நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், புருவ மத்தியில் அக்னியும் உள்ளன. நரசிம்மம் என்றால் ஒளிப்பிழம்பு என பொருள். இவரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனிக்கிழமைகளும், சுவாதி நட்சத்திரமும், தினமும் மாலை வேளையும் (4:30 – 6:00 மணி) ஏற்றவை. நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம், இளநீ்ர், பழவகைகள் படைத்து வணங்கினால் முக்கண் நாயகனாகிய நரசிம்மரின் அருள் கிடைக்கும்.