Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
வாழ வைக்கும் வாழை பகவதிக்கு வில்லுப்பாட்டு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒளிமயமான எதிர்காலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2023
05:06


விழுப்புரம் சுப்பிரமண்ய சாஸ்திரிகள், கல்வித் துறையில் பள்ளிகளின் மேற்பார்வையாளராக இருந்தவர். அவருடைய இரண்டாவது புதல்வர் சுவாமிநாதன். காஞ்சி மகாபெரியவருக்கு இளமையில் சூட்டப்பட்ட பெயர் அது. ‘விளையும் பயிர் முளையிலே’ என்பதற்கேற்ப சிறுவயதிலிருந்தே சுவாமிநாதன், அறிவுக்கூர்மையும், சாதுர்யமும் மிக்கவராகத் திகழ்ந்தார். சாஸ்திரிகள் திண்டிவனத்தில் பணியாற்றியபோது, சுவாமிநாதன் அங்கிருந்த ஆற்காடு அமெரிக்கன் மிஷன் ஹை ஸ்கூலில் இரண்டாவது பாரம் படித்து வந்தார். அப்போது, கிறிஸ்தவ மத நுõலான பைபிளைப் படித்து தேர்ச்சி பெற்றதால் ஆண்டுவிழாவில் முதல்பரிசு பெற்றார். எல்லா பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்று வகுப்பில் சிறந்த மாணவனாகவும் விளங்கினார். இதனால், ஏராளமான பரிசுகளைப் பெற்றார். பள்ளி ஆசிரியர்கள் சுவாமிநாதன் மீது அளவற்ற அன்பும், விருப்பமும் கொண்டிருந்தனர். சுவாமிநாதன் மூன்றாம் பாரம் படித்த போது, மாணவர்கள் கல்வித்திறனைச் சோதிக்க கல்வித்துறை உதவி இன்ஸ்பெக்டர் மஞ்சக்குப்பம் சிங்காரவேலு முதலியார் அமெரிக்கன் மிஷன் பள்ளிக்கு வந்திருந்தார்.சுவாமிநாதன் கேட்ட கேள்விகளுக்கு தங்கு தடையின்றி அழகாகப் பதிலளித்தார். சுவாமிநாதனின் தீட்சண்யமான முகத் தோற்றத்தைக் கண்ட அந்த அதிகாரி, வியப் பில் ஆழ்ந்தார். சுவாமிநாதனை அழைத்துச் சென்று, அங்குள்ள மற்ற ஆசிரியர்களிடமும், மேல் வகுப்பு பயிலும்மாணவர்களிடமும்அறிமுகப்படுத்தினார். அந்த மாணவர்களைக் கொண்டே, சுவாமிநாதனிடம் கேள்விகள் கேட்கும்படி அதிகாரி சொல்ல, அவற்றுக்குமாணவரான சுவாமிநாதன் சிறப்பாகப் பதில் அளித்தார். ஆச்சரியப்பட்டஅதிகாரியிடம், ஆசிரியர்கள், சுவாமிநாதனின் தந்தை சுப்பிரமண்ய சாஸ்திரிகளும் கல்வித்துறையில் பணியாற்றும் விஷயத்தை தெரிவித்தனர். தனக்கு கீழ் பணியாற்றும் சுப்பிரமண்யசாஸ்திரிகளின் மகன் தான் இந்த மாணவன் என்பதை அறிந்ததும், “உமது புதல்வர் பெரிய மேதாவியாக எதிர்காலத்தில் விளங்குவார். ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது,” என்று கூறி அந்த அதிகாரி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  பிற்காலத்தில் இந்த சுவாமிநாதனே உலகமே வணங்கும் ஜகத்குருவானார். காஞ்சிப்பெரியவராக, நம் மனங்களில் நீங்கா இடம் பிடித்த மகானாக விளங்குகிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar