Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மீனம் : ராகு, கேது பெயர்ச்சி பலன் ரிஷபம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025 ரிஷபம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (8.10.2023 முதல் 26.4.2025 வரை)
மேஷம்: ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025
எழுத்தின் அளவு:
மேஷம்: ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025

பதிவு செய்த நாள்

03 அக்
2023
03:10

அசுவினி: முயற்சி வெற்றி பெறும்

உங்கள் ஜென்ம ராசியில் இதுவரை சஞ்சரித்த ராகு 12ம் இடமான மீன ராசியிலும், இதுவரை 7 ம் இடத்தில் சஞ்சரித்த கேது 6ம் இடமான கன்னி ராசியிலும் சஞ்சரிக்க உள்ளனர்.

ஜென்ம ராகுவும் 7ம் இட கேதுவும் கடந்த ஒன்றரை ஆண்டாக உங்கள் வாழ்க்கையை தலைக்கீழாக புரட்டிப் போட்டு இருப்பார்கள். உடல்நிலையிலும் வாழ்க்கையிலும் நிறைய சங்கடங்களை அனுபவித்திருப்பீர்கள், வாழ்க்கைத் துணையுடன் இணக்கமற்ற நிலை, நண்பருடன் சங்கடம், கூட்டுத் தொழிலில் பிரச்னை, நிறைய அவமானங்களைச் சந்தித்திருப்பீர்கள். நெருக்கமானவர்கள் உங்களை விட்டு விலகி இருப்பார்கள். கேது  உங்கள் நட்சத்திர நாதன் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ப பலன்களை வழங்க வேண்டியவராக உள்ளார்.
அக்.8,2023ல் நடைபெற உள்ள ராகு கேது பெயர்ச்சியால் இந்த நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். ராகு விரய ஸ்தானமான 12ம் இடத்தில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவு அதிகரிக்கும், புதிய வாகனம், உல்லாச பயணம் என கையிருப்பு கரையும். ஞான மோட்ச காரகனான கேது 6 ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். வீண் விவகாரங்களில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கிய குறைபாடு விலகும், எதிரிகள் விலகிச் செல்வர். எதிர்ப்பு மறையும், வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும், கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும், நண்பர்களின் உதவி உண்டாகும், குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சனியின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு 10ம் இடமான ஜீவன ஸ்தானத்தில் அக்.23, 2023 வரை வக்கிர நிலையில் சஞ்சரிப்பவர் அதன்பின் வக்கிர நிவர்த்தியாகி அங்கே ஆட்சியாக சஞ்சரிப்பதுடன் டிச.20, 2023 முதல் 11 ம் இடமான லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார் என்பதால் செல்வாக்கு அதிகரிக்கும். தடைபட்ட வருமானம் வர ஆரம்பிக்கும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பலவழியிலும் வரும். நெருக்கடி விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

குரு சஞ்சாரம்
ஏப்.30, 2024 வரை உங்கள் ஜென்ம ராசிக்குள் குரு சஞ்சாரம் செய்வது சாதகமான நிலை இல்லை என்றாலும், அக்.8, 2023 முதல் டிச.20, 2023 வரையுள்ள காலத்தில் அவர் வக்கிரம் அடைவதும்,  மே.1, 2024 முதல் இரண்டாம் இடமான குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து அங்கிருந்து பார்க்கும்  பார்வைகளால், செய்து வரும் தொழில் விருத்தியாகும், உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும், வேலைத் தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும், வருமானத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்,  உடல் நிலையில் இருந்த பிரச்னைகள் விலகும், மறைமுக எதிரிகள் விலகிச் செல்வர்.

பொதுப்பலன்
துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடையும் திறன் பெற்ற உங்களுக்கு இக்காலத்தில் பொருளாதார நிலை உயர்வதுடன் அசையும் அசையா சொத்துகள் சேரும்.  மருத்துவச் செலவு குறைவதுடன் ஆரோக்கியம் அதிகரிக்கும், குடும்பத்தில் நெருக்கடி விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தொழில்
தொழிலில் இருந்த தடைகள் விலகி லாபம் அதிகரிக்கும், புதிய வாடிக்கையாளர்கள் வந்து சேர்வார்கள். பணப்புழக்கம் மகிழ்ச்சி தரும், ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்,  புதிய முயற்சிகள் வெற்றியாகும், கம்ப்யூட்டர், எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் தொழில்களில் ஈடுபட்டோருக்கு கூடுதல் லாபம் உண்டாகும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும், மேலதிகாரிகளின் ஆதரவால் விருப்பம் நிறைவேறும், மறைமுகத் தொல்லை விலகும், உங்கள் ஆலோசனைக்கு வரவேற்பு ஏற்படும், சிலருக்கு விரும்பிய இடமாற்றம் உண்டாகும்.

பெண்கள்
வாழ்க்கைத் துணையுடன் உண்டான பிரச்னைகள் விலகும், உடல்நலக் கோளாறுகள் மறையும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் விருப்பம் நிறைவேறும், திருமண வயதினருக்கு நல்ல வரன் தேடி வரும். எதிர்பாலினரால் சிலருக்கு சங்கடம் ஏற்படும், வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் ஏற்படும்.

கல்வி
கல்வியில் இருந்த தடைகள் விலகும், ஆசிரியர்களின் ஆலோசனைகள் பயனளிக்கும். குழப்பம் நீங்கும். 2024 - 25ம் கல்வி ஆண்டில் விரும்பிய கல்வியில் சேர முடியும்.

உடல்நிலை
உடல்நிலையில் இருந்த கவலை நீங்கும், சங்கடத்தை உண்டாக்கிய நோய் கூட மருத்துவத்தால் குணமாகும், நரம்புத் தளர்ச்சி காணாமல் போகும்.

குடும்பம்
ராகுவின் லாப பார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் பொருளாதார சங்கடம் விலகும், புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றி தரும். ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆதாயம் கூடும், தடைபட்ட சுபநிகழ்ச்சி நடந்தேறும்.

பரிகாரம்: அருகம்புல் மாலை சாத்தி விநாயகரை வழிபட வாழ்வு வளமாகும்.

பரணி: நினைப்பது நிறைவேறும்

உங்கள் ஜென்ம ராசியில் கடந்த ஒன்றரை வருட காலமாக சஞ்சரித்து வரும் ராகு  12ம் இடமான விரய ஸ்தானத்திற்கும், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேது 6 ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கும் அக்.8, 2023 பெயர்ச்சி ஆகின்றனர்.

உங்கள் நட்சத்திர நாதன் சுக்கிரனுக்கு ராகு நட்பானவர் என்றாலும், உங்கள் ராசி நாதனான செவ்வாய்க்கு அவர் பகையானவர் என்பதால் மேஷ ராசிக்குள் அவர் சஞ்சரித்தவரை உங்கள் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கும், வாழ்வில் எதிர்பாராத சங்கடங்களை சந்தித்திருப்பீர்கள், அலைக்கழிப்பு, அவதி, குழப்பம் என்று நிறையவே சந்தித்திருப்பீர்கள். 7ம்  இடத்தில் சஞ்சரித்த கேதுவால் வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை, நண்பர்களிடம் கருத்து வேறுபாடு, கூட்டுத்தொழிலில் லாபமற்ற நிலை, முயற்சியில் இழுபறி, செல்வாக்கில் தடுமாற்றம், சிலருக்கு இடத்தை விட்டு இடம் மாற வேண்டிய நிலை என எதிர்மறை பலன் ஏற்பட்டிருக்கும்.

இந்த நிலையில் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் ஆடம்பர செலவு அதிகரிக்கும். சுக போகத்திற்காக கையிருப்பு கரையும், வாகனம் வாங்குவது சுற்றுலா செல்வது என பணம் செலவாகும், எதிர்பாலினராலும் சில சங்கடங்களை சந்திக்கலாம்.  அவர்களுக்காக செலவு செய்யவும் நேரலாம். வரவை விட செலவு அதிகரிக்கும். 6ல் சஞ்சரிக்கும் கேதுவால் கடந்த கால சங்கடம் நீங்கும், வழக்குகள் சாதகமாகும், நண்பர்கள் வட்டத்தில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும், வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகி மகிழ்ச்சி ஏற்படும், எதிர்ப்பு விலகும். உடலில் இருந்த நோய்கள் மருந்து மாத்திரைகளால் குணமாகும், உற்சாகத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடையும் நிலை உண்டாகும்.

சனியின் சஞ்சாரம்
விரய ஸ்தானத்தில் ராகுவும், சத்ரு ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் ஜீவன ஸ்தானத்தில் அக்.23, 2023 வரை வக்கிர கதியிலும், அதன் பின் வக்கிர நிவர்த்தியாகி அங்கே ஆட்சியாக சஞ்சரிப்பவர் டிச.20, 2023 முதல் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார் என்பதால் தொழிலில் நெருக்கடி நீங்கும், புதிய தொழில் தொடங்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும், வியாபாரத்தை விரிவு செய்யலாம். லாபம் அதிகரிக்கும்.

குரு சஞ்சாரம்
குரு  ஏப்.30, 2024 வரை உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக சஞ்சரித்தாலும், குடும்பம், பிள்ளைகள், வாழ்க்கைத்துணை, நட்புகளால் மகிழ்ச்சி உண்டாகும், பாக்கியம் அதிகரிக்கும். அக்.8, 2023 முதல் டிச.20, 2023 வரை அவர் வக்கிரமடையும் காலத்தில் இந்நிலை மாறும். மே.1, 2024 முதல் தன குடும்ப ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நெருக்கடி விலகும், குடும்பத்தில் குழப்பம் நீங்கும், பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

பொதுப்பலன்
சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்து செவ்வாயின் வலிமை பெற்ற உங்களுக்கு இக்காலம் பொற்காலமாக அமையும், வம்பு வழக்கு நோய் என்ற நிலைகள் மாறி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும், பொன் பொருள் பூமி என வாங்குவீர்கள், திருமண வயதினருக்கு மாங்கல்ய பலன் உண்டாகும், குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் ஆசை பூர்த்தியாகும், நீண்ட நாட்களாக வேலை தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலை அமையும்.

தொழில்
கடந்த கால நெருக்கடி நீங்கும், லாபம் அதிகரிக்கும், வாகனத் தொழில், ஸ்பேர் பார்ட்ஸ், ஸ்டேஷனரி, கல்விக்கூடங்கள், ஹார்ட்வேர், எலக்ட்ரானிக்ஸ் தொழிலில் லாபம் அதிகரிக்கும், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்களின் நிலை உயரும்.

பணியாளர்கள்
முதலாளியின் விருப்பப்படி செயல்பட்டு செல்வாக்கு பெறுவீர்கள், திறமைக்கேற்ற பொறுப்பு வந்து சேரும். ஊதியம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் விருப்பம் நிறைவேறும். பதவி உயர்வு கிடைக்கும். தனித்திறமை வெளிப்படும்.

பெண்கள்
வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் நீங்கும், உடலில் இருந்த பிரச்னைகள் விலகும். ஆரோக்கியமாக செயல்படும் நிலை ஏற்படும், அலுவலகப் பணியில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு உயரும், பணப்புழக்கம் அதிகரிக்கும், வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும், பிள்ளைகளின் நலனில் அக்கறை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும்.

கல்வி வித்யாகாரகனின் ராசியில் சஞ்சரிக்கும் கேதுவால் படிப்பில் அக்கறை அதிகரிக்கும், ஆசிரியர்களின் வார்த்தையின் படி செயல்பட்டு தேர்ச்சி பெறுவதுடன் விருப்பப்பட்ட பிரிவில் இடமும் கிடைக்கும், ஒரு சிலர் வெளி நாடு, வெளி மாநிலம் என்று மேற் கல்விக்காக செல்வீர்கள்.

