Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கடகம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025 கன்னி : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025 கன்னி : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (8.10.2023 முதல் 26.4.2025 வரை)
சிம்மம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025
எழுத்தின் அளவு:
சிம்மம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025

பதிவு செய்த நாள்

03 அக்
2023
03:10

மகம்: எச்சரிக்கை அவசியம்

கேது பகவானை நட்சத்திர நாதனாகவும் சூரியனை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு இதுவரை 9 ம் வீட்டில் சஞ்சரித்த ராகு காரிய தடையையும், எதிரிகளால் இடையூறையும், மற்றவர்களுக்கு கட்டுப்பட்டு செயல்படும் நிலையையும் உண்டாக்கி வந்தார். 3ம் வீட்டில் சஞ்சரித்த கேது உங்கள் நிலையில் முன்னேற்றத்தையும், வாழ்க்கையில் வளத்தையும், செயலில் வெற்றியையும், பொருளாதாரத்தில் உயர்வையும், துணிச்சலையும் உண்டாக்கி வந்தார். பொதுவாக சர்ப்ப கிரகங்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஒருவருக்கு நன்மை செய்வதில்லை. ஆனால் ஒரே நேரத்தில் இருவரும் ஒருவருக்கு பாதகமான பலன்களைத் தருவர்.

இந்த நிலையில் அக்.8, 2023 அன்று உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8 ல் சஞ்சரிக்கும் ராகுவும், 2 ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் உங்களுக்கு எத்தகைய பலன்களை வழங்கிட உள்ளனர்?

அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கும் போது உடலில் சங்கடத்தை உண்டாக்குவார், உறவுகளிடம் விரிசலை ஏற்படுத்துவார். இனம் புரியாத குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். வசதி வாய்ப்பில் குறைவு ஏற்படும். சிலருக்கு மறைமுக நோயால் சங்கடம் ஏற்படும். விஷக்கடி, மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எடுக்கும் மருந்துகளால் பாதிப்பு உண்டாகும், கணவன், மனைவி உறவில் கருத்து வேறுபாடு ஏற்படும், எதிர்பாலினரிடம் இக்காலத்தில் கவனமாக இருப்பது அவசியம். குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கும் போது, பணத்தேவைக்காக அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் தேவையற்ற சங்கடம் உண்டாகும், சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது. வார்த்தைகளால் பிரச்னை உண்டாகும்.

சனி சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் ராகு, 2ம் இடத்தில் கேது சஞ்சரிக்கும் இக்காலத்தில், 6 ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அக்.23, 2023 வரை வக்கிர கதியில் சஞ்சரிப்பவர் அதன்பின் வக்கிர நிவர்த்தியாகி அங்கே 2 மாத காலம் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். இக்காலம் மிக யோகமான காலமாக இருக்கும். மீண்டும் டிச.20,2023 முதல் 7ம் இடத்தில் கண்டச்சனியாக சஞ்சரிக்கிறார் என்பதால் இக்காலத்தில் பல பிரச்னைகள், வீண் அலைச்சல், உடல்நிலையில் பாதிப்பு, குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து வாழும் நிலை, இருக்கும் இடத்தை விட்டு வேறிடத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம், எதிர்பாலினரால் பாதிப்பை ஏற்படுத்துவார்.

குரு சஞ்சாரம்: ஏப்.30, 2024 வரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து அதிர்ஷ்டத்தை வழங்கி, சமூகத்தில் நீங்கள் எதிர்பார்த்த அந்தஸ்தை வழங்குவார். அக்.8, 2023 முதல் டிச.20, 2003 வரை அவர் வக்கிரமடையும் காலத்தில் இப்பலன்கள் மாறுபடும். மே1,2024 முதல் 10ம் வீடான ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் என்பதால் அதன்பின் சங்கடங்கள் அதிகரிக்கும். நெருக்கடி கூடும். சோதனைகளுக்கு ஆட்பட்டு அவதிக்குள்ளாக நேரிடும். ஒரு பக்கம் பணம் நெருக்கடி, மறுபக்கம் தொழிலில் முடக்கம், நஷ்டம், பிரச்னை, பணியில் நெருக்கடிகள், அதனால் குடும்பத்திலும், மனதிலும் சங்கடம் உண்டாகும்.

பொதுப்பலன்: ராகு கேது சஞ்சார நிலையுடன், டிச.20, 2023 முதல் சனியின் சஞ்சாரமும், மே1, 2024 முதல் குருவின் சஞ்சாரமும் சாதகமாக இல்லாத காரணத்தால் பணிபுரியும் இடங்களில் சங்கடங்கள் உண்டாகும். தொழிலில் தடை, முயற்சியில் பயனற்ற நிலை ஏற்படும். செல்வாக்கில் பின்னடைவும், மனதில் குழப்பமும் உண்டாகும், மற்றவரை பகைத்துக் கொள்ளாமல் சாதுர்யமாக செயல்பட்டால் சங்கடங்களில் இருந்து விடுபடலாம், உடல் நிலையில் அவ்வப்போது ஏதேனும் சங்கடம் தலைகாட்டும். புதிய முயற்சிகள் இக்காலத்தில் இழுபறியாகும்.

தொழில்: கம்ப்யூட்டர், மின்சாதனங்கள், ஆட்டோ மொபைல்ஸ், இன்டஸ்ட்ரீஸ், திரைப்படம், தொலைக்காட்சி, யூ டியூப் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்போரும் பணிபுரிவோரும் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்கள், உழைப்பில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு இடையூறுகள் ஏற்படும், எதிர்பார்ப்பு இழுபறியாகும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.

பெண்கள்: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் கனவு நிறைவேறும். உடல்நிலையில் ஒன்று விட்டு ஒன்று என்று ஏதேனும் தொல்லை உண்டாகிக் கொண்டே இருக்கும். மே1, 2024 முதல் இந்த நிலையில் மாற்றம் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகளும் சங்கடமும் எதிர்பாலினரால் தொல்லையும் அதிகரிக்கும்.

கல்வி: வாக்கு ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதும், 4ம் இடத்தின் மீது டிச.20, 2023 முதல் சனியின் பார்வை பதிவதும் கல்வி மீதான அக்கறையில் சங்கடத்தை ஏற்படுத்தும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று செயல்படுவதுடன், முழு கவனத்தையும் படிப்பில் செலுத்துவது ஒன்றே உங்களை உயர்த்தும்.

உடல்நிலை: ஆயுள் ஸ்தானமான 8ல் ராகு சஞ்சரிப்பதும், டிச.20, 2023 முதல் கண்டச்சனி வருவதும் நல்லதல்ல, இக்காலத்தில் பணிபுரியும் இடம், வாகனத்தை இயக்குவது, விஷ ஜந்துக்கள், மருந்து மாத்திரைகள் என அனைத்திலும் எச்சரிக்கை தேவை.

குடும்பம்: குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் அனுசரித்துச் செல்வதால் நண்மையுண்டாகும், பிள்ளைகள், பெரியோரால் அவ்வப்போது ஏதேனும் பிரச்னை உண்டாகும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் அதிகரிக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகும். மே1, 2024 முதல் குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் சங்கடம் விலகி சுபிட்சமான நிலை உண்டாகும்.

பரிகாரம்: காளஹஸ்திக்கு சென்று ராகு,கேது பரிகாரம் செய்வதுடன், திருநள்ளாறு நள தீர்த்தத்தில் நீராடி சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.


பூரம்: உடல்நலனில் கவனம் தேவை

சுக்கிர பகவானை நட்சத்திர நாதனாகவும், சூரியனை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு இதுவரை 9ம் வீட்டில் சஞ்சரித்த ராகு உங்கள் நிலையில் நீங்கள் எதிர்பாராத நிலைகளை உண்டாக்கினார், தொழில் வியாபாரத்தில் உங்கள் முயற்சிகள் சரிவர கை கூடாமல் போயிருக்கும், அலுவலகத்தில் செல்வாக்கிற்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கும், நெருக்கடிகளின் காரணமாக கடைசியில் கடவுளைத் தேடி சென்றிருப்பீர்கள். மூன்றாம் வீட்டில் சஞ்சரித்த கேது உங்கள் நிலையில் தைரியம் துணிச்சலை வழங்கினார், உறவுகளுடன் இருந்த சங்கடத்தை போக்கினார். வீடு, மனை, சொத்து என்பதை அடைந்திருப்பீர்கள், போட்டியாளர்கள் விலகியிருப்பர். துன்பம் என்பதையே இல்லாமல் செய்திருப்பார்.

இந்த நிலையில் அக்.8, 2023ல் உங்கள் ராசிக்கு 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் உங்களுக்கு எத்தகைய பலன் தர உள்ளனர்? 8ம் இடத்தில் ராகு சஞ்சரிக்கும் போது உடல் நிலையில் சங்கடங்களை ஏற்படுத்துவார், பணிகளிலும் நெருக்கடி உண்டாகும், மனதில் திடமான சிந்தனை இல்லாமல் போகும். தொழிலில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரும். பொதுவாக பாப கிரகம் எட்டில் அமரும் போது அனைத்திலும் தீங்கு உண்டாகும். எந்தவொரு முயற்சியும் இக்காலத்தில் தொடங்காமல் இருப்பதும், சுபவிஷயங்களை  தள்ளி வைப்பதும் நல்லது. தெய்வ நம்பிக்கை கொள்வதும், பக்தி மார்க்கத்தில் மனதை செலுத்துவதும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க உதவும். 2ம் இடத்தில் கேது சஞ்சரிக்கும் போது கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத நிலைக்கு ஆளாக்குவார்.  குடும்பத்தில் நிம்மதியைக் காண முடியாமல் போகும். பூசலும் குழப்பமும் அதிகரிக்கும், ஏதாவதொரு பிரச்னை இருந்து கொண்டே இருக்கும், பொருளாதார நெருக்கடி, வீண் செலவு, தொழிலில் தடை, வருமானத்தில் நிறைவின்மை ஏற்படும்.

சனி சஞ்சாரம்: 8ல் ராகு, 2ல் கேது சஞ்சரிக்கும் காலத்தில் 6ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் அக்.23, 2023 வரை வக்ர கதியில் சஞ்சரிப்பவர் அதன்பின் வக்கிர நிவர்த்தியாகி 2 மாத காலம் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். இக்காலத்தில் எண்ணங்கள் நிறைவேறும். எதிரிகளை வெல்வீர்கள். டிச.20, 2023 முதல் 7ம் இடத்தில் கண்டச் சனியாக சஞ்சரிக்கிறார் என்பதால் இக்காலத்தில் பல பிரச்னைகள், கருத்துவேறுபாடு, பிரிவு, வீண் அலைச்சல், தீயோர் சேர்க்கையால் அவப்பெயர், மனைவிக்கு ரோகம், வீட்டை விட்டு பிரியும் சூழல் உண்டாவதுடன் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடம் வசிக்கும்  நிலையை உருவாக்குவார்.

குரு சஞ்சாரம்: ஏப்.30,2024 வரை பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து யோகமான பலன்களை வழங்கி, எதிர்பார்த்த அந்தஸ்தையும் வழங்குவார் என்றாலும் அக்.8, 2023 முதல் டிச.20, 2003 வரை அவர் வக்ரமடையும் காலத்தில் பலன்கள் மாறுபடும். மே1, 2024 முதல் 10 ம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அதன்பின் சங்கடங்கள் அதிகரிக்கும், அரசியல்வாதிகளின் செல்வாக்கு குறையும். நெருக்கடிகள் உண்டாகும், சோதனைகளுக்கு ஆட்பட்டு அவதிக்குள்ளாக நேரும்.

பொதுப்பலன்: கவனமுடன் செயல்பட வேண்டிய காலம் இது, ராகு கேதுவால் நெருக்கடி அதிகரிக்கும் நேரத்தில் டிச.20, 2023 முதல் சனி பகவானும் சங்கடமான பலனை உண்டாக்க இருக்கிறார், அதன்பின் மே1, 2024 முதல் குருவின் சஞ்சார நிலையும் பதவி, தொழில், வருமானம் போன்றவற்றில் எதிர்மறை பலன் தரவிருப்பதால் அனைத்திலும் எச்சரிக்கை தேவை. உங்கள் செல்வாக்கிற்கும் சொல்வாக்கிற்கும் சோதனை உண்டாக்கும். அரசியல்வாதிகளுக்கும், அரசுப்பணியாளர்கள், பணியாளர்களுக்கும், ஆலோசகர்களுக்கும் இது சோதனைக் காலமாக இருக்கும்.

தொழில்: தொழிலில் பிரச்னைகளை சந்திக்க நேரும். எதிர்பார்த்த லாபம் பெற முடியாமல் போகும், வியாபாரத்தில் பின்னடைவும் வருமானத்தில் பாதிப்பும் ஏற்படும் என்பதால் செயல்களில் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம்.

பணியாளர்கள்: உழைப்பு அதிகரிக்கும், எவ்வளவுதான் உழைத்தாலும் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரும். பணிபுரியும் இடத்தில் எதிர்பாலினரால் சங்கடம் தோன்றும், கம்பெனி, வியாபார ஸ்தலங்களில் பணி புரிவோர் வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

பெண்கள்: உடல்நிலையில் சிறுசிறு பாதிப்பு உண்டாகும், குடும்பத்தின் முன்னேற்றத்தில் உங்கள் பங்கு அதிகரிக்கும், வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணம் நிறைவேறும், தனித்திறமை வெளிப்படும், மற்றவர் பாராட்டிற்கு ஆளாவீர்கள். சிலருக்கு எதிர்பாலினரால் வீண் பிரச்னை தோன்றும்.

கல்வி: சூழ்நிலையைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள், விடாமுயற்சியே வெற்றி தரும் என்ற சிந்தனை பலனளிக்கும், ஆசிரியர்களின் அறிவுரைகளை ஏற்று செயல்படுவதுடன் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெற்று மேற்படிப்பில் சேர்வீர்கள்.

உடல்நிலை: ஆயுள் ஸ்தானத்தில் ராகு, கண்டச் சனியாக ஆயுள்காரகன் சஞ்சரிப்பதால்
ஆரோக்கியத்தில் சங்கடம் உண்டாகும், மருத்துவச் செலவு கூடும். செயல்களில் முடக்கம் தோன்றும், ஒவ்வாமையால் உணவில் சங்கடம் தோன்றும். வாகன பயணத்தில் கவனம் தேவை. சிலருக்கு மறைமுக நோய்கள் தோன்றி வாட்டும்.

குடும்பம்: குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் வீண் சச்சரவு, நெருக்கடி தோன்றும்  மே1, 2024 முதல் குருவின் பார்வை அங்கே பதிவதால் நெருக்கடி விலகும். பண வரவில் இருந்த தடை விலகும், கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொன் பொருள் சேர்க்கையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: திருப்பாம்புரம் ராகு, கேதுவை வழிபடுவதுடன், திருநள்ளாறு நளதீர்த்தத்தில் நீராடி சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தானமளிக்க சங்கடம் தீரும்.


உத்திரம்: குருவருளால் குறை தீரும்

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக முதல் பாதத்தினருக்கு பாக்கிய ராகுவாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு அஷ்டம ராகுவாகவும் சஞ்சரித்து வந்தார், கேது பகவான் முதல் பாதத்தினருக்கு தைரிய ஸ்தானத்திலும்,  2,3,4 ம் பாதத்தினருக்கு குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரித்து வந்தார். இதனால் முதல் பாதத்தினர் சில சங்கடங்களை சந்தித்தாலும் அதற்கு ஈடாக நன்மைகளையும் அடைந்து வந்தனர், அதே நேரத்தில் 2,3,4 ம் பாதத்தினர் அனைத்து வகையிலும் போராட்டத்திற்கு  ஆளாயினர். இந்நிலையில் அக்.8, 2023 அன்று நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி எத்தகைய பலன்களை வழங்கப் போகிறது?

உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு ராகு, கேது பகையானவர்கள். முதல் பாதத்தினருக்கு ராகு அஷ்டம ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது முதல் பாதத்தினருக்கு குடும்ப ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம கேதுவாகவும் சஞ்சரிக்கிறார். இதனால் முதல் பாதத்தினருக்கு, அனைத்திலும் சங்கடம், நெருக்கடி, பாதிப்பு என்பதுடன் உடல்நிலையிலும் பின்னடைவு, குடும்பத்திலும் போராட்டம் என்ற நிலையும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, இடம் விட்டு இடம் மாறும் நிலையும், தீயவர்களோடு பழக்கம் கொள்ளும் சூழலும் உண்டாகும். சிலர் அவப்பெயருக்கும் ஆளாக நேரிடும். செயலில் தடை, உடல்நிலையில் சங்கடம், அன்புடன் பழகி வந்தவர்களை விட்டு விலகும் நிலையும் ஏற்படும்.

சனி சஞ்சாரம்: ராகு கேது பெயர்ச்சியாகும் நாளில் இருந்து அக்.23, 2023 வரை மகரத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பவர் அதன்பின் வக்ர நிவர்த்தியாவதுடன் டிச.20, 2023 முதல் கும்ப ராசியில் சஞ்சரிப்பவர் முதல் பாதத்தினருக்கு சப்தம ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சத்ரு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால், முதல் பாதத்தினர் உடல் ரீதியாகவும், கூட்டுத்தொழில் வகையிலும், நண்பர், வாழ்க்கைத் துணை வகையிலும்  சங்கடங்களை சந்திக்கலாம். 2,3,4 ம் பாதத்தினருக்கு நெருக்கடிகள் நீங்கும், உடல்நலக்குறைவு நீங்கும். வழக்குகள் சாதகமாகும். எதிரிகள் பலமிழந்து விலகிச் செல்வர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

குரு சஞ்சாரம்: ஏப்.30, 2024 வரை மேஷ ராசியில் சஞ்சரிக்கும் குரு முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு, எதிர்பார்த்த ஆதாயத்தை வழங்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு அஷ்டம குருவாகி சங்கடம், அவமானம், நெருக்கடியை உண்டாக்குவார். அக்.8, 2023 முதல் டிச.20, 2023 வரை அவர் வக்ரமடைவதால் இந்நிலையில் மாற்றம் உண்டாகும். மே1, 2023 முதல் சிம்ம ராசியினருக்கு 10 ம் இடத்திலும், கன்னி ராசியினருக்கு 9 ம் இடத்திலும் சஞ்சரிப்பதால், முதல் பாதத்தில் பிறந்தவர்கள் போராட்டமான நிலையையும், 2,3,4 ம் பாதத்தினர் யோகப் பலன்களையும் அடைவர்.  எதிர்பார்த்த லாபம், முன்னேற்றம் காண்பர்.

பொதுப்பலன்: எதிலும் முதன்மை பெற வேண்டும் என செயல்படும் உங்களுக்கு இக்காலத்தில் இருவித பலன்கள் உண்டாகும். முதல் பாதத்தினருக்கு அனைத்திலும் சங்கடம், நினைப்பது ஒன்று நடப்பது வேறாகவும் இருக்கும், வாழ்க்கை, தொழில், குடும்பம், பணம், ஆரோக்கியம் என அனைத்திலும் நெருக்கடி அதிகரிக்கும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ராகு கேதுவால் நெருக்கடி உண்டானாலும் சனி, குருவால் நன்மை அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் சீராகும். வழக்குகள் சாதகமாகும், எதிர்ப்பு விலகும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும், பிரச்னைகளை எதிர்கொண்டு வெற்றி பெறும் நிலை உண்டாகும்.

தொழில்: எதிர்பாராத நெருக்கடிகளை உண்டாக்கும். வாடிக்கையாளர்கள் விலகிச் செல்வர். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் அதிகரிக்கும். தொழிலில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு கவனம் மாறும். எதிர்பாலினர் வழியில் ஏற்படும் மாற்றங்கள் தொழிலிலும் எதிரொலிக்கும், ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் பின்னடைவு உண்டாகும், வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகும்.

பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். ஓய்வு எடுக்க முடியாத அளவிற்கு பொறுப்புகள் வந்து சேரும். சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்வீர்கள்/ உடன் பணிபுரிபவர்களும், மேலதிகாரிகளும் உங்களுக்கு எதிராகவே இருப்பர்.

பெண்கள்: குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும், அலுவலகப் பணியிலும் தேவையற்ற பிரச்னைகள் உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2024 மே1 க்கு பிறகு எதிர்பார்த்த நன்மை உண்டாகும். சிலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கல்வி: படிப்பில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு சிலருக்கு குடும்பச் சூழல் அமையும். திசா புத்தி பலமானவர்களுக்கு இந்நிலை இருக்காது. மே 1, 2024 முதல் குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

உடல்நிலை: உடல்நலனில் திருப்தி இல்லாமல் போகும், ஏதேனும் ஒரு நோய் அடிக்கடி ஏற்பட்டு சங்கடப்படுத்தும், உழைப்பின் காரணமாகவும் சோர்வு உண்டாகும். மருத்துவ செலவு அதிகரிக்கும்.

குடும்பம்: மே1, 2024 வரை உறவினர் வழியில் அதிருப்தி இருக்கும். வாழ்க்கைத் துணையுடனும் பிரச்னைகள் தோன்றும், தொழில், வருமானம், ஆரோக்கிய நிலைகளில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். அதன்பின் சுபிட்சநிலை உண்டாகும், பொருளாதாரம் உயரும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: காளஹஸ்தி சென்று ராகு கேதுவிற்கு பரிகார பூஜை செய்யுங்கள். துர்கை, விநாயகரை சங்கடம் தீரும்.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (8.10.2023 முதல் 26.4.2025 வரை) »
temple news
அசுவினி: முயற்சி வெற்றி பெறும்உங்கள் ஜென்ம ராசியில் இதுவரை சஞ்சரித்த ராகு 12ம் இடமான மீன ராசியிலும், ... மேலும்
 
temple news
கார்த்திகை;  கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ராகு கார்த்திகை முதல் பாதத்தினருக்கு ஜென்ம ராகுவாகவும், 2,3,4 ம் ... மேலும்
 
temple news
மிருக சீரிடம்: கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மிருகசீரிடம் 1 2 ம் பாதத்தினருக்கு விரய ராகுவாகவும், 3,4 ம் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: புதிய தொழில் தொடங்குவீர்கள்குருபகவானின் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த உங்களில் 1,2,3 ம் ... மேலும்
 
temple news
உத்திரம்: கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக முதல் பாதத்தினருக்கு பாக்கிய ராகுவாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar