழிபட்டு வரும் வழியில் இங்கு சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தனர். அதுவே பிற்காலத்தில் சங்கர ராமேஸ்வரர் கோயிலாக மாறியது. இப்பகுதியை ஆண்ட குலசேகர மன்னர் குழந்தைப்பேறுக்காக வாஞ்சா புட்கரணி தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வழிபட்டார். வேண்டுதல் நிறைவேறியதும் திருப்பணி செய்தார். வேண்டிய வரங்களை தரும் பாகம்பிரியாம்பிகை இங்கு தெற்கு நோக்கி இருக்கிறாள். விநாயகர், சண்முகர், சமயக்குரவர், சந்தானக்குரவர், மீனாட்சி, சொக்கநாதர், பைரவர் சன்னதிகள் உள்ளன. கோயிலுக்கு நேர் வடகிழக்கு திசையில் தெப்பம் உள்ளது. தல விருட்சம் வில்வமரம். தீர்த்தம் வாஞ்சா புட்கரணி.
எப்படி செல்வது துாத்துக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,