உடல்நிலை
ஆயுள் காரகனின் பார்வை உங்கள் அஷ்டம ஸ்தானத்தில் பதிந்தாலும், 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் பாதிப்புகள் விலகும், உடலில் இருந்த சங்கடம் நீங்கும், சுறுசுறுப்பாக செயல்படும் நிலை உண்டாகும், நீண்ட நாளாக இருந்த நோய்களுக்கு முடிவு ஏற்படும், நரம்பு சம்பந்தப் பட்ட பிரச்னை மறையும்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவின் காரணமாக புதிய சொத்து வாங்குதல், வீடு கட்டி குடியேறுதல், பொன் பொருள் சேர்க்கை என்ற நிலை உண்டாகும், புதிய முயற்சி, பிள்ளைகளின் மேற்படிப்பு, திருமணம், எதிர்பார்ப்பு நிறைவேறும்.

பரிகாரம்
துர்கைக்கு ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கேற்ற விரய ராகுவால் வரும் பிரச்னை விலகி நன்மை அதிகரிக்கும்.

கார்த்திகை: மகிழ்ச்சி அதிகரிக்கும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ராகு கார்த்திகை முதல் பாதத்தினருக்கு ஜென்ம ராகுவாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு விரய ராகுவாகவும் சஞ்சரித்து வந்தார். கேது  கார்த்திகை முதல் பாதத்தினருக்கு சப்தம ஸ்தான கேதுவாகவும் 2,3,4 ம் பாதத்தினருக்கு ருண ரோக சத்ரு ஸ்தான கேதுவாகவும் சஞ்சரித்து வந்தார். இதனால் முதல் பாதத்தினர் சங்கடங்களையும், 2,3,4 ம் பாதத்தினர் கேது பகவானால் எண்ணற்ற நன்மைகளையும் அடைந்து வந்தீர்கள். இந்த நிலையில் அக்.8,2023 அன்று நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி எத்தகைய பலன்களை வழங்கிடப் போகிறது?

உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு ராகு கேது பகைவர்கள் என்றாலும் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய ஸ்தானப் பலன்களை வழங்க வேண்டியவராகிறார்கள்.

கார்த்திகை முதல் பாதத்தினருக்கு ராகு விரய ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது  கார்த்திகை முதல் பாதத்தினருக்கு ஆறாம் இடத்திலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஐந்தாம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கேது  நன்மை வழங்க கூடியவராகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ராகு லாபங்களை வழங்கும் நிலையிலும் சஞ்சரிக்கின்றனர்.

கார்த்திகை முதல் பாதத்தினர் உற்சாகமுடன் செயல்பட்டு, எதிர்ப்புகளை வீழ்த்தி, நினைத்ததை சாதித்துக் காட்டுவர். 2,3,4 ம் பாதத்தினர் தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைய உள்ளனர், சமூகத்தில் மதிப்பு உயரும் நிலை பெறுவர். வரவுகள் பல வகையிலும் வரும். தேவையனைத்தும் நிறைவேறும்.

சனி சஞ்சாரம்: ராகு கேது பெயர்ச்சி நடைபெறும் நாளில் மகரத்தில் வக்கிர நிலையிலும், அக்.23, 2023 அன்று வக்கிர நிவர்த்தியாகி ஆட்சியாகவும் சஞ்சரிப்பவர் டிச.20, 2023 முதல் கும்ப ராசியில் சஞ்சரித்து கார்த்திகை முதல் பாதத்தினருக்கு எதிர்பார்த்த லாபங்களையும் தொழிலில் முன்னேற்றம், செல்வாக்கை அதிகரிப்பார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் சில சங்கடங்களையும், பணியிடத்தில் பிரச்னைகளையும் ஏற்படுத்துவார். வருமானத்தில் தடை, எதிர்பாராத சங்கடத்தை அதிகரிப்பார். இக்காலத்தில் எச்சரிக்கை அவசியம்.

குரு சஞ்சாரம்: மேஷ ராசியில் ஏப்.30, 2024 வரை சஞ்சரிக்கும் குரு  கார்த்திகை முதல் பாதத்தினருக்கு ஜென்ம குருவாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு விரய குருவாகவும் சஞ்சரிப்பதால் குழப்பம், செலவு, அலைச்சல் என்ற நிலை இருந்தாலும் அக்.8, 2023 முதல் டிச.20, 2023 வரை அவர் வக்கிரம் அடைவதால் பாதகமான நிலைகள் மாறும். மே1, 2024 முதல் கார்த்திகை முதல் பாதத்தினருக்கு தன, குடும்ப குருவாகவும் 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம குருவாகவும் சஞ்சரிப்பதால் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் முன்னேற்றமான நிலையும், பொருளாதாரத்தில் வளர்ச்சியும் அடைவர். மற்ற பாதங்களில் பிறந்தவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும், வேலைப்பளு கூடும் என்றாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், பருவ வயதினருக்கு திருமண யோகமும் உண்டாகும், நிதானித்து செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும்.

பொதுப்பலன்: கார்த்திகை முதல் பாதத்தினருக்கு லாபச் சனியாலும் 6 மிட கேதுவாலும் காரிய அனுகூலம் ஏற்படும், மனதில் உற்சாகம் உண்டாகும், மே1, 2024 க்குப் பிறகு வரவு அதிகரிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ராகுவாலும், தைரிய, லாப ஸ்தானங்களைப் பார்க்கும் கேதுவாலும் முயற்சிக்கேற்ற பலன் உண்டாகும், எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும், துணிச்சலாக செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள்.

தொழில்: கார்த்திகை முதல் பாதத்தினருக்கு லாபச் சனியாலும், 2, 3,4 ம் பாதத்தினருக்கு லாப ராகுவாலும் வருமானம் அதிகரிக்கும், தொழிலில் இருந்த தடை விலகும், புதிய முயற்சி வெற்றியாகும், ஏற்றுமதி. இறக்குமதி தொழில் முன்னேற்றம் அடையும்,  இன்டஸ்ட்ரியல், ஹார்ட்வேர்ஸ், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர் வணிகம் கை கொடுக்கும். எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.

பணியாளர்கள்: அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும், உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். வேலையின் அவசரம் அறிந்து செய்து முடித்து நிர்வாகத்தின் நன்மதிப்பை அடைவீர்கள், மறைமுக தொல்லை விலகும்.
பெண்கள்: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும், நட்பினால் நன்மை உண்டாகும், புதிய சொத்து சேர்க்கை ஏற்படும், உடலில் இருந்த சங்கடம் தீரும், பிற ஆண்களின் பழக்கத்தில் எச்சரிக்கை அவசியம்.

கல்வி: கார்த்திகை முதல் பாதத்தினருக்கு ஏப்.30, 2024 வரையிலும் 2,3,4 ம் பாதத்தினருக்கு ஏப்.30, 2024 முதல் சிறப்பான பலன்கள் உண்டாகும், வெளிநாட்டிற்கு சென்று கல்வி கற்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.

உடல்நிலை: முன்பிருந்த பிரச்னைகள் மாறும், உற்சாகம் அதிகரிக்கும், சோர்வு விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

குடும்பம்: நெருக்கடி விலகும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும், முயற்சியின் காரணமாக விருப்பம் நிறைவேறும்.
 
பரிகாரம்:செவ்வாயன்று கேதுவை வழிபட்டு அர்ச்சனை செய்ய நன்மை அதிகரிக்கும்.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (8.10.2023 முதல் 26.4.2025 வரை) »
temple news
கார்த்திகை;  கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ராகு கார்த்திகை முதல் பாதத்தினருக்கு ஜென்ம ராகுவாகவும், 2,3,4 ம் ... மேலும்
 
temple news
மிருக சீரிடம்: கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மிருகசீரிடம் 1 2 ம் பாதத்தினருக்கு விரய ராகுவாகவும், 3,4 ம் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: புதிய தொழில் தொடங்குவீர்கள்குருபகவானின் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த உங்களில் 1,2,3 ம் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேது பகவானை நட்சத்திர நாதனாகவும் சூரியனை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு ... மேலும்
 
temple news
உத்திரம்: கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக முதல் பாதத்தினருக்கு பாக்கிய ராகுவாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar