Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

யசோதர காவியம் பகுதி-2
முதல் பக்கம் » யசோதர காவியம்
யசோதர காவியம் பகுதி-1
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2013
05:03

தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இந்நூல் நான்கு சருக்கங்களில் 320 விருத்தப்பாக்களால் ஆன இதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை.

இராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான். அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இது. மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல். இது ஒரு வடமொழி நூலின் தழுவல். எளிய நடையும் நயமான பாக்களும் உடைய நூல் இது. காலம் 13-ஆம் நூற்றாண்டு. இசை காமத்தைத் தூண்டும் என்பதையும், கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு.

தற்சிறப்புப்பாயிரம் - கடவுள் வாழ்த்து

1.உலக மூன்று மொருங்குணர் கேவலத்
தலகி லாத வனந்த குணக்கடல்
விலகி வெவ்வினை வீடு விளைப்பதற்
கிலகு மாமலர்ச் சேவடி யேத்துவாம்.

2 நாத னம்முனி சுவ்வத னல்கிய
தீது தீர்திகழ் தீர்த்தஞ்செல் கின்றநாள்
ஏத மஃகி யசோதர னெய்திய
தோத வுள்ள மொருப்படு கின்றதே.

அவையடக்கம்

3 உள்வி ரிந்த புகைக்கொடி யுண்டென
எள்ளு கின்றன ரில்லை விளக்கினை
உள்ளு கின்ற பொருட்டிற மோர்பவர்
கொள்வ ரெம்முரை கூறுதற் பாலதே.

நூல் நுவல் பொருள்

4 மருவு வெவ்வினை வாயின் மறுத்துடன்
பொருவில் புண்ணிய போகம் புணர்ப்பதும்
வெருவு செய்யும் வினைப்பய னிற்றெனத்
தெரிவு றுப்பதுஞ் செப்புத லுற்றதே.

நூல் - முதற் சருக்கம்-  நாட்டுச் சிறப்பு

5 பைம்பொன் னாவற் பொழிற்பர தத்திடை
நம்பு நீரணி நாடுள தூடுபோய்
வம்பு வார்பொழில் மாமுகில் சூடுவ
திம்ப ரீடில தௌதய மென்பதே.

நகரச் சிறப்பு?

6 திசையு லாமிசை யுந்திரு வுந்நிலாய்
வசை யிலாநகர் வானவர் போகமஃ
தசைவி லாவள காபுரி தானலால்
இசைவி லாதவி ராசபு ரம்மதே.

7 இஞ்சி மஞ்சினை யெய்தி நிமிர்ந்தது
மஞ்சு லாமதி சூடின மாளிகை
அஞ்சொ லாரவர் பாடலொ டாடலால்
விஞ்சை யாருல கத்தினை வெல்லுமே.

அரசனியல்பு

8 பாரி தத்தினைப் பண்டையின் மும்மடி
பூரி தத்தொளிர் மாலைவெண் பொற்குடை
வாரி தத்தின் மலர்ந்த கொடைக்கரன்
மாரி தத்தனென் பானுளன் மன்னவன்.

9அரசன் மற்றவன் றன்னொடு மந்நகர்
மருவு மானுயர் வானவர் போகமும்
பொருவில் வீடு புணர்திற மும்மிவை
தெரிவ தொன்றிலர் செல்வ மயக்கினால்.

வேனில் வரவு

10 நெரிந்த நுண்குழல் நேரிமை யாருழை
சரிந்த காதற் றடையில தாகவே
வரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகுநாள்
விரிந்த தின்னிள வேனிற் பருவமே.

வசந்தமன்னனை வரவேற்றல்

11 கோங்கு பொற்குடை கொண்டு கவித்தன
வாங்கு வாகை வளைத்தன சாமரை
கூங்கு யிற்குல மின்னியங் கொண்டொலி
பாங்கு வண்டொடு பாடின தேனினம்.

இதுவுமது

12 மலர்ந்த பூஞ்சிகை வார்கொடி மங்கையர
தலந்த லந்தொறு மாடினர் தாழ்ந்தனர்
கலந்த காதன்மை காட்டுநர் போலவே
வலந்த வண்டளிர் மாவின மேயெலாம்.

அரசனும் நகரமாந்தரும் வசந்தவிழா அயர முற்படுதல்

13 உயர்ந்த சோலைக ளூடெதிர் கொண்டிட
வயந்த மன்னவன் வந்தன னென்றலும்
நயந்த மன்னனு’ நன்னகர் மாந்தரும்
வயந்த மாடு வகையின ராயினர்.

14 கானும் வாவியுங் காவு மடுத்துடன்
வேனி லாடல் விரும்பிய போழ்தினில்
மான யானைய மன்னவன் றன்னுழை
ஏனை மாந்த ரிறைஞ்சுபு’ கூறினார்.

ஏனைமாந்தர் மன்னனிடம் மாரியின் வழிபாடு வேண்டுமெனல்

15 என்று மிப்பரு வத்தினோ டைப்பசி
சென்று தேவி சிறப்பது செய்துமஃ
தொன்று மோரல மாயின மொன்றலா
நன்ற லாதன நங்களை வந்துறும்.

இதுவுமது

16 நோவு செய்திடு நோய்பல வாக்கிடும்
ஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும்
தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல்
காவல் மன்ன கடிதெழு கென்றனர்.

அரசன் தேவிபூசைக்குச் செல்லுதல்

17 என்று கூறலு மேதமி தென்றிலன்
சென்று நல்லறத் திற்றெளி வின்மையால்
நன்றி தென்றுதன் நன்னக ரப்புறத்
தென்றி சைக்கட் சிறப்பொடு சென்றனன்.

தேவியின் கோயிலை அடைதல்
 
18 சண்ட கோபி தகவிலி தத்துவங்
கொண்ட கேள்வியுங் கூரறி வும்மிலாத்
தொண்டர் கொண்டு தொழுந்துருத் தேவதை
கண்ட மாரி தனதிட மெய்தினான்.

அரசன் மாரிதேவதையை வணங்குதல்

19 பாவ மூர்த்தி படிவ மிருந்தவத்
தேவி மாட மடைந்து செறிகழன்
மாவ லோன்வலங் கொண்டு வணங்கினன்
தேவி யெம்மிடர் சிந்துக வென்றரோ.

20 மன்ன னாணையின் மாமயில் வாரணம்
துன்னு சூகர மாடெரு மைத்தொகை
இன்ன சாதி விலங்கி லிரட்டைகள்
பின்னி வந்து பிறங்கின கண்டனன்.

21 யானிவ் வாளினின் மக்க ளிரட்டையை
ஈன மில்பலி யாக வியற்றினால்
ஏனை மானுயர் தாமிவ் விலங்கினில்
ஆன பூசனை யாற்றுத லாற்றென.

22 வாட லொன்றிலன் மக்க ளிரட்டையை
யீடி லாத வியல்பினி லில்வழி
யேட சண்ட கருமதந் தீகென
நாட வோடின னன்னகர் தன்னுளே.

அந்நகர்ச் சோலையின்கண் முனிவர்சங்கம் வருதல்

23 ஆயிடைச் சுதத்த னைஞ்ஞாற் றுவரருந் தவர்க ளோடுந்
தூயமா தவத்தின் மிக்க வுபாசகர் தொகையுஞ் சூழச்
சேயிடைச் சென்றோர் தீர்த்த வந்தனை செய்யச் செல்வோன்
மாயமில் குணக்குன் றன்ன மாதவர்க் கிறைவன் வந்தான்.

சங்கத்தார் உபவாச தவம் கைக்கொள்ளுதல்

24 வந்துமா நகர்ப்பு றத்தோர் வளமலர்ப் பொழிலுள் விட்டுச்ந்
சிந்தையா னெறிக்கட் டீமை தீந்ந்ர்த்திடும் நியம முற்றி
அந்திலா சனங்கொண்டண்ண லனசனத் தவன மர்ந்தான்ந்
முந்துநா முரைத்த சுற்ற முழுவதி னோடு மாதோ.

சிராவகர்கூட்டத்திலுள்ள இளைஞரிருவர்களின் வணக்கம்

25 உளங்கொள மலிந்த கொள்கை யுபாசகர் குழுவி னுள்ளார்
அளந்தறி வரிய கேள்வி யபயமுன் னுருசி தங்கை
யிளம்பிறை யனைய நீரா ளபயமா மதியென் பாளும்
துளங்கிய மெய்ய ருள்ளந் துளங்கலர் தொழுது நின்றார்.

சுதத்தாசாரியர் கருணையால் இளைஞரைச் சரியை செல்லப் பணித்தல்?

26 அம்முனி யவர்க டம்மை யருளிய மனத்த னாகி
வம்மினீர் பசியின் வாடி வருந்திய மெய்ய ரானீர்
எம்முட னுண்டி மாற்றா தின்றுநீர் சரியை போகி
நம்மிடை வருக வென்ன நற்றவற் றொழுது சென்றார்.

இளைஞர் சரிகை செல்லுதல்

27 வள்ளிய மலருஞ் சாந்தும் மணிபுனை கலனு மின்றாய்
வெள்ளிய துடையோன் றாகி வென்றவ ருருவ மேலார்
கொள்ளிய லமைந்த கோலக் குல்லக வேடங் கொண்ட
வள்ளலு மடந்தை தானும் வளநகர் மருளப் புக்கார்.

இதுவுமது

28 வில்லின தெல்லைக் கண்ணால் நோக்கிமெல் லடிகள் பாவி
நல்லருள் புரிந்து யிந்ர்க்கண் ணகைமுத லாய நாணி
யில்லவ ரெதிர்கொண் டீயி னெதிர்கொளுண்டியரு மாகி
நல்லற வமுத முண்டார் நடந்தனர் வீதி யூடே.

மன்னவனேவல் பெற்ற சண்டகருமன் இளைஞர்களைக் கண்டு கலங்குதல்

29 அண்டல ரெனினுங் கண்டா லன்புவைத் தஞ்சு நீரார்க்
கண்டனன் கண்டு சண்ட கருமனும் மனங்க லங்காப்
புண்டரீ கத்தின் கொம்பும் பொருவில்மன் மதனும் போன்று
கொண்டிளம் பருவ மென்கொல் குழைந்திவண் வந்த தென்றான்.

இளைஞரைப் பலியிடப் பிடித் தேகுதல்

30 எனமனத் தெண்ணி நெஞ்சத் திரங்கியும் மன்ன னேவல்
தனைநினைந் தவர்க டம்மைத் தன்னுழை யவரின் வவ்விச்
சினமலி தேவி கோயிற் றிசைமுக மடுத்துச் சென்றான்.
இனையது பட்ட தின்றென் றிளையரு மெண்ணி னாரே.

31 வன்சொல்வாய் மறவர் சூழ மதியமோர் மின்னொ டொன்றித்
தன்பரி வேடந் தன்னுள் தானனி வருவ தேபோல்
அன்பினா லையன் றங்கை யஞ்சுத லஞ்சி நெஞ்சில்
தன்கையான்முன்கைபற்றித் தானவட்கொண்டு செல்வான்

32நங்கை யஞ்சல் நெஞ்சி னமக்கிவ ணழிவொன் றில்லை
யிங்குநம் முடம்பிற் கேதமெய்துவ திவரி னெய்தின்
அங்கதற் கழுங்க லென்னை யதுநம தன்றென் றன்றோ
மங்கையா மதனை முன்னே மனத்தினில்விடுத்ததென்றான்

33 அஞ்சின மெனினு மெய்யே யடையபவந் தடையு மானால்
அஞ்சுத லதனி னென்னை பயனமக் கதுவு மன்றிந்
அஞ்சுதற் றுன்பந் தானே யல்லது மதனிற் சூழ்ந்த
நஞ்சன வினைக ணம்மை நாடொறு நலியு மென்றான்.

34 அல்லது மன்னை நின்னோ டியானுமுன் னனேக வாரந்
தொல்வினை துரப்ப வோடி விலங்கிடைச் சுழன்ற போழ்தின்
நல்லுயிந்ர் நமர்க டாமே நலிந்திட விளிந்த தெல்லாம்
மல்லன்மா தவனி னாமே மறித்துணர்ந் தனமு மன்றோ.

35 கறங்கென வினையி னோடிக் கதியொரு நான்கி னுள்ளும்
பிறந்தநாம் பெற்ற பெற்ற பிறவிகள் பேச லாகா
இறந்தன விறந்து போக வெய்துவ தெய்திப் பின்னும்
பிறந்திட விறந்த தெல்லா மிதுவுமவ் வியல்பிற் றேயாம்.

36 பிறந்தநம் பிறவிதோறும் பெறுமுடம் பவைகள் பேணாத்
துறந்தறம் புணரின் நம்மைத் தொடர்ந்தன வல்ல தோகாய்
சிறந்ததை யிதுவென் றெண்ணிச் செம்மையே செய்யத் தாமே
இறந்தன விறந்த காலத் தெண்ணிறந்தன களெல்லாம்.

(இதுமுதல் நான்கு கவிகளால் நான்கு கதிகளிலும் உயிர்களடையும் வரலாற்றைக் கூறுவார்)

நரககதி வரலாறு

37 முழமொரு மூன்றிற் றொட்டு மூரிவெஞ் சிலைக ளைஞ்ஞா
றெழுமுறை பெருகி மேன்மே லெய்திய வுருவ மெல்லாம்
அழலினுள் மூழ்கி யன்ன வருநவை நரகந் தம்முள்
உழைவிழி நம்மொ டொன்றி யொருவின வுணர லாமோ.

விலங்குகதி வரலாறு

38 அங்குலி யயங்கம் பாக மணுமுறை பெருகி மேன்மேல்
பொங்கிய வீரைஞ் ஞாறு புகைபெறு முடையு டம்பு
வெங்கனல் வினையின் மேனாள் விலங்கிடைப் புக்கு வீழ்ந்து
நங்களை வந்து கூடி நடந்தன வனந்த மன்றோ.

மனுஷ்யகதி வரலாறு?

39 ஓரினார் முழங்கை தன்மே லோரொரு பதேசமேறி
மூரிவெஞ் சிலைகண் மூவி ராயிர முற்ற வுற்ற (விட்ட
பாரின்மேல் மனிதர் யாக்கை பண்டுநாங் கொண்டு
வாரிவாய் மணலு மாற்றா வகையின வல்ல வோதான்.

தேவகதி வரலாறு

40 இருமுழ மாதி யாக வெய்திய வகையி னோங்கி
வருசிலை யிருபத் தைந்தின் வந்துறு மங்க மெல்லாந
திருமலி தவத்திற் சென்று தேவர்தமுலகிற் பெற்ற(றோ.
தொருவரா லுரைக்க லாமோ வுலந்தன வனந்தமன்

தேவ நரக யாக்கையின் விருப்பும் வெறுப்பும்

41 துன்பகா ரணமி தென்றே துடக்கறு கெனவுஞ் துஞ்சா
அன்புறா நரகர் யாக்கை யவைகளு மமரர் கற்பத்
தின்பக்காரணமி தென்றே யெம்முட னியல்க வென்றே
அன்புசெய் தனக டாமு மழியுநா ளழியு மன்றே.

42 வந்துடன் வணங்கும் வானோர் மணிபுனை மகுடகோடி
தந்திரு வடிக ளேந்துந் தமனிய பீட மாக
இந்திர விபவம் பெற்ற விமையவ ரிறைவ ரேனுந்
தந்திரு வுருவம் பொன்றத் தளர்ந்தன ரனந்த மன்றோ.

43 மக்களின் பிறவி யுள்ளும் மன்னர்தம் மன்ன ராகித்
திந்க்கெலா மடிப்ப டுத்துந் திகிரியஞ் செல்வ ரேனும்
அக்குலத் துடம்பு தோன்றி யன்றுதொட் டின்று காறும்
ஒக்கநின் றார்கள் வையத் தொருவரு மில்லை யன்றே.

44 ஆடைமுன் னுடீஇய திட்டோ ரந்துகி லசைத்த லொன்
மாடமுன் னதுவி டுத்தோர் வளமனை புதிதின் வாழ்தல் ங்றோ
நாடினெவ் வகையு மஃதே நமதிறப் பொடுபி றப்பும்
பாடுவ தினியென் நங்கை பரிவொழிந் திடுக வென்றான்.

அபயமதி தன் உள்ளக்கிடக்கையே வெளியிடல்

45 அண்ணனீ யருளிற் றெல்லா மருவருப் புடைய மெய்யின்
நண்ணிய நமதென் னுள்ளத் தவர்களுக் குறுதி நாடி
விண்ணின்மே லின்ப மல்லால் விழைபயன் வெறுத்துநின்ற
கண்ணனாய் நங்கட் கின்ன கட்டுரை யென்னை யென்றாள்.

இதுவுமது.

46 அருவினை விளையு ளாய அருந்துயர்ப் பிறவி தோறும்
வெருவிய மனத்து நம்மை வீடில விளைந்த வாறுந்
திருவுடை யடிக டந்த திருவறப் பயனுந் தேறி (டோ.)
வெருவிநாம் விடுத்த வாழ்க்கை விடுவதற் கஞ்ச லுண்

இதுவுமது

47 பெண்ணுயி ரௌபிய தாமே பெருந்திற லறிவும் பேராத்
திண்மையு முடைய வல்ல சிந்தையி னென்ப தெண்ணி
அண்ணனீ யருளிச் செய்தா யன்றிநல் லறத்திற்காட்சி
கண்ணிய மனத்த ரிம்மைக் காதலு முடைய ரோதான்.

48 இன்றிவ ணைய வென்க ணருளிய பொருளி தெல்லாம்
நன்றென நயந்து கொண்டே னடுக்கமு மடுத்த தில்லை
என்றெனக் கிறைவ னீயே யெனவிரு கையுங் கூப்பி
இன்றுயான் யாது செய்வ தருளுக தெருள வென்றாள்.

இறுதியில் நினைக்கவேண்டிய திதுவெனல்.

49 ஒன்றிய வுடம்பின் வேறாம் உயிரின துருவ முள்ளி
நன்றென நயந்து நங்கள் நல்லறப் பெருமை நாடி
வென்றவர் சரண மூழ்கி விடுதுநம் முடல மென்றான்
நன்றிது செய்கை யென்றே நங்கையும் நயந்த கொண்

இருவரும் உயிரின் இலக்கணம் உன்னுதல்.

50 அறிவொடா லோக முள்ளிட் டனந்தமா மியல்பிற் றாகி
அறிதலுக் கரிய தாகி யருவமா யமல மாகிக் (வேறா
குறுகிய தடற்றுள் வாள்போற் கொண்டிய லுடம்பின்
யிறுகிய வினையு மல்ல தெமதியல் பென்று நின்றார்.‘

இருவரும் மும்மணிகளை எண்ணி மகிழ்தல்

51 உறுதியைப் பெரிது மாக்கி யுலகினுக் கிறைமை நல்கிப்
பிறவிசெற் றரிய வீட்டின் பெருமையைத் தருதலானும்
அறிவினிற் றெளிந்த மாட்சி யரதனத் திரய மென்னும்
பெறுதலுக் கரிய செல்வம் பெற்றனம் பெரிதுமென்றார்.

சித்தர் வணக்கம்

52 ஈங்குநம் மிடர்க டீர்க்கு மியல்பினார் நினைது மேலிவ்
வோங்கிய வுலகத் தும்ப ரொளிசிகாமணியி னின்றார்
வீங்கிய கருமக் கேட்டின் விரிந்தவெண் குணத்த ராகித்
தீங்கெலா மகற்றி நின்ற சித்தரே செல்லல் தீர்ப்பாப.ந்

அருகர் வணக்கம்

53 பெருமலை யனைய காதிப் பெரும்பகை பெயர்த்துப்பெற்ற
திருமலி கடையி னான்மைத் திருவொடு திளைப்பரேனும்
உரிமையி னுயிர்கட் கெல்லா மொருதனி விளக்கமாகித்
திருமொழியருளுந் தீர்த்த கரர்களே துயர்க டீர்ப்பார்.

ஆசார்ந்யர் வணக்கம்

54 ஐவகை யொழுக்க மென்னு மருங்கல மொருங் கணிந்தார
மெய்வகை விளக்கஞ் சொல்லி நல்லற மிகவ ளிப்பார்
பவ்வியர் தம்மைத் தம்போற் பஞ்சநல் லொழுக்கம் பாரித்
தவ்விய மகற்றந் தொல்லா சிரியரெம் மல்ல றீர்ப்பார்.

உபாத்தியாயர் வணக்கம்

55 அங்க நூலாதி யாவு மரிறபத் தெரிந்து தீமைப்
பங்கவிழ் பங்க மாடிப் பரமநன் னெறிப யின்றிட்
டங்கபூ வாதி மெய்ந்நூ லமிழ்தகப் படுத்த டைந்த
நங்களுக் களிக்கு நீரார் நம்வினை கழுவு நீரார்.

சர்வசாது வணக்கம்

56 பேதுறு பிறவி போக்கும் பெருந்திரு வுருவுக் கேற்ற
கோதறு குணங்கள் பெய்த கொள்கல மனைய ராகிச்
சேதியின் நெறியின வேறு சிறந்தது சிந்தை செய்யாச்
சாதுவ ரன்றி யாரே சரண்நமக் குலகி னாவார்.

57 இனையன நினைவை யோரு மிளைஞரை விரைவிற் கொண்டு
தனைர சருளும் பெற்றிச் சண்டனச் சண்ட மாரி
முனைமுக வாயிற் பீட முன்னருய்த் திட்டு நிற்பக
கனைகழ லரச னையோ கையில்வா ளுருவி னானே.

இளைஞர் புன்முறுவல் செய்தல்

58 கொலைக்களங் குறுகி நின்றுங் குலுங்கலர் டம்மால்
இலக்கண மமைந்த மெய்ய ரிருவரு மியைந்து நிற்ப
நிலத்திறை மன்னன் வாழ்க நெடிதென வுரைமி னென்றார்.
மலக்கிலா மனத்தர் தம்வாய் வறியதோர் முறுவல் செய்தார்.

இளைஞர் மன்னனை வாழ்த்துதல்

59 மறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா
தறவியன் மனத்தை யாகி யாருயிர்க் கருள் பரப்பிச்
சிறையன பிறவி போக்குந் திருவற மருவிச் சென்று
நிறைபுக முலகங் காத்து நீடுவாழ்க கென்று நின்றார்.

மன்னவன் மனமாற்ற மடைதல்

60 நின்றவர் தம்மை நோக்கி நிலைதளர்ந் திட்டு மன்னன்(கொல்
மின்றிகழ் மேனி யார்கொல் விஞ்சையர் விண்ணுளார்
அன்றியில் வுருவம் மண்மே லவர்களுக் கரிய தென்றால்
நின்றவர் நிலைமை தானு நினைவினுக் கரிய தென்றான்

அச்சமின்மை, நகைத்தல் ஆகிய இவற்றின் காரணம் வினாவிய வேந்தனுக்கு இளைஞர் விடையிறுத்தல்

61 இடுக்கண்வந் துறவு மெண்ணா தெரிசுடர் விளக்கி னென் ங்கொல்
நடுக்கமொன் றின்றி நம்பா னகுபொருள் கூறு கென்ன
அடுக்குவ தடுக்கு மானா லஞ்சுதல் பயனின் றென்றே
நடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தௌபிவு சென்றாம்.

இதுவுமது

62 முன்னுயி ருருவிற் கேத முயன்றுசெய் பாவந் தன்னா
லின்னபல் பிறவி தோறு மிடும்பைக் டொடர்ந்து வந்தோம்
மன்னுயிர்க் கொலையி னாலிம் மன்னன்வாழ் கென்னு
என்னதாய் விளையு மென்றே நக்கன மெம்மு ளென்றான்.

அங்குக் குழுமியுள்ள நகரமாந்தர் வியத்தல்

63 கண்ணினுக் கினிய மேனி காளைதன் கமல வாயிற்
பண்ணினுக் கினிய சொல்லைப் படியவர் முடியக் கேட்டே
அண்ணலுக் கழகி தாண்மை யழகினுக் கமைந்த தேனும்
பெண்ணினுக் கரசி யாண்மை பேசுதற் கரிய தென்றார்.

மன்னனும் வியத்தல்

64 மன்னனு மதனைக் கேட்டே மனமகிழ்ந் தினிய னாகி
என்னைநும் பிறவி முன்ன ரிறந்தன பிறந்து நின்ற
மன்னிய குலனு மென்னை வளரிளம் பருவந் தன்னில்
என்னைநீ ரினைய ராகி வந்தது மியம்பு கென்றான்.

அபயருசியின் மறுமொழி

65 அருளுடை மனத்த ராகி யறம்புரிந் தவர்கட் கல்லால்
மருளுடை மறவ ருக்கெம் வாய்மொழி மனத்திற்சென்று
பொருளியல் பாகி நில்லா புரவல கருதிற் றுண்டேல்
அருளியல் செய்து செல்க ஆகுவ தாக வென்றான்.

வேந்தன், கருணைக்குப் பாத்திரனாகி மீண்டும் வினவல்

66 அன்னண மண்ணல் கூற வருளுடை மனத்த னாகி
மன்னவன் றன்கை வாளு மனத்திடை மறனு மாற்றி
என்னினி யிறைவனீயே யெனக்கென விறைஞ்சிநின்று
பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவு மென்றான்.

அபயருசியின் அறவுரை

67 மின்னொடு தொடர்ந்து மேகம் மேதினிக் கேதம் நீங்கப்
பொன்வரை முன்னர் நின்று புயல்பொழிந் திடுவதேபோல்
அன்னமென் னடையி னாளு மருகணைந் துருகும் வண்ண
மன்னவ குமரன் மன்னற் கறமழை பொழிய லுற்றான்

இதுமுதல் மூன்றுகவிகளால் இவ்வற வுரையின் பயன் கூறுகின்றார்.

68 எவ்வள விதனைக் கேட்பா ரிருவினை கழுவு நீரார்
அவ்வள வவருக் கூற்றுச் செறித்துட னுதிர்ப்பை யாக்கும்
மெய்வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டையெய்துஞ்
செவ்விய ராகச் செய்து சிறப்பினை நிறுத்தும் வேந்தே.

69 மலமலி குரம்பை யின்கண் மனத்தெழு விகற்பை மாற்றும்
புலமவி போகத் தின்கண் ணாசையை பொன்று விக்கும்
கொலைமலி கொடுமை தன்னைக் குறைத்திடு மனத்திற் கோ
சிலைமலி நுதலி னார்தங் காதலிற் றீமை செப்பும்.

70 புழுப் பிண்ட மாகி புறஞ் செய்யுந் தூய்மை
விழுப் பொருளை வீறழிப்பதாகி - அழுக் கொழுகும்
ஒன்பது வாயிற்றா மூன்குரம்பை மற்றிதனா
வின்பமதா மென்னா திழித் துவர்மின்‘

71 பிறந்தவர் முயற்சி யாலே பெறுபய னடைவ ரல்லா
லிறந்தவர் பிறந்த தில்லை யிருவினை தானு மில்லென
றறைந்தவ ரறிவி லாமை யதுவிடுத் தறநெ றிக்கட்
சிறந்தன முயலப் பண்ணுஞ் செப்புமிப் பொருண்மை

இளைஞர் தம் பழம் பிறப்பு முதலியன அறிந்த வரலாறு கூறல்

72 அறப்பொருள் விளைக்குங் காட்சி யருந்தவ ரருளிற் றன்றிப்
பிறப்புணர்ந் ததனின் யாமே பெயர்த்துணர்ந் திடவும் பட்ட
திறப்புவ மிதன்கட் டேற்ற மினிதுவைத் திடுமி னென்றான்
உறப்பணிந் தெவ முள்ளத் துவந்தனர் கேட்க லுற்றார்.

 
மேலும் யசோதர காவியம் »
இரண்டாவது சருக்கம்- உஞ்சயினியின் சிறப்பு 73 வளவயல் வாரியின் மலிந்த பல்பதிஅளவறு சனபத மவந்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar