* நேர்மையாக வாழ நினைத்தால் உயர்வு தானாக தேடி வரும். * விரோதியாக இருந்தாலும் பசிப்பவருக்கு உணவு கொடுங்கள். * அசல், போலி எது என தெரிந்து கொண்டு பழகுங்கள். வாழ்வில் இலக்கை அடைவீர்கள். * கருணைத்தன்மையுடன் இருங்கள். மலை போல் வந்த அத்துன்பம் பனி போல் விலகும். * ஒருவருடைய ஒழுக்கத்தால் அவரது சமூகமே சிறந்து விளங்கும். * மரணத்தைக் கண்டு அஞ்சாதீர்கள். * நன்மை தரும் எண்ணங்களை மட்டும் நினையுங்கள், அச்சொற்களையே பேசுங்கள். அதற்குரிய செயல்களையே செய்யுங்கள். – பொன்மொழிகள்.