Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
கீழ்ப்படிந்து நடப்போம் இருவரில் சிறந்தவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெண்களின் கவனத்திற்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2023
04:08


ஸப்வான் பின் முஅத்தில் என்ற தோழருடன் நபிகள் நாயகம் பேசிக்கொண்டிருந்தபோது பெண் ஒருவர் வந்தார். அவரிடம், ‘‘உங்கள் அருகில் இருக்கும் ஸப்வான்தான் என் கணவர். அவர் நான் தொழுதால் அடிக்கிறார். நோன்பு நோற்றால் நோன்பை முறிக்கும்படி வற்புறுத்துகிறார். சூரியன் உதயமாகிவிடும் வரை பஜ்ர் (வைகறை) தொழுகை அவர் தொழுவதில்லை’’ என நாயகத்திடம் முறையிட்டார்.
உடனே ஸப்வானிடம் இதற்கு விளக்கம் அளிக்கும்படி கூறியதற்கு, அவர் கீழ்க்கண்டவாறு பதில் கூறினார்.
என் மனைவி சொல்வது அனைத்தும் உண்மையே. இதற்கு காரணம் அவள் தொழுகையில் இரண்டிரண்டு அத்தியாயங்கள் ஓதுகின்றாள். அதனால் நான் தடுக்கிறேன். இரண்டாவதாக அவள் தொடர்ந்து நோன்பு வைக்கிறாள். இதனால் குடும்பம் நடத்துவதற்கே சிரமமாக உள்ளது. அதுமட்டும் இல்லை. சூரியன் உதயமாகாத வரை கண்விழிக்க முடியாதவர்கள் என்ற ஒரு குடும்பத்தை சேர்ந்தவன் நான். (இரவில் மக்களின் வயல்களுக்கு நீர் பாய்ச்சும் பணியைச் செய்தவர்) என விளக்கம் கூறினார்.
இதற்கு நாயகம், ‘‘தொழுகையில் ஒரே அத்தியாயம் போதுமானது. எந்தப் பெண்ணும் தன் கணவனின் அனுமதியின்றி நோன்பு நோற்கக்கூடாது. நீர் கண் விழிக்கும்போது தொழுது கொள்ளும்’’ என்றார்.
இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான்.  
கட்டாயக் கடமையான தொழுகைகளைத் தொழவிடாமல் மனைவியை தடுக்க கணவருக்கு உரிமையில்லை. ஆயினும் கணவனின் தேவைகளை கவனத்தில் கொள்வதும், மார்க்கப்பற்றின் ஆர்வத்தால் நீண்ட அத்தியாயங்கள் ஓதாமல் மனைவி இருப்பதும் அவசியம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